பிரபஞ்ச மூகூர்த்தங்கள்
Divider பிரபஞ்சத்தின் முகூர்த்தங்கள் குறித்த ஆய்வுக்கு அகிலத்திரட்டு அம்மானை ஆகமம் பெரிதும் உதவுகிறது. இந்த நூல், காலப் பிரிவுகளை பரான்மா காலம், ஜீவான்மா காலம், மற்றும் பூமியில் பரான்மாக் காலம் எனற முப் பெரும் பிரிவுகளாகவும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் விளங்குகிறது.
பரான்மாக் காலம் - அமிர்தப் பிரபஞ்சக் காலம்
பரபிரம்மம் – மகா சுத்தை மயையாக குவிந்து, பரபரமாக குவிந்து, அவை மூன்றும் ஒன்றுபட்ட ஆளுமையின் கீழ் தோன்றிய பரத்தில் இருந்து பிரபஞ்சம் தோன்றியது. பரத்தோடு அநேகமாகி தேன்றியவை எல்லாம் அமிர்த காரணிகளாய் விளங்கியதால் அது அமிர்தப்பிரபஞ்சமாக விளங்கியது. இதுவே பரான்மாக்கள் அதன் அமிர்த மேனிகளும் தோன்றியக்காலமாக விளங்கியது. இவை தமது அமசங்களைப் பிரபஞ்ச அங்கமாக்கியும் அவ்வங்க உள் நிலையை தமது மேனியாக்கியும் அகப்புறக் காலச் சுற்றில் பிரபஞ்ச அம்ச பூரணமும் – மேனி பூரணமும் அடைந்தன. அவை பிரபஞ்ச அம்சமேனி – தப மேனி – அமிர்த மேனி என்றப் பேதங்கள் ஒருங்கிணைந்தவையாக பரான்மாக்களான பரத்தாரின் அமிர்தச் சக்தி நிலைகள் உள்ளன. ஆதியில் இருந்து பிரபஞ்ச தோன்றும் நிலைகளைத் தாங்கித் தொடரச் செய்த முழுமையான தண்டுவடத்தை தண்டரளம் என்றும், அதன் பெரும் சுழிகளை தளங்கள் என்றும் ஆகமங்கள் சுட்டுகின்றன. அந்த தளங்கள் பலக்காலக் கண பேதம் உடையதாகும். இக்கணப்பேதம் மேல் இருந்து இறங்கு வரிசையில் அடைந்துள்ளப் பேத்தில், மத்திய காலக்கணம் பூலோக அடைந்துள்ளது. கொல்லம் ஆண்டு 1008 – மாசியில் பூலோகத்தில் இருந்து மேல் நோக்கிய ஏறு வரியைக் காலக்கணம் உருவாகியது. பரத்தார்கள் அமிர்த வாழ்வில் பூரணமாக இருந்த காலம் பரான்மாக் காலம் ஆகும். அப்போது பூலோகம் உயிர்கள் தோன்றாத காலமாக (குறைவுள்ளதாக) விளங்கியது. சாகா வாழ்வாதாரத்தை வழங்கிய அமிர்தப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய காட்சிகள், பிரபஞ்சத்தாரால் அறிய முடியாத அறிவாகவே இருந்தது. அதையும் அறிய உதவும் அறிவு சுதந்திரமாக, பூலோகத்தின் பரான்மாக் கால பலன் தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட சீவான்மாக்காலமே பிரபஞ்சம் குறித்து நாம் அறிந்துள்ள வேத, சாஸ்திர, புராணங்களாக விளங்குகின்றன. அவை உலக ஆகமங்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. பூமியில் சீவான்மா காலம் மற்றும் பூமியில் பரான்மாக் காலம் எனப் பெரும் பிரிவுகள் விவரிக்கப்படுகின்றன. இதில், பரான்மாக்காலக் காட்சிகள் உயிர்கள் தவத்தால் தேடும் அளவில் ஆழமான மறைவினை அடைந்துள்ளன. ஆனால், அக்காலத்தையும் காணும் கண்ணாடியாக அய்யாவின் ஆகமங்கள் விளங்குகின்றன.
சீவான்மாக்காலம் - மாயா பிரபஞ்சக்காலம்
உலகில் உயிரம்சங்கள் தோன்றியது முதல் இன்றுவரை உள்ள காலம், ஏழு யுகங்கள் என்று அகிலம் குறிப்பிடுகிறது. இந்தக் காலச் சுழற்சியை குறோணி காலம், ஈசன் ஆதி வேள்விக் காலம், பசிசக்தி காலம் – பசியுருகாலம் என்ற சதுரமான (நான்கு வகையான) முகாந்திரங்களில் விவரிக்கத்தக்க விசாலமான தன்மையுடையதாகும். இந்த நான்கிற்கும் பொதுவாக ஆதி வேள்விக் காலம் என்ற தலைப்பில் விவரிப்பது சிறப்பாகும்.
ஆதி வேள்விக் காலம் – உயிரணுவின் சடாச் சரக்காலம்
பிரபஞ்சத்தில் ஆதி வேள்வி நிகழ்ந்த காலத்தை நீடிய யுகம் என்று அகிலம் கூறுகிறது. இது ஆறு யுக காலங்களுக்குத் தலையானதும், மாயாப் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலமுமாகும். இது பிரபஞ்சத்தாரின் சாகும் வாழ்வுக் காலமாக விளங்கியது. இக்காலத்தில் பூமியின் உயிர்களுக்குப் பொதுவான உயிரணுவுக்குரியசடாச்சரம் உருவாகியது. அது இன்றைய மானுட மேனியாகவும் அதன் கீழடங்கிய ஐந்தறிவு ஜீவிகளாகவும் தேர்ந்துள்ளது. அதற்குள் ஆறு காலப் பரிணமங்களின் சக்திக்கட்டுக்கள் அடங்கியுள்ளன. அவற்றை மாயா பிரபஞ்ச புராணச் சாஸ்திர வேத விவரிப்பாக அகிலம் கூறுகின்றது. அதனை பக்தி – முக்தி வழியில் சீவ சித்தியை நேக்கி வாழும் தபசிகள் பிராண ஏற்றத்தின் வாயிலாக முப்பிரபஞ்ச நிலைகளையும் உணர்ந்து நிறைகின்றனர். நமது மேனிப் பிரிவாகியுள்ள உயிர் அணுவின் சடாச்சரம் அதி பிரபஞ்சம் – மாயா பிரபஞ்ச கால விளைவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதன் முக்கால இருப்பினை அறியப் பிராணன் உதவுகின்றது. பிராணனைப் பற்றி ஆகமத்தின் அறிவைக் கொண்டு மேனி அறிவையும் இணைத்து அண்டப்பிண்டத்தின் அறிவை அடைவதற்கு உதவுகின்றன. அவற்றை அறிய பிரபஞ்ச கால முகூர்த்தங்கள் உதவுகின்றன. அம்முகூர்தங்களை உணருவதற்கு மௌன ஆழ்நிலைகள் உதவுகின்றன.
மௌன அலங்காரம்
பேச்சைக் குறைத்து செயலைப்பெருக்குவோர்கள் மூன்று நீதம் சார்ந்த உலகியல் கடமைகளை சுறுக்காக நிறைவேற்றி தபத்தேடலை அடைகின்றனர். அவர்கள் மௌனம் என்ற யோகத்தின் அலங்காரம் அடைவதில் தமது உள்க்கடந்து பெறும் மேனி அறிவால் அதில் லயமாகும் பிரபஞ்ச அங்கங்களை பரிசிக்கின்றனர். புலன்களின் மௌனச் சித்திகளுக்கு மேலாக தபசிகள் செய்யும் வாசி யோகங்கள் மாயா பிரபஞ்சம் – ஆதி பிரபஞ்சம் இவற்றின் முக்காலம் குறித்து அறிய உதவுகின்றன. அவர்கள் முதலில் உணர பெறும் கால சுவடுகளை அகிலம் கூறுகின்றது. இவை பிராணத் திரிபுகளாக விளங்கும் முகூர்த்தங்கள் அறியப்படுகின்றன.
01. மௌன காலம்

ஈசனின் ஆதி வேள்விக் காலம் மௌனகரமானதாக விளங்கியது. அந்த மௌன கோலத்தில் அவர் வளர்த்த வேள்வியில் இருந்து பிறந்த குறோணியைக் கண்ட சபையோர் அனைவரும் மௌன இறுக்கம் அடைந்தனர். இந்த முகூர்த்தம் மாயா பிரபஞ்சத்தின் ஆதிய நிலையை அறிய உதவுகின்றது.

02. குறோணி தூங்கிய காலம்

குறோணியின் கயிலை லோக மேனி கரைந்த அணுவுருவாக பூமியில் விழுந்து, பூலோக அண்டம் நிறைந்த தூலமேனி எடுத்த காலம் அவன் தூங்கிய காலம் ஆகும். நித்திரை பிறந்தது.

03. பூமி நீர் இழந்த காலம்

தூங்கி விழித்த குறோணி கடல் நீரை எல்லாம் விழுங்கினான். அது பூமி நீராதாரம் இழந்த காலமாக விளங்கியது.

04. ஆதி பயம் சூழ்ந்த காலம்

குறோணி கடல் நீரை விழுங்கியும் அவனின் கடைவாய் நனையாததால், அவனிடம் ஏற்பட்ட தணியாமையின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட பிரபஞ்சத்தார் முதலில் பயம் என்ற எதிர் உணர்வை அனுபவித்தனர். இவ்வாறு குறோணியின் ஆதிக்கம் தொடங்கியது.

05. குறோணி ஆதிக்க ஆரம்ப காலம்

கடல் நீரை எல்லாம் விழுங்கிய குறோணி, லோகங்களின் சிற்றண்டங்களை விழுங்கத் தொடங்கினான். அதன் தாக்கங்கள் நிறைந்ததாக அவனின் ஆதிக்க ஆரம்ப காலம் விளங்கியது. இதிலிருந்து ஆதி போதனைக் காலத்தின் சுவடு தொடங்கியது.

06. ஆதி போதனைக் காலம்

குறோணி பிரபஞ்சத்தை விழுங்கத் தொடங்கியதும் பஞ்ச பிரம்ம அங்கங்களான லோகங்களில் பஞ்சபூத சடாச்சரக் குலைவு ஏற்பட்டது. அதன் அதிகாரக் கர்த்தரான “பூதகுரு முனிவன்” குறோணியை அணுகி நல்ல புத்தியைப் போதித்தார். அதை மீறியதால் ஆதி அறிவீன காலம் தொடங்கியது.

07. ஆதி அறிவீன காலம்

ஆதி ஜீவியின் அறிவீனம் ஆரம்பித்த நிகழ்வைப் பார்த்து பிரபஞ்சத்தார் பய உணர்வில் ஏற்றம் அடைந்தனர். எந்த சுதாகரிப்பும் இல்லாமல் அந்த நிலை நீடித்தது. குறோணி கயிலையை விழுங்க ஆர்ப்பரித்தபோது அனைவர் சிவனை சரணடைந்தனர். அது குறோணியின் ஆதிக்க மத்தியக் காலத்துக்குக் காரணமானது.

08. குறோணி ஆதிக்க மத்தியக் காலம்

பிரபஞ்சத்தின் மத்திய லோகமான திருக் கயிலையை குறோணி விழுங்கியது அவனின் ஆதிக்க மத்திய காலமாகும். அப்போது சிவத்தின் பரத்தார்கள் அனைவரும் ஈசனிடம் முழுமையாகச் சரணடைந்தனர். இதிலிருந்து ஆதி சமாதி காலம் தொடங்கியது.

09. ஆதி சமாதி காலம்

ஏழு யுகமாக உயிர்கள் சமாதி நிலை அடைவதற்கான இருப்புத் தானமும் காலச் சுற்றும் இக்காலத்தில் உருவாயின. இது தவலோகப் படிப்பின் மத்திய அடிப்படையாக விளங்குகின்றது. இது தற்காப்பு சுதாகரிப்பு உருவாக வழிவகுத்தது.

10. ஆதி சுதாகரிப்பு காலம்

ஆதியில் நாராயண–சிவ சுதாகரிப்பு காலம் தோன்றியது. முதலில் சுதாகரிப்பிற்கான விழிப்புணர்வு அரி நாராயணருக்கு ஏற்பட்டது. அது அவரை குறோணியின் வாயில் அகப்படாமல் தப்பிக்க உதவியது.

11. அரி நாராயண சுதாகரிப்பு காலம்

அரி நாராயணரின் ஆதி சுதாகரிப்பு காலம் பல பிரிவு காலங்களுக்கு அடிப்படையாகும். அவற்றில் முக்கியமானவை ஆதி மாயா ஞான காலம், ஆதி கலை ஞான காலம் ஆகியவை. குறோணி கயிலையை விழுங்கியதில் ஈசன் முதல் பிரபஞ்சத்தார் அவனுள் முடங்கினர். ஆனால் தப்பித்த நாராயணர் குறோணியின் வீரிய ஆர்ப்பரிப்புகளுக்கு அடங்காமல் தன்னிலையை தற்காத்துக் கொண்டு பிரபஞ்ச சுதாகரிப்பு சக்தியின் சஞ்சார உரிமையை அடைந்தார். இது கலியுகம் வரை நீடிக்கும். பிறகு சிவத்தின் சுதாகரிப்பு காலம் ஏற்பட்டது. அதற்கிடையில் மாயா ஞான காலம் விளங்குகின்றது.

12. ஆதி மாயா ஞான காலம்

மாய ஞானம் என்பது மாயப் பிரபஞ்சத்தின் அறிவுச் சுழிகள் அடங்கியது. இதனை அலங்கார அறிவு என்று அகிலம் கூறுகிறது. இந்த ஞான சக்திப் பிரிவுகளை இயக்கும் அதிகாரத்தவரை அகிலம் ‘ஞான முனி’ என்கிறது. இந்த ஞானத்தின் சக்திச் சொரூபங்கள் கலைஞான காலத்தில் அடங்குகின்றன.

13. ஆதி கலை ஞான காலம்

பிரபஞ்சத்தாருக்கு சுதாகரிப்பை அளிக்கும் மூலமாக கலை–ஞான சக்திப் பிரிவுகள் உள்ளன. சகலக் கலைச் சுதாகரிப்பு சேவைக்கும் அரி நாராயணரின் உல்லாச உபாயங்கள் அடங்கியது கலைஞான காலம். இதற்கு மேலான நிலையில் சிவத்தின் சுதாகரிப்பு காலம் விளங்குகின்றது.

14. சிவ சுதாகரிப்புக் காலம்

சிவத்தின் ஆதி சுதாகரிப்பு காலம் பல பிரிவு காலங்களுக்கான அடிப்படை. அதில் முக்கியமானவை ஆதி சன்னியாச காலம், ஆதி மாயா தவலோக உற்பத்திக் காலம். பிரபஞ்சத்தில் ஏக சீவ மூலமான சிவம் பிரபஞ்சத்தை ஆளும் மத்திய சொரூபம். குறோணி ஈசனை விழுங்கியபோது, மேலான அம்சங்களைக் கொண்ட சிவம் ஆதி சன்னியாசத் தவகோலத்தை எடுத்தார். அதிலிருந்து ஆதி சன்னியாச காலம் ஏற்பட்டது.

15. ஆதி சன்னியாச காலம்

சன்னியாச வாழ்வுக்குரிய சக்திச் சொரூபங்கள் சிவத்தின் மேலான உபாய பலன்களை சேர்க்கும் காலமாகும். இந்தக் காலத்திற்கு அமைவாக உருவான லோகங்களை அகிலம் தவலோகம் என்கிறது. இந்த சக்திகள் தவலோக உற்பத்திக்குக் காரணமானது.

16. ஆதி மாயா தவலோக உற்பத்திக் காலம்

சாம்பசதாசிவத்தின் அம்சமே தவலோகங்கள். இவை மாயாப் பிரபஞ்சத்தின் அடிப்படை லோகங்கள். சாம்பசதாசிவத்தின் மேனி அம்சத்திலிருந்து தோன்றி பரவி விரிந்த லோகங்களாகும். இத்தவலோகங்களைப் பாதுகாக்க அரி நாராயணரின் ஆதி மாயா தவக் காலம் விளங்குகிறது.

17. ஆதி மாயா தவக் காலம்

குறோணியின் ஆதிக்கத்துக்கு அடங்காமல், நாராயணர் பூமியில் கடல் பள்ளத்தில் இருந்து செய்த தவமும், அதன் பலன் கூடும் காலமும் ஆதி மாயாத் தவக் காலம். பூலோக உயிர்களின் பிறப்பு–வாழ்வு–இறப்பு நிலைகளைத் தீர்மானிக்கும் எண்ணற்ற பேதங்கள் இக்காலத்தில் தோன்றின. இது சிவத்தின் ஆதி சன்னியாசி தவக் காலத்துடன் பரிவர்த்தனையாக விளங்கியது.

18. ஆதி மாயா தவப் பரிவர்த்தனைக் காலம்

அரி நாராயணர் பூமியில் இருந்து சிவத்தை நினைத்து தவஞ்செய்தார். குறோணியின் ஆதிக்கம் உச்சத்தை எட்டியபோது, சாம்ப சதாசிவம் சன்னியாசியாக வந்து நாராயணருக்குத் தரிசனம் அளித்தார். இரு மூர்த்திகளின் ஒருங்கு தவ பரிவர்த்தனையிலிருந்து ஆதி மாயாத் துடிக் காலம் (ஆதி சங்கர காலம்) தோன்றியது.

19. ஆதி மாயாத் துடிக் காலம்

அடுக்கடுக்கான சக்தி துடிப்புகள் மூலம் உருவான காலம் ஆதி துடிக் காலம். உயிர்களின் நாடித் துடிப்பாக நாம் உணரும் துடிப்பின் ஆதிகாலம் இதுவே. நாராயணரின் சுறோணித மாயன் அவதாரத்தில் இருந்து ஏற்பட்ட இந்த துடிசக்தி எதிலும் ஊடுருவும், பாயும், குலைக்கும் சங்காரத் திறன் கொண்டது. இக்காலத்தின் ஆதிக்கம் சுறோணித மாயன் காலத்தில் அடங்கியது.

20. சுறோணித மாயன் காலம்

சுறோணித மாயன் — நாராயணரின் அவதாரங்களில் வித்தாக விளங்கி, அரக்கனைத் தூளாக்கும் சங்கார சக்தியுடனும், பிரபஞ்சத்தைக் காக்கும் சக்தியுடனும் இருந்தான். ஆதி மகா அரக்கனை ஆறு துண்டுகளாக்கி அழித்த காலமும் இது. அவரின் துடிசக்தியிலிருந்தே இருவினை கலந்த காலமும், அதற்கான மையமான ஆதி மகரப் பிரணவமும் தோன்றின. அது மாயா மகரப் பிரணவமாக உலகில் இலங்கியது.

21. ஆதி முகூர்த்தக் காலம்

குறோணியால் நீராதாரம் இழந்த பூமி அதை மீண்டும் பெற்றுக்கொண்டது. குறோணி ஆறு துண்டங்களாக பூமியில் கிடந்தான். மூர்த்தியரும் தேவ ரிஷிகளும் செய்த ஆதி முகூர்த்தச் சேவை, குறோணியின் அந்த ஆறு துண்டங்களை பூமியில் புதைத்த முதல் ஈமச் சடங்காக அமைந்தது. இத்துண்டங்களின் பிறப்பு – வாழ்வு – முடிவு ஆகியவற்றைக் கணித்த பொதுக் காலமாக ஆதி முகூர்த்தம் விளங்கியது. இதில் முதல் துண்டத்திலிருந்து உயிர் அணுவின் முதல் அடுக்கின் இரு திரிபுகள் சித்தியடைந்தன.

22. உயிர் அணுவின் ஆதி தளக் காலம்

பூமியின் உயிர் அணுத் தளம் ஏழு அடுக்குகளில் சித்தி பூரணத்தைப் பெற்றுள்ளது. அது விதை–மரம்–பூ–காய்–கனி–விதை என்ற பரிணாமச் சுழலில் தோன்றி வாழ்ந்த சக்தியின் சுவடுகளாகும். உயிர்களின் ஏழு யுகப் பரிணாமமும் உடற்கூறு ஏழு ஆதாரத் தளங்களின் சக்தி பூரணம் என்றும் சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. உயிர் அணுவின் முதல் தளத்திற்குப் புறம்பான எதிர் தள உயிர்களின் காலம் “குண்டோம காலி காலம்” ஆகும்.

23. குண்டோம காலி காலம்

பூலோக உயிரினங்களின் அடிப்படை இயல்புகள் சிதையும் காலமாக இது விளங்கியது. பஞ்சபூத அளவில் தோன்றிய முதல் உயிரினம் இனப்பெருக்க சக்தியற்றதாக இருந்தது. இது பலி (மரண) காலத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

24. பலி காலம்

தன் இனத்தையே புசித்து வாழும் சக்திச் சித்தியுடையது பலி காலம். 4000 முழம் உயரம் கொண்ட குண்டோம சாலி மற்றும் அதற்கு இணையான நீரியல்–நில உயிரினங்கள் தோன்றி அவற்றின் வாழ்வு குண்டோம சாலிக்கே இரையாகி முடிந்தது. இதன் தாக்கம் நாத அபாயக் காலத்துக்கு வழிவகுத்தது.

25. நாத அபாய காலம்

யுக உயிர்களின் கூட்டுச் சக்தி தேர்ந்த குண்டோம சாலி அலறியதில், பிரபஞ்சத்தின் பிரணவத் தன்மைக்கு உள்ளுடைவு ஏற்பட்டு அதிர்வுகள் பெருகின. இதுவே ஓணி காலத்திற்கு அடித்தளமானது.

26. ஓணி காலம்

நாத அபாயத்திலிருந்து தற்காப்படைய பிரபஞ்சத்தார் வாயுத் தோணியை உருவாக்கி அதில் பதுங்கியிருந்தனர். இந்த தோணி பிரபஞ்ச நகல் போல அமைந்தது. அபாய நாதத்தை அடக்கிய சக்தி வடிவமே காவாலி மாயன் காலமாக விளங்கியது. இது உயிர் அணுவின் முதல் தள எதிர்நிலை உயிர்களின் தொடக்கமாக ஆனது.

27. காவாலி மாயன் காலம்

குண்டோம சாலியின் அபயக்கர அலறலால் பிரபஞ்சம் சிறிதாகும் அபாயம் ஏற்பட்டது. இதை அடக்குவதற்காக காவாலி மாயன் தோன்றிய காலம் இது. பிரபஞ்சப் பாதுகாப்புக்காக நகல் தோணியின் உருவாக்கத்தையும் பரத்தாரின் பாதுகாப்பையும் ஏற்படுத்திய சங்கார–தூண்டல் சக்தியாக இது விளங்குகிறது. கன்னிக் கடலில் தோன்றிய சங்கார சக்தி, இரண்டாம் தள உடற்கூறு உயிர்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

28. உயிர் அணுவின் இரண்டாம் தளக் காலம்

குறோணியின் இரண்டாவது அம்சப் பிரிவில் மும்மூர்த்தியர் கயிலையில் செய்த திருமுகூர்த்த விளைவால் தில்லை மல்லாலன் காலம் உருவானது. இக்காலத்தில் சுருதி காலம், ஆதி ராஜ்யக் காலம், ஆதி உயிர் பகைக் காலம், மந்திரபுரக் கணைக் காலம், பங்கையக் கண் மாயன் காலம் ஆகிய பிரிவுகள் தோன்றின.

29. தில்லை மல்லாலன் காலம்

வரம் யாசித்து வாழ்ந்த தலைவன் திலை மல்லாலன்; அவனுக்குச் சமமானவன் மல்லோசி வாகனன். அவர்களின் உடற்கூறிலிருந்து செதில் வழி இனப்பெருக்கம் தோன்றியது. இவர்கள் தவமிருந்த சுருதி முனிவரை கடலில் தூக்கி எறிந்தனர். அந்த முனிவரின் அம்சத்தில் பூமியில் சுருதி காலம் உருவாயின.

30. சுருதி காலம்

நாத பிரம்மத்துக்கு நிகரான சுருதி முனிவரின் தவ சக்தியிலிருந்து ஒலி சூத்திரம் பூமியை எட்டியது. இயல்–இசை–நாடகம் என சிவ ராஜ்ய கட்டமைப்பின் அடிக்கோலமாக இக்காலம் விளங்கியது.

31. ஆதி ராஜ்யக் காலம்

செதில் வழி பெருகும் உயிர்களை உருவேற்றம் செய்து வாழ வைக்கவும், அச்செதில் சூரப் படைகளுக்கு பயிர் செய்து, அதன் விளைச்சல்களைக் கொண்டு உலகில் வாழ வைக்கும் தேவ ரிஷிகளின் சேவையால் ஆதி சிவராஜ்யம் உருவானது. இந்த ராஜ்யம் பின்னர் ஆதி உயிர் பகை காரணமாக வடிவு இழந்தது.

32. ஆதி உயிர் பகைக் காலம்

பிரபஞ்ச உயிர்களுக்கு இடையேயான பகை உணர்வு முதலில் இரண்டு அரக்கர்களுக்குள் உருவானது. இதனால் பரத்தாரால் ஸ்தாபிக்கப்பட்ட சிவராஜ்யம் அழியும் அபாயம் தோன்றியது. அது பரத்தாருக்கு ஏற்பட்ட முதல் உலகத் துன்பமாகும். இந்த துன்பத்தைப் போக்கும் திருமுறையாக பங்கையக் கண் மாயன் காலம் தோன்றியது.

33. பங்கையக் கண் மாயன் காலம்

உலகின் இருபால் உயிரியல் அமைப்பின் முதல் உருவாக்கம் பங்கையக் கண் மாயன் காலத்தில் தோன்றியது. இது பரத்தாருக்கு ஏற்பட்ட துயரத்தை நிவர்த்திப்பதற்காக சுருதி முனிவரின் திரிந்த பிறவி சக்திகள் அமைந்த மந்திரபுரக் கணையின் பிரயோகம் மூலமாக உருவானது.

34. ஆதி அஸ்திர சக்திக் காலம்

பரத்தாரைக் காக்கவும், தீய அரக்கர்களை அழிக்கவும் பங்கையக் கண் மாயன் ஏவிய அஸ்திர சக்திகள் அக்கினி வடிவில் செயல்பட்டு, சங்காரக் கால விளைவுகளை உருவாக்கின. இதனால் பூலோக உயிர்களின் அணுவுரு இருபால் பேதம் அடைந்தன. இது உயிர் அணுவின் மூன்றாம் தளக் காலத்துக்கு அடிப்படை ஆனது.

35. உயிர் அணுவின் மூன்றாம் தளக்காலம்

குறோணியின் மூன்றாவது அம்சப் பிரிவில் மூர்த்தியர் திருக் கயிலையில் செய்த முகூர்த்த விளைவால் சூரபர்ப்பன், சிங்கமுகன் என்ற அரக்கர்கள் தோன்றினர். உதிர வழிச் சந்ததியைப் பெருக்கவல்ல “திரள்” உயிர்களின் உருவாக்கமும் மேற்காலத்தில் நடந்தது.

36. திரள் உயிர்க்காலம்

உயிர் அணு இரு கூறுகளாகப் பிளந்ததும், அந்த இருபாலினரின் ஒருங்கிணைவால் புதிய உயிர்கள் உருவாகும் காலம் திரள் உயிர்க்காலம். இந்த உயிர்களை ஆளும் அரசனாக சூரபர்ப்பன் இருந்து வந்தான்.

37. சூரபர்ப்பன் காலம்

திரள் அரக்க உயிர்களின் தலைவராகிய சூரபர்ப்பன் ஈசனிடமிருந்து வரம் பெற தாபித்ததால் ஆதி அரக்கத் தவக்காலம் உருவானது.

38. ஆதி அரக்கத் தவகாலம்

ஓமக் குண்டம் அமைத்து சூரபர்ப்பன் கடும் தவம் செய்தான். ஈசன் வராததைக் காரணமாகக் கொண்டு ஓமக் குண்டத்தில் தன்னைத் தானே எரித்துக் கொண்டான். இது ஆதி பாசப்பற்று காலம் உருவாகும் காரணமாக இருந்தது.

39. ஆதி பாசப்பற்றுக் காலம்

சூரபர்ப்பன் உயிரிழந்ததும், அவனுடைய தம்பி வாழ விரும்பாமல் தனது ஆயிரம் தலைகளை ஒவ்வொன்றாக கிழித்து ஓமக் குண்டத்தில் அர்ப்பணித்தான். உயிர்களின் பாச உந்துதலிலிருந்து வேத பலிக் காலம் தோன்றியது.

40. வேத பலி காலம்

சூரபர்ப்பனின் கோர தவத்தைக் கண்டு ஈசன் இரங்கி அவனை உயிர்த்தெழுப்பி கயிலை லோகத்தையும் அழிக்க முடியாத வரங்களையும் வழங்கினார். இதனால் பிரபஞ்ச ஜீவதானமான கயிலையை ஈசன் இழந்த அவலத்தில் இருந்து வேத பலி காலம் தோன்றியது. அரக்க அறிவீனத்தை வெல்லும் ஞானத்துடன் கந்தமாயன் காலம் தொடர்ந்து உருவானது.

41. கந்தமாயன் காலம்

ஐந்து முகமுடைய மூர்த்தியராலும் வெல்ல முடியாத அரக்கனை அழிக்க உமையவள் சாம்பசதாசிவத்தை நோக்கிச் செய்த தவ பலனாக ஆறுமுகப் பெருமான் காலம் தோன்றியது. இக்காலம், மூர்த்தியர்–தேவியர்–தவசிகள் இருகூறு சஞ்சாரத்துக்குரிய லிங்கப் பிறவிக்கான சூத்திரப் பிரயோகம் கூடியதாக இருந்தது. இதனால் பிரபஞ்ச சக்திகள் அதர்மச் சங்காரத்தில் பங்கேற்கும் இயற்கை விதி தோன்றியது. அதன் பின்னர் ஆதி போர்க் காலம் உருவானது.

42. ஆதி போர்க் காலம்

பிரபஞ்சத்தின் முதல் போராக கயிலையை அபகரித்து 1008 அண்டங்களை ஆட்சி செய்த சூரபர்ப்பனின் வீரத்தை அடக்க அரக்க எதிர்ப்பு உருவானது. திருமால் ஆறுமுகப் பெருமான், ஈசன் நந்தீசர், உமையவள் சக்திவேல், அஷ்ட பாலர்கள் திசை சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்து போரண்டம் செய்தனர். கந்த ஆயன் கூறிய ஞான உபதேசத்தை மீறி நடத்திய சூரபர்ப்பனின் மறுப்பால் அவன் மரணத்திற்குப் பின் பிறவித் திரிபு காலம் தோன்றியது.

43. பிறவித் திரிபுக் காலம்

அறிவீனத்தின் அளவுக்கேற்ப உயிர்களுக்கு பல பிறவிகள் ஏற்படும் விதி தோன்றியது. இது பிறவிப் பிணி என அழைக்கப்படுகின்றது. கலியுக உயிரில் ஒரு தேவ உயிர் லட்சப் பிரிவு அம்சப் பிறவி உடையதாகும். இதனால் உயிர்களின் ஆயுள் சிதைவுக் காலம் உருவானது.

44. ஆயுள்ச் சிதைவுக் காலம்

ஒரு உயிர் புசிக்கும் காலம் – ஒரு உயிர் வாழும் காலம் – ஒரு உயிர் ஆண்ட காலம் என மூன்று யுக உயிர் பிறவி கூறுகள் திரிந்து ஆயுள் சிதைவுக் காலம் உருவானது. இதிலிருந்து இரணியனின் பிறவி தொடங்கியது.

45. இரணியன் காலம்

பூலோக உயிர் இறைவனாக அமையும் முயற்சியில் இரணியன் பல அதர்ம செயல்களைச் செய்தான். இதனால் பிரபஞ்சத்தார் பக்திக்கான இடையூறு உருவாகியது. இவ்விடையூறை அகற்ற பக்திக் காலம் தோன்றியது.

46. பக்திக் காலம்

பரமானந்தத்தை அளிக்கும் பக்தி உயிர்களை ஊக்குவிக்கும் மங்கள சக்தி. பக்தியைத் தடுக்கும் அறிவீனத்தைச் சீர்செய்ய வேகமான நரசிம்மரின் காலம் தோன்றியது.

47. நரசிம்மர் காலம்

நொடிக்குள் ஆடும் வேகத்தில் இரணியனைத் தண்டித்து பிரகலாதனின் பக்தியை நிறைவேற்றிய காலம். இதே மரபில் பக்திக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தும் மகாபலி காலம் தோன்றியது.

48. மகாபலி காலம்

தவ–யாக–பூஜை வழியாக பிறர்மோக பலன் அடைய முயலும் கால வடிவம். இதனைச்சீர்செய்ய வாமனக் காலம் தோன்றியது.

49. வாமன காலம்

பிரபஞ்ச வேத சாஸ்திரங்கள் வாழவைப்பதற்காக இருக்கும். பிறர் வாழ்வை அபகரிக்கும் நோக்கத்திற்கு உதவாது என்பதை உணர்த்தும் விழிப்புணர்வுக் காலம். அதிலிருந்து அளவளவுக் காலம் தோன்றியது.

50. அளவளவுக் காலம்

லோகம் பதினான்கு என பிரபஞ்சம் மிகப் பெரிய அளவினால் ஆனது. ஒவ்வொரு லோகத்திற்கும் அதற்கான அளவளவு நெறி உள்ளது. இதற்கிணங்க மூன்றாவது அணுத்தளத்தில் முத்திரிபுத் தளக் காலம் தோன்றியது.

51. முத் திரிபுத் தளக் காலம்

பூமியின் உயிரணுத் தளத்தில் மூன்று எதிர்–நேர் தளங்கள் அமைந்துள்ளன. சூரபர்ப்பன்–இரணியன்–மகாபலி ஆகிய எதிர்தளங்களுக்கு கந்தமாயன்–நரசிம்மர்–வாமனர் ஆகிய நேர்தளங்கள் உருவான காலம். இவ்விரு குழுக்களும் சேர்ந்து உயிர் அணுவின் நான்காவது தளத்தை உருவாக்கின.

52. உயிர் அணுவின் நான்காம் தளக் காலம்

குறோணியின் நான்காவது அம்ச பிரிவில் திருக் கயிலையில் நிகழ்த்திய முகூர்த்தத்தில் வாடா அரக்கரும், அவர்களுக்குத் தலைவனாக இராவணனும் தோன்றினர். அக்காலத்தில் பதி தத்துவங்களின் உருவாக்கம் – தவ, தர்ம, அதர்ம பிரிவுகள் தெளிவாய் வெளிப்பட்டன.

53. தவ பதி தர்ம காலம்

முனிவர்கள், தவத்தோர் ஆகியோரின் இயல்பான இல்வாழ்வு உலகிற்கு தர்ம அடிப்படை வைத்தது. இத்தர்ம சாயலை வெளிப்படுத்தியது பரசுராமர் காலம்.

54. பரசுராமர் காலம்

தவ–பதி–தர்மத்தை உள்ளும் புறத்தும் காக்கும் வீரிய சாயலாக பரசுராமர் காலம் விளங்கியது. இதற்கே எதிராக இராவணன் காலம் தோன்றியது.

55. இராவணன் காலம்

ஈசனிடமிருந்து பெற்ற வரத்தால் இகபரம் முழுவதையும் ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்ற இராவணன், உலகில் பதி தர்மங்களுக்கு இடமளிக்காத நிலையை உருவாக்கினான். இதுவே பதி அதர்மக் காலம்.

56. பதி அதர்மக் காலம்

ஆண்–பெண் பிரம்ம இலக்கினை குலைக்கும் முயற்சிகள் உச்சம் பெற்ற கால வடிவு. இதனை மாற்ற தேவ ஆதி தூலக் காலம் தோன்றியது.

57. தேவ ஆதி தூல காலம்

பூலோக தர்ம சேவைக்காக தேவர்கள் முதன்முதலில் தூல தேகம் எடுத்து வானரராகப் பிறந்த காலம். தேவ–வானர வாழ்க்கையின் ஆதி ஆரம்பம். இதனை ஆட்சி செய்தது ஸ்ரீ ராமர் காலம்.

58. ஶ்ரீராமர் காலம்

அரக்கர்–தேவர்–ரிஷி ஆகிய மும்மக்களுக்கும் பொதுவாக அமைந்த மானுட உருவாக்கத்தின் உச்சம். பொதுப் பதி தர்மத்தை நிலைநாட்டிய மிகப்பெரும் தர்மயுகம். இதற்கு பின் பதி தவ தர்மக் காலம் வந்தது.

59. பதி தவ தர்மக் காலம்

தேவ–வானர வாழ்க்கையிலும், அரக்க அதிகாரத்திலும் ஏற்பட்ட பதி அதர்மங்களை நீக்கி தர்மத்தை நிலைநாட்டிய யுகம். இதன்மூலம் உயிர் அணுவின் நான்காவது தள நேர்ப் பிரிவு பூரணமடைந்தது. பின்னர் உயிர் அணுவின் ஐந்தாவது தள மேம்பாடு தோன்றியது.

60. உயிர் அணுவின் ஐந்தாம் தளக் காலம்

குறோணியின் ஐந்தாவது அம்ச பிரிவில் மும்மூர்த்தியர் செய்த முகூர்த்தத்தின் விளைவாக அரக்கர் பிறவிகளும், தேவப் பிறவிகளும் தோன்றின. இதனால் தேவ–அரக்கர் உறவுச் சுற்றில் புதிய தன்மைகள் உருவானன. இது உயிர் அணுவின் ஐந்தாவது தள நிலை.

61. கம்சன் காலம்

கம்சன் தனது பெற்றோரைச் சிறையில் அடைத்து, அரியணை எறிந்து கொடுங்கோலாக ஆட்சி செய்தான். அவன் ஈசனிடம் சாகா வரம் பெற்றிருந்தான். இதனால் புவி அதர்மக் காலம் தோன்றியது.

62. புவி அதர்மக் காலம்

கம்சனால் பூமியில் அதர்மம் உச்சம் எட்டியது. பூமாதேவி மற்றும் சபையோர் கலங்கி கதறிய நிலை. இதன் நடுவில் தேவ மானுடக் காலம் தோன்றியது.

63. தேவ மானுடக் காலம்

தேவர்கள் முதலாய் வானர வடிவில் பிறந்த பின், முதன்முதலாக மானுட மேனி பெற்று பூமியில் வாழ்ந்த காலம். யாதவ மக்களாக இந்நிலை விரிந்தது. அவர்களைப் பாதுகாக்க புவி தர்மக் காலம் உருவானது.

64. புவி தர்மக் காலம்

அரக்கரால் தேவ மானுடருக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து அவர்களைத் தாங்கிய தர்ம நீட்சிகள் தோன்றிய காலம். இதற்காகவே ஸ்ரீகிருஷ்ணர் காலம் தோன்றியது.

65. ஶ்ரீகிருஷ்ணர் காலம்

தேவ மானுடர்களைக் காக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகை யுகத்தை உருவாக்கினார். இதனிடமே இருந்து துவாரகை ராஜ்யக் காலம் விரிந்தது.

66. துவாரகை ராஜ்யக் காலம்

கடலில் எழுந்த தனி ராஜ்யமாக துவாரகை பூமியில் 14 லோகங்களுக்கும் சிறப்பானதாக இருந்தது. இதன் பின் கௌரவர் காலம் தோன்றியது.

67. கௌரவர் காலம்

அறிவிற்குப் பொருந்தாத அதிகார வடிவில் கௌரவர்கள் ஆட்சி செய்தனர். இதனால் அரசு அதர்மக் காலம் உருவானது.

68. அரசு அதர்மக் காலம்

நல்லவரின் அதிகாரம் பறிக்கப்பட்ட ஆட்சிக் காலம். இதனைத் தாங்கும் சாயலில் பாண்டவர் காலம் தோன்றியது.

69. பாண்டவர் காலம்

அரசு அதர்மங்களை எதிர்த்து போராடி வென்று தர்மத்தை நிலைநாட்டிய காலம். இதிலிருந்து அரசு தர்மக் காலம் தோன்றியது.

70. அரசு தர்மக் காலம்

நல்ல அரசுகளுக்குப் பல சான்றுகள் ஏற்பட்ட தர்ம நிறைவுக் காலம். ஆனால் இதை மாற்றும் முன்னெச்சரிக்கையாக பொய்ச்சடலக் காலம் தோன்றியது.

71. பொய்ச்சடலக் காலம்

துவாரகை ராஜ்ய மறைந்து, கடலில் மூழ்கிய பின், ஸ்ரீகிருஷ்ணர் தனது அமிர்த மேனியை மறைத்து, பூமியில் மாய மடங்கல் உருவாக்கிய காலம். அதற்கிடையில் தக்கன் காலம் தோன்றியது.

72. தக்கன் காலம்

ஏழு கடல்களில் கோட்டை அமைத்து கொடுங்கோலாக ஆட்சி செய்த அரக்கன் தக்கன். இதனை அடக்க பத்திரகாளி காலம் தோன்றியது.

73. பத்திரகாளி காலம்

தக்கன் காலத்தை அடக்கி தர்மத்தை நிலைநாட்டிய யுகம். இதனிடைச் சான்றோரின் காலம் தோன்றியது.

74. சான்றோர் காலம்

உலகெங்கும் தோன்றிய அரக்கரை பத்திரகாளி சங்காரம் செய்த காலம். இதனால் தர்ம வளம் உலகில் உச்சமடைந்தது. இதற்குப் பின்னர் உயிர் அணுவின் ஆறாம் தளக்காலம் தோன்றியது.

75. உயிர் அணுவின் ஆறாம் தளக் காலம்

குறோணியின் ஆறாவது அம்ச பிரிவு மூர்த்தியரின் முகூர்த்தத்திற்குப் பணியாததாக, தனியே உற்பத்தி பெறும் சுதந்திர நிலையை அடைந்தது. இதுவே “மாயமாலம்” எனப்படும் சக்தியின் வீரியம் விளங்கிய காலம்.

76. மாய்மாலக் காலம்

தன்னைத் தானே பிரபஞ்சமாகப் பிறப்பித்துக் கொண்ட மாயமாலம், அனைத்தையும் எதிர் நிலையில் கிரகித்து செயல்படும் புத்திச் சித்தியைக் கொண்டு இருந்தது. இதிலிருந்து பொய்யர் வாழ்காலம் தோன்றியது.

77. பொய்யர் வாழ்காலம்

ஸ்ரீகிருஷ்ணரின் பொய்ச்சடலம் எழுந்தபின் பொய்யர் வாழ்வுக்கு இசைவான நீட்சி தோன்றியது. மாயமால அம்சத்தை முழுமையாக அடக்கிய காலமே கலிப் புருஷனின் காலம்.

78. கலி புருஷன் காலம்

அரக்கர்கள் பெற்ற சுய உற்பத்திச் சித்தியின் உச்சமாக கலி புருஷன் தோன்றிய காலம். பிரபஞ்ச வாழ்வு ‘பரிணாம முடக்கம்’ என்ற அவலத்தை நோக்கி நகர்ந்தது. முதல்ச் சுவட்டில் பிரணவச் சிதைவுக் காலம் தோன்றியது.

79. பிரணவச் சிதைவுக் காலம்

ஆதி மகரப் பிரணவம் மற்றும் மாயா மகரப் பிரணவம் சிதைந்ததால் கலி ஜீவிகளின் காலம் தோன்றியது.

80. கலி ஜீவிகள்க் காலம்

கலி உயிர்களின் உற்பத்தி சக்தி அடுக்குகளை ஏறுவரிசை–இறங்குவரிசையில் ஊடுருவி வசப்படுத்தினான். இதனால் சிதைந்த அணுவிலிருந்து மறு அணு தோன்றும் திரிபு உருவானது. தாவர உற்பத்தியைத் தாண்டி ஐந்தறிவு ஜீவிகள் தோன்ற, பின்னர் கலி மானுடக் காலம் உருவானது.

81. கலி மானுடக் காலம்

ஐந்தறிவு உயிர்களின் சக்திகளைத் தலைகீழாக்கி கடந்த கலி, மானுட உயிர் சக்தித் தளத்தை வசப்படுத்தி பூமி வெடித்து தலைகீழாக நின்றான். இதனால் இயல்பான அறிவுக்கு எதிரான அறிவீனம் உருவானது. இம்மானுடத் திரிபு 96 தத்துவச் சிதைவையும், சகல பிரம்ம சொரூபங்களையும் கலியால் சிதைவுறச் செய்தது. அச்சொரூபங்களைத் தமதாக்கிக் கொண்டகாலமே கலி தேவகாலம்.

82. கலி தேவ காலம்

பிரபஞ்ச நாதன் ஈசனின் செயல் முடங்கிய நிலையில், மூர்த்தியர்கள்–தேவியர்கள்–ரிஷிகள் உள்ளிட்ட சகல சொரூபங்களும் கலியால் நகலாக்கப்பட்டு, அவற்றில் கலி வாழ்ந்த காலமே கலி தேவகாலம். இதனால் கலியின் ஆதிக்க காலம் ஆரம்பமானது.

83. கலி ஆதிக்க காலம்

பிரபஞ்ச ஜீவர்கள் முதல் தேவியர் வரை அனைத்து சொரூபங்களும் கலியால் நகலாக்கப்பட்டு, அவற்றை அடி அடி சக்தி அடுக்குகளாக கலி ஏற்றி கொண்ட காலம். இதுவே கலியுக காலம் என்றும், கி.மு–கி.பி வரலாறு என்றும் விவரிக்கப்படுகிறது. இதன் நீட்சியில் மகா அலிக்கிய காலம் தோன்றியது.

84. மகா அலிக்கியக் காலம்

பிரபஞ்சத்தில் தேவ அம்சமும்–அசுர அம்சமும் அணுத்துகள் முதல் முழுப் பரப்பளவில் கலந்துகொண்டு சூனிய நிலை உருவான காலம். இதனை முறியடிக்க கலை–ஞானக் காலம் பூமியில் தோன்றியது.

85. கலை ஞானக் காலம்

பரபிரம்ம பாதாரத்தில் இருந்து பிரபஞ்சத்தில் வளர்ந்த கலை–ஞான தளம், கலியால் சிதைவுறத் தொடங்கியது. இதனால் பூமியில் புதிய கலை–ஞான தளம் உருவாக்க நாராயணர் முனிவர்களை தபசு செய்ய வைத்தார். அந்த தபசின் மூலம் பிரபஞ்ச கலை–ஞான உயர்வு பூமியில் இருந்து உருவானது. இதற்கு எதிராக அரக்கச் சுதந்திரக் காலம் வளர்ந்தது.

86. அரக்கச் சுதந்திரக் காலம்

சாகும் வாழ்வாதாரமுடைய அரக்கர்கள், சாகா வாழ்வாதாரத்தை முறியடிக்கும் அணுகுமுறையுடன் சுதந்திரம் அடைந்த காலம். இதனை கடக்கும் முயற்சி தேவையானதால் தவக்காலம் தோன்றியது.

87. இகபரத்தாரின் தவக்காலம்

பிரபஞ்ச நாதன் ஈசன், கலி ஆதிக்கத்தைக் குறைக்கும் முகமாக தபசுக் கோலம் ஏற்றார். இதனால் இகபரத்தாரின் தவக்காலம் தோன்றியது. ஆனால் தவத்தாலும் தாங்க முடியாத அளவிற்கு பிரபஞ்ச இணறு காலம் தோன்றியது.

88. பிரபஞ்ச இணறு காலம்

கலி அரக்க ஆதிக்கத்தால் பிரபஞ்சத்திலும் உயிர் உடற்கூறுகளிலும் உள்ள வாசல்கள் அனைத்தும் அடைந்து போனதால் புலன்கள் செயலிழந்தன. இது இணறு (அடைப்பு) காலமாக விளங்கியது. அதன் பயனால் பிரபஞ்ச அபாயக்காலம் உருவானது.

89. பிரபஞ்ச அபாயக் காலம்

பரபிரம்மச் சத்து சரிவு ஏற்பட்டு பிரபஞ்சம் ஒரு நொடியில் அழியும் அபாய நிலை. இதனைத் தவிர்த்திட தாங்கல் காலம் உருவானது.

90. தாங்கல் காலம்

பிரபஞ்சத்தைத் தாங்க நாராயணர் பொய்ச்சடலத்தை மாற்றிய தருணத்திலிருந்து தாங்கல் காலம் உருவானது. இதனிடையே பூமி மையமாக தட்டுமாற்றக் காலம் தோன்றியது.

91. தட்டு மாற்றக் காலம்

கலியின் இயக்கம் அபாயத்தை உச்சமடையச் செய்தபோது, பிரபஞ்சத் தட்டு மாற்றம் நடைபெற, கடந்த ஆறு யுகங்களில் வாழ்ந்த பிரபஞ்ச உயிர்கள் பாய்மாயக் கூட்டாக மானுடக் குழந்தையாக பூமியில் தோன்றின. இதிலிருந்து பூமியில் பரான்மா காலம் தோன்றியது.

92. பூமியில் பரான்மா காலம் (சந்திர வர்ணக் காலம்)

சாகும் வாழ்வாதாரத்தை முறியடித்து சாகா உயர்வை உருவாக்க பரான்மா காலம் தோன்றியது. இதற்கு அடிப்படையாக பொன் மகரக் காலம் உருவானது.

93. பொன் மகர காலம்

மகாலட்சுமி கடலடியில் பொன்மகரமாக அவதரித்து பிரபஞ்ச அம்சங்களை தன்னுள் ஏற்றுக் கொண்டாள். இது பரான்மா உயிர்களின் உற்பத்திக் கால அடிப்படையாக அமைந்தது. இதன் அடிப்படையில் 12 வகை அகார–உகார–மகர சந்திப் பிரிவுகள் உருவானது.

94. மகர அகாரக் காலம்

பிரபஞ்சத்தின் முதல் ‘அகர’ அம்சங்கள் பொன்மகரத்தில் அடங்கி உருவான காலம்.

95. மகர உகாரக் காலம்

பிரபஞ்ச உகர அம்சங்கள் பொன்மகரத்தில் உருவளர்ந்த காலம்.

96. மகர மகாரக்காலம்

பிரபஞ்ச மகர அம்சங்கள் பொன்மகரத்தில் உருவளர்ந்த காலம்.

97. அகர மகரக் காலம்

பிரபஞ்ச அகர–மகர இணை அம்சங்கள் பொன்மகரத்தில் உருவான காலம்.

98. அகர உகரக் காலம்

அகர–உகர சந்திப்பிரிவுகள் பொன்மகரத்தில் உருவளர்ந்த காலம்.

99. அகர அகாரக் காலம்

அகர–அகர உயர்வுகள் பொன்மகரத்துள் அடங்கி உருவளர்ந்த காலம்.

100. உகர மகாரக் காலம்

உகர–மகர சந்திப்பிரிவுகள் பொன்மகரத்துள் உருவான காலம்.

101. உகர அகாரக் காலம்

உகர–அகர சந்திப்பிரிவுகள் பொன்மகரத்தில் உருவான காலம்.

102. உகர உகாரக் காலம்

உகர–உகர உச்ச அம்சங்கள் பொன்மகரத்துள் உருவளர்ந்த காலம்.

103. அகரச் சிகாரக் காலம்

அகர உச்சமான அம்சங்கள் பொன்மகரத்துள் உருவான காலம்.

104. உகாரச் சிகாரக் காலம்

உகர உச்ச அம்சங்கள் பொன்மகரத்துள் உருவான காலம்.

105. மகரச் சிகாரக் காலம்

மகர உச்சமான அம்சங்கள் பொன்மகரத்தில் உருவளர்ந்த காலம். இப்பகுதி அம்சங்களுக்கு விதிவடிவமாக ஈசனின் திருநடனக்காலம் அமைந்தது.

106. திருநடனக் காலம்

ஈசனின் திருநடனம் பிரபஞ்ச இனங்களுக்கு 21 மகா திரிபுகளுக்குரிய இயக்க துடி உருவாக்குகிறது. இதனை அடக்கி முத்திரிபுத் துடிக்காலம் தோன்றியது.

107. முத்திரிபுத் துடிக் காலம்

உயிர்களில் இயங்கும் துடி ஒன்றாக இருந்தும் மூன்றாக திரிந்து இறுதியில் ஒன்பதாய்ப் பின்னர் ஒன்றில் அடங்கும் நிலை. இதன் விளைவாக பிரணவ முத்திரி காலம் தோன்றியது.

108. பிரணவ முத்திரி காலம்

ஆதி மகரப் பிரணவம், மாயா மகரப் பிரணவம், மாயா உகரப் பிரணவம், ஆதி உகரப் பிரணவம் ஆகியவை ஒருங்கிணையும் காலம். அய்யா வைகுண்டர் அவதார முகூர்த்தமும் இதே பகுதியில் வருகின்றது. இதற்குப் பின் அருவிஞ்சைக்காலம் உருவானது.

109. அருவிஞ்சைக்காலம்

ஆதி பிரபஞ்ச தோற்றத் தளமாகிய அருவிஞ்சை, பூமியில் இருந்து வைகுண்டர் காலத்தை உருவாக்கும் அடிப்படை. இதிலிருந்து மகா வைகுண்டர் காலம் தோன்றியது.

110. வைகுண்டர் காலம் (மகா விகடகட காலம்)

பரபிரம்மம் பிரபஞ்சமெங்கும் நித்திய வடிவில் விளங்கும் காலம். கிழமை ஆண்டு 1008, மாசி 19 ஆம் தேதி பூமியில் வைகுண்டர் காலம் தென்பட்டது. இது பிரபஞ்ச அளவில் விகடகட காலமாக பரவியது. அதன் தொடர்ச்சி தண்டரளத் தபக் காலம்.

111. தண்டரள தபக் காலம்

ஏக பரபிரம்மம் இகத்தில் வந்து கலியால் நலிந்த பிரம்மச் சொரூபங்களை உருவேற்றி உய்வடைய வைத்த தபக்காலம் தண்டரளத் தபக் காலமாகும். இக்காலச் சாயலில் பிரபஞ்சம் ஆராயப்பட்டதில் இருந்து தர்ம ஆகமக்காலம் உருவாயிற்று.

112. தர்ம ஆகமக் காலம்

இந்த முகூர்த்த விதிப்படி பிரபஞ்சம் அடைய உள்ள சேமங்கள் ஆகம உரையாக நிர்ணயிக்கப்பட்டது. இம்முகூர்த்தம் கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை 27 அன்று நிகழ்ந்தது. இதன் விளைவாக வைகுண்டர் அதிகார துவக்கமான துதி சிங்காசனக் காலம் தோன்றியது.

113. துதி சிங்காசனக் காலம்

பரபிரம்ம பாலன் வான் வைகுண்டத்தை நோக்கிப் புறப்பட்ட முகூர்த்தம் கொல்லம் ஆண்டு 1026, வைகாசி 21 அன்று நிகழ்ந்தது. இதுவே துதி சிங்காசனக் காலமாகும். பிரபஞ்சத்தில் ஆதிக்கம் செய்த கலி அம்சங்களை கீழ்ப்படுத்தும் தர்ம அதிகாரக் காலமாக இது விளங்குகிறது. இதன் வேகத்தைத் தாங்கும் சக்தி ஞான நித்திரைக் காலமாகும்.

114. ஞான நித்திரைக் காலம்

உச்ச வேகமிக்க தர்ம சங்காரத்தைத் தாங்கும் பொறுமையும் சக்தியும் கொண்ட காலம் ஞான நித்திரைக் காலம். பெரிய ஜீவ சமாதி அளவு கொண்ட இந்த காலம் மெய்ஞான நித்திரையைப் போன்றது. இதிலிருந்து காலத்தால் காணும் காலம் தோன்றியது.

115. காலத்தால் காணும் காலம்

தபசிகள் புராணங்கள்–சாஸ்திரங்கள்–வேத சுவடுகளை ஆய்ந்து பிரபஞ்ச பலனை கணிக்க உதவும் முகூர்த்தங்களை வகுத்த காலம். வைகுண்டர் காலமும் முந்தைய அமிர்த முகூர்த்தங்களும் இந்த ஆய்வுகளில் அடங்கும். இதற்கும் மேலான கால வரிசைகளே பிரம்ம காலமாகும்.

116. பிரம்ம காலம்

கல்பம், மனுவந்தரம், மகா யுகம், யுக ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி என பிராண துடிப்பின் மேல் கணிக்கப்பட்ட கால அளவுகள் பிரம்மக் காலம் எனப்படுகின்றன. பரம் பெரிய வேதம் இதனை விகட சூரியக்காலம் என விளக்குகிறது.

117. விகட சூரியக் காலம்

வைகுண்டர் காலத்தின் மீது அமிர்தப் பிரபஞ்சச் சுவடுகளை அறிய வல்ல சூரிய தவ பயனாக வெளிச்சம் பெற்ற காலம். இதற்கும் மேலான தொடர்காலங்கள் — உருத்திர காலம், விஷ்ணு காலம், முச்சந்தி காலம், விந்து காலம், நாத காலம், சக்தி காலம், சிவகாலம், பரா சக்தி காலம், மகரப் பிரணவக் காலம், பர காலம், பராபர காலம், சுத்த பர மாயைக் காலம் ஆகியன. இவை பூமியில் விபுசு காலமாக மறைந்தன.

118. விபுசு காலம்

பிரபஞ்சத்தின் ஈறாறு கலைகாலங்களும் ஒருங்கிணைந்து ஏழுலோக உற்பத்தி பலனாக விளங்கிய காலம் விபுசு காலம். இதிலிருந்து தேவ சுதந்திரக் காலம் தோன்றியது.

119. தேவ சுதந்திரக் காலம்

பூமியில் ஏற்பட்ட ஆதி அமிர்தகாலம், அரக்கச் சுதந்திரத்தை அழித்து பூமியை சுத்தமாக்கும். இந்த சுத்திச் சித்தியை உருவாக்க முச் சதிர் காலம் தோன்றியது.

120. முச் சதிர் காலம்

பிரபஞ்ச கலைகால விளைவுகள் பூலோக மையத்திலிருந்து படிப்படியாக ஏற்றம் பெறும் கால வரிசை. இதன் முதல் நிலை நாரண வைகுண்டர் காலம்.

121. நாரண வைகுண்டர் காலம்

பரபிரம்ம வைகுண்டத்தில் இருந்து, உலக உயிர்களை மேம்படுத்த நாராயணர் சதுர கலை–ஞான நிலையில் பரபிரம்மமாக இகனையாடல் புரியும் காலம். இதற்குப் பின் சதாசிவ வைகுண்டர் காலம் வருகிறது.

122. சதாசிவ வைகுண்டர் காலம்

பிரபஞ்ச உயிர்களை மேம்படுத்த சதாசிவம் பரபிரம்மமாக திருவருளாடல் புரியும் காலம். அடுத்ததாக பிரம்ம வைகுண்டர் காலம் உருவாகிறது.

123. பிரம்ம வைகுண்டர் காலம்

பிரம்மா சதுர கலைஞான நிலையில் பரபிரம்மமாகத் தோன்றி திரு தர்மவேத தபசு புரியும் காலம். இதனைத் தொடர்ந்து முழிப்புச் சங்கு காலம் தோன்றுகின்றது.

124. முழிப்புச் சங்கு காலம்

உலகில் தர்மச் சங்கு ஒலிக்கும் காலம். தவதர்மத்தின் முழு சித்தி விளைவிக்கும் இந்தக் காலத்தின் பின்னர் பிரபஞ்சப் பிரளயக் காலம் வரும்.

125. பிரபஞ்ச பிரளயக் காலம்

மாயாப் பிரபஞ்சம் கரைந்து அமிர்தப் பிரபஞ்சம் தெளியும் காலம். பிரபஞ்சத் திரிபுகள் அனைத்தும் நீங்கி புதிய உற்பத்திக்குத் தளம் உருவாகும். இதிலிருந்து நல்லின உற்பத்திக் காலம் தொடங்குகிறது.

126. நல்லின உற்பத்திக் காலம்

பூமியை மையமாகக் கொண்டு சாகா வாழ்வாதாரமுள்ள நல்லின உயிர்கள் உருவாகும் காலம். இதன் பூரண விளைவாக தர்மபதி காலம் உருவாகிறது.

127. தர்மபதி காலம்

பிரபஞ்ச உயிர்கள் முக்தி முடிசூடி வாழும் உச்ச ஆளும் காலம் தர்மபதி காலம். இதிலிருந்து முக்திச் செங்கோல் காலம் தோன்றுகிறது.

128. முக்திச் செங்கோல் காலம்

அனைத்து உயிர்களும் மூன்று நீதிகளின் பாதையில் பரபிரம்மத்தை நேரடியாகக் கண்டு, பூரண முக்தியில் வாழும் காலம். இறுதி Siddhi — முக்திச் செங்கோல் காலம்.