வாழ்க! இனிதிருந்து வாழ்க!
மகிழ்ந்து மகிழ்ந்து கடமைகள் செய்க! மகிழ்ச்சியில் உய்க!
கலியுகத்துக்கு முன்பு பூலோகத்தாரில் அரக்க பேதம் - தேவ பேதம் இருந்தது.
பூமியறிவு மிக்க நமக்கு பூமியை மையமாகக் கொண்ட பிரபஞ்ச அறிவை வளர்க்க அடிப்படையாக அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை - அருள்நூல் திகழ்கின்றது. இந்நூல்கள் விவரிக்கும் வேத சாஸ்திர புராண வடிவில் அய்யா வைகுண்ட அவதார அருள் நிலைகள் பிரபஞ்சத்தில் வியாபித்துள்ளது. அவரின் ஆகமம் பூலோகத்தில் நிலவில் உள்ள சாகும் வாழ்வின் அடிப்படைகளையும், இவ்வாழ்வினூடே சாகா வாழ்வுக்கான நோக்கங்களையும் அவையடங்கிய சாரியை - கிரியை - யோகம் - ஞானம் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள தர்மங்கள் குறித்தும் அதற்குரிய பயிற்சிகள், ஒழுக்கங்கள் அடங்கிய வழிபாட்டினையும் உலகுக்கு வழங்கி உள்ளது.
நாராயணர் - ஈசன் - பிரம்மா - இந்திரன் - நான்மறைகள் - சந்திர சூரியர் போற்றவரின் சகல அவதாரங்களையும் தன்னுள் திருப்பி இலங்கச் செய்யும் சிவஞானவேத மயமாக திகழும் விஸ்வா விஸ்வ ரூபனாகிய அய்யா வைகுண்டர், விஸ்வரூப நாராயணருக்கும் - விஸ்வ ரூப மகர லட்சுமிக்கும் பரபிரம்மத்தின் முழு அம்சத்தில் அவதரித்தார். அவர் ஏக அநேகமான நிலையில் வழங்கும் ஆகம அறிவோடு கூடிய அருள் முறையில், உலகியலில் உள்ள உயிர்களில் இடம் பெற்றுள்ள சாகும் அம்சம் - சாகா அம்சம் குறித்த தெளிவினை வழங்குகிறார். சாகா வாழ்வுக்குரிய அம்சங்களை ஊக்குவிக்கும் நீட்சியில் பூலோக உயிர்களுக்கு எல்லாம் சாகா நிலை தேர்ந்து வாழும் ஆளும் திறங்களின் பூரணத்தை விவரிக்கின்றது. அது சாகும் வாழ்வின் பிறவிப் சுற்றில் உயிர்கள் சாகா வாழ்வுக்கான தேர்ச்சியை வழங்கும், அளப்பரிய அற்புதமிக்கப் புண்ணியக் காலம் 1008 - மாசி மாதத்தில் இருந்து துவங்கியது. அக்கால மூகூர்த்ததில் இருந்து மாயா பிரபஞ்ச அம்சங்களை, அணுத் தூள் நிலையில் இருந்து கரைத்து அமிர்த பிரபஞ்சத்தை உருவேற்றும் உபாயம் பிரபஞ்ச அளவில் நிகழ்கின்றது.
பிரபஞ்ச அளவிலாவிய அதனதன் அங்க அம்சங்கள் அமிர்த சார தேர்ச்சி அடையும் இலக்குகளில், நமது உள்ளம் – மனம் – புத்தி - சித்தம் - ஆங்காரம் எனும் புலன்களின் சக்திகள், உலகியலில் சஞ்சரிக்கும் போது ஏற்படும் இன்ப புதுமைகள் குறித்து விவரிக்க அவை உவமையற்றவையாகத் திகழ்ந்து, நம்மை மௌனியாக்குகின்றது. இப்படி மௌனியாகிப் போனவர்கள் நிலையை விளக்கவும் சான்றில்லாமல் தத்தளித்த போது கண்டவர் விண்டதில்லை – விண்டவர் கண்டதில்லை என்று எல்லை புள்ளி போட்டு அதனைச் சுற்றி நிறைவு தேடும் நிலைமையே தொடர்கின்றது. அப்புள்ளிச் சுற்றினை தவிர்த்து, முக்தி சக்தி அணிகள் காண காண காட்சியடையும் கால அங்கிகாரம் உருவாகியுள்ளது. அதனை எடுத்துரைக்க வைகுண்டரின் ஆகமங்கள் உதவுகின்றன.
பழயனவற்றில் கால காலமாக மறைந்திருந்த மூலங்களை திருப்பும் படலத்தில் புலப்படுகின்ற புதியவைகளின் நிலைகளை அறியும் அனுமதி தர்ம அன்பறிவால் வாய்க்கிறது. துவாபர யுகத்தில் ஶ்ரீகிருஷ்ணரின் அருளாட்சி தலமான துவாரகை பதி கடலுள் மறைபொருளாய் விளங்குகின்றது. அதில் இன்பமுள்ள வகைகளுக்கான சகல மூலங்களும் இருக்கின்றன. அவ்வின்ப மூல அம்சங்களை உலகினங்கள் தம்மில் எடுத்துக்கொள்ள ஏற்றகாலத் திறப்பான முகூர்த்தம் கொல்லம் ஆண்டு 1008 – மாசியில் நிகழ்ந்தது. அதில் இருந்து உலகினங்களின் நேர்த்தியான இன்ப நிலைகளை காப்பது சிறந்த தர்மம் என ஆகமங்கள் விவரிக்கின்றன.
இன்ப களத்தை நோக்கிய உயிர்களின் பிரயாணத்தில் அதற்கான வழிகாட்டுதல் இந்த காலத்தின் ஆகம தர்மமாக விளங்குகின்றது. உலக உயிர்கள் அறிய வேண்டிய சந்தி திரிபுகள் அநேகம் ஏற்பட்டுள்ளன. அவற்றை உலகிற்கு எடுத்துரைத்து வழிநடத்துவது அரசு – ஆன்மீகம் – பரம்பரை சார்ந்த ஆளுமை உடையவரின் கடமையாக விளங்குகின்றது. அக்கடமைக்கு உதவியாகும் ஆய்வுகளை வைகுண்டரின் ஆகமங்கள் தூண்டுகின்றன.
நாம் வாழும் நிலம் அடங்க பூமியின் அங்கங்கள் யாவும் புதிய சக்தி நிறைவை அடைவதற்கான புவியியல் திரிபுகள்; உயிர்கள் சீவான்மா – பரவான்மா சம்பந்தம் அடைவதால் ஏற்படும் உயிரியல் திரிபுகள்; தளர்வில்லா நிலவு இலங்கும் இலக்கில் உருவாகும் வானியல் திரிபுகள்; சாகும் வாழ்வில் உள்ள உடற்கூறுகள், சாகா வாழ்வுக்காய் தேர்ச்சி அடையும் உடலியல் திரிபுகள்; எதிரில்லாமல் மானுடரை வாழ வைக்கும் மனுநீத திரிபுகளுக்கு இணங்க உறுதியடையும் இலக்கில் நகரும் அரசநீத திரிபுகள்; நான்கு வேத தளங்களிலும் அவற்றை தாண்டிய பரம்பெரிய வேத முறையிலும் தர்ம அன்புக்கே இசைந்தருளும் தெய்வநீதத் திரிபுகள்; இத்தகைய திரிபுகளுக்கெல்லாம் புதிதாய் பொருந்த உள்ள தர்மநீதத் திரிபுகள்; அத்தர்மத் திரிபுகளுக்கு இசைந்த உயிர்களின் வாழ்வியல் திரிபுகள்; அவ்வாழ்வியல் களம் அமையப்பெறும் அறிவியல் திரிபுகள்; அவ்வறிவியல் சித்தியாக விளங்கும் வேத சாஸ்திரத் திரிபுகள்; கலி யுகத்தில் ஏற்பட்ட தடிக்குண தவிர்த்த தத்துவத் திரிபுகள் குறித்த ஆய்வுகளோடு, பிரபஞ்ச அளவில் பலகோண திரிபுகளை குறித்து விவரிக்கும் அகிலத்திரட்டு அம்மானை – அருள்நூல் ஆகமங்கள் அறிவுலகுக்கு புதிய வழிகாட்டியாக விளங்குகின்றது.
பாரதத்தில் தோன்றியது முதல் உலகில் உள்ள வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் தொகுப்புகளை ஆராய்வதும். அவற்றோடு அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை - அருள் நூல் ஆகமங்களை ஒத்துப் பார்க்கும் ஆய்வுகளும், அது சார்ந்த ஆய்வுரைகள் தொகுப்பதோடு, அவற்றின் நவீன கால பரிணாம நிலைகளை ஒத்துப்பார்ப்பதும், அது சார்ந்த முன்று நீத தலைவர்கள் - நிபுணர்கள், சேவையாளர்களை சந்தித்து அவர்களோடு கலந்தாய்வுகள் செய்வதும். அவற்றில் உறுதிபடுத்தப்படும் தெளிவுகள் தேர்ந்த கருத்துக்களை புத்தகமாக்கி வெளியிடுவதும். அவற்றை போதிப்பதும். அப்போதனைப்படி பயிற்சிகள் அளிப்பதும், (ஆன்மீகம் - அரசு - குடும்பம்) மூன்று நீத வளம் சார்ந்து கல்வி சாலைகள் அமைத்து உலக சேவை செய்வது நமது கடமையாக உள்ளது.
கலியுகத்துக்கு முன்பு பூலோகத்தாரில் அரக்க பேதம் - தேவ பேதம் இருந்தது. இந்த யுகத்தில் அப்பேதம் இல்லாத மேனி பெற்ற வாழ்வில் உள்ள மானுடர்கள் இடையே நிலவும் பகை இல்லாத வாழ்க்கை களம் செய்வது இந்த யுகத்தின் உயர்ந்த நினைவாகவும் அது சார்ந்த செயலாகவும் அதில் நிலவும் தர்மமாகவும் திகழ்கின்றது. உயர்ந்த அன்பில் உலகவாழ்வை கட்டமைக்கும் சேவையில் தாவரங்களை நேசிக்கும் நிறைவில் உலகலாவிய அன்பு வளம் செய்வதும்; அத்தாவரங்களிடையே வாழும் ஊர்வனங்கள், நீரினங்கள், மிருகங்கள் அவற்றோடு அன்பு பாராட்டும் நடவடிக்கையோடு, அவற்றுள் அன்பு செழிக்க அவற்றை வாழ்விக்க விரும்பும் நீட்சியில் , அதற்கு மேலாக மானுடர் இடையே தூய அன்பு ஊடுருவி உலாவும் வாழ்வியல் அலங்காரம் செய்வதும், மானுட இலட்சியமாகும். குடும்பத்துள் நிலை கொள்ளும் அன்பின் பண்புகள், அவ்வாறு மற்றவர் குடும்பத்தோடு அனுசரிக்கும் அன்பு பந்தம். மறு ஊருக்கும் ஊருக்கும் இடையே நிலவும் அன்பு, அண்டை நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே நிலைநிறுத்தவல்ல ராஜ அன்பு இவை மானுடர்கள் பிரயோகிக்க வேண்டிய அன்பாற்றலின் அன்பின் பிரமாண்டங்களாகும்.
மனிதனை தலையாயதாகக் கொண்ட பூலோக உயிர்களை எல்லாம் பேணி வளர்க்கும் கடமை மனிதருக்குரிய பிறவி கடமையாகும்.
அக்கடமை கருத்து ஓங்குவதற்குரிய சேவை வளத்தால் மானுட குலம் மேன்மை அடைகின்றது.
அடுக்கடுக்கான ஆராய்ச்சிகளும், அவற்றில் உள்ள தெளிவுகள் உலகத்தவருக்கு புலப்படுத்தும் சேவைகளும் இடம் பெற்றுள்ளது.
எழுத்து – புத்தகம் தொகுப்பும் பிரச்சாரம் செய்ய பயிற்சி வழங்குவதும் நமது கடமைகளில் அடங்கும்.