உச்சிப் படிப்பு
சிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா ஆதிகுரு சிவசிவா மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா சிவமண்டலம் அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம் நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம் பரலோகம் அளந்த பச்சைமால் நராயணர் சிவசிவா சிவமண்டலம் திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவமண்டலம் செங்கண் திருகுரு சிவசிவா சிமண்டலம் சன்னியாசிகுரு சிவசிவா சிவமண்டலம் மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம் மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம் மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம் குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருமண்டலம் சங்கம்நிதி குண்டலம் தரணி குருமண்டலம் தரணியது குண்டலம் தரணிபுகழ் குண்டலம் சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நிறைந்தவர் சிவசிவாஏககுருவாகப் படைத்தது அது நிறைந்தவர் சிவசிவா படைத்து நிறைந்தவர் பாலன்வடிவு கொண்டவர் பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர் அளந்தவர் திருமால் ஆதிகுரு சன்னியாசி சிவசிவா சன்னியாசி செந்தில்வேல் வடிவுமவர் செந்தில்வேல் சன்னியாசி செந்தி வேலவர் வடிவும் புகழ்படைத்தவர் மாயநிற மானவரவர் சிவசிவா கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர் நிறைஞ்சி நிறைஞ்சவ ஏகம் எல்லாம் நிறைந்தர் எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர் மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சன்னியாசி சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய் சிவசிவா த..ம்..அ...சி அரி நன்றாகக் குருவே துணை சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்தி நன்னாய் தென்னானாய்! சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய தன்னானாய் சிவசிவா தானோனோம் தானானோம் தானானோம் தானானோம் சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம் சிவசிவா தந்னேனன்னம் தந்தேனன்னம் தந்னேனன்னம் தந்தேனன்னம் மகாலிங்கம் - அரிலிங்கம் சிவலிங்கம் - லிங்காலிங்கம் குருலிங்கம் - சொக்கலிங்கம் திருலிங்கம் - சுகலிங்கம் ஏக்காலிங்கம் - ஆதிலிங்கம் ஏகலிங்கம் - அருள்லிங்கம் அடங்காலிங்கம்
யுகப்படிப்பு
அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவ அரகர அரகரா சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும் சிவசிவா முறையோம் முறையோம் முறையோம் சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும் சிவசிவா முறையோம் முறையோம் முறையோம் சிவசிவா அய்யா நாராயணர்க்கும் நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும் சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம் சிவசிவா அய்யா நாராயணசுவாமி ஜெயம் ஜெயம் ஜெயம் சிவசிவா அரகரா ஜெயம் ஜெயம் ஜெயம் தேசமயம் யேகம் திட்டித்த இந்திர நாராயணர் அய்யா நிச்சயித்தபடி யல்லாது மனிதன் நிச்சயித்த படியில்லை அய்யாவே இங்கும் அங்கும் எங்கும் யெவ்வுயிர்க்கும் யெங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகர அரகரா 1. அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையம்மாளுக்கும் தெய்வார் இடுவது முறையோம் முறையோம் முறையோம் 2.மோட்ச உயிர்க்கும் நரக உயிர்க்கும் தீ நரகப்பாவி உயிர்க்கும் ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும் 3.வைகுண்ட பதவி உயிர்க்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 4.முன்னுள்ள ராமர் உயிர்க்கும் மோகவடி வான உயிர்க்கும் முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும் இப்போ வந்த நராயணர் எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவர் நமக்கு உதவிசெய்ய வந்த நாராயணர் இவர்தான் எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 5.கறடு முறடு தட்டிப் பதியேறினார் எங்கள் அய்யா காவலர் கிட்ட வந்து சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 6.கறடு முறடு தட்டுவது எங்கள் அய்யா கன்னியா குமரிக்கு வடக்கே பதியேறுவதும் யெங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 7.நாடாள்வார் அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா நல்லதொரு சிங்காசனம் இருந்து அரசாள வருவதும் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 8.வானம் உள்ள தேவரெல்லாம் பூமியுள்ள நாள்வரைக்கும் மற்றுமுள்ள தேசமெல்லாம் எங்கள் அய்யா வைகுண்டராராக அரசாள வருவதும் எங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா 9.நாகவடமதிலே எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து நாலுவிதமாய் வடிவுகொள்வதும் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 10.மாயன் திருப்பதிக்குள் யிருந்து புக்கு எங்கள் அய்யா வைகுண்டராசர் யெழுந்தருளி தெருச்சுற்றி தேசத்தில் பவனிவருவது யெங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 11.கொந்தளத்துடனே வந்து எங்கள் அய்யா கூண்ட பெரும் படையுடனே கூடவரும் காளாஞ்சியோடே கோட்டை சுற்றி விளையாடி வருவதும் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா 12.கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ரானுட கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து இருபத்தி நாலிலொன்று ஏற்பதும் எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து ஈரேழு உலகமெல்லாம் ஒருகுடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 13.வைகுண்டராசர் வந்து தர்மபதியுதித்து தர்மயுகம் அரசாள வருவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 14.வாடாத பூவதுவாம் எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்துதிருப்பதிக்குள் புகுவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 15.முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து மறுமன்னர் யெதிரில்லாமல் அரசாள வருவது எங்கள் அய்யாசிவசிவ சிவசிவ அரகர அர 16.சரணம் சரணமென்று தாழ்ந்துநடந்த அன்பருக்கு வைகுண்டப்பதிதனிலே வைகுண்ட ரசராக அரசாள வருவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 17.முடுக்கன் தலையறுத்து மேகவர்ணப் பட்டும்சூடி வைகுண்டப் பதிதனிலே வைகுண்டராசராக அரசாள்வது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 18.தீத்தறுத்த மாயவனார் எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து நடுத்தீர்ந்து அரசாள்வதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 19.மாயன்திருப் பதிதனிலே எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து மேகம் சூழ்ந்த வையகமெல்லாம் ஒருகுடைக்குள் அரசாள்வது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 20.படிஉடன் நடைதனிலே பாரப் பதிதனிலே வைகுண்ட பதிதனிலே வைகுண்டராக அரசாள்வது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 21.நாலுயுகம் கொண்டு எங்கள் அய்யா வைகுண்டராசராக நாற்சொரூபம் கொண்டு தர்மபதியுதித்து அரசாள வருவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 22.குணமான ரிக்ஷிமார் வந்து பணிவிடை செய்து வைகுண்டராசராக ஏற்பது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 23.சாதிக்கு சிறையிருப்பது எங்கள் அய்யா தங்கத் திருமுடி சூடுவத எங்கள் அய்யா அட்டி சரப்பளி அணிவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 24.சக்திமுனி என்தகப்பன் சத்திகன்னி என்தாயார் தள்ளிவைத்துத் தவத்தை அளித்தவன் தரத்தை அறுப்பதுவும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 25.கண்ணு மயிலாளைக் கண்டவர் கயிலாசம் ஆளவருகிறார் எங்கு அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 26.சிங்கமுகம் தெரிந்தெடுத்துச் சேர்த்துப் படையறுக்க வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 27.சொந்தாமரை முகத்தாளுடனே தெருக்கள் தெருக்கள் தோறும் சிங்காசனம் முடித்து வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா 28.தம்புத் தடியதைக் கையில் கொடுத்து கருடனை விடுவது எங்கள் அய்யா வம்புகலியதை மதத்தை யொடுக்கி வாகன மிடுவது எங்கள் அய்யா கும்பக் குடமதில் பால்கொண்டு வந்து குடிக்கச் சொல்வது எங்கள் அய்யா செம்பொற் கவரி வீச சீமை அமைக்க அரசாள சீமைஅரசாள வருவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 29.ஆரசடலம் எடுப்பது எங்கள் அய்யா அவனிப்பகைவர்தரம் அறுப்பதும் எங்கள் அய்யா பாரகலி முடிப்பதுவும் எங்கள் அய்யா பஞ்சவர்ணத்தேர் அலங்கரிப்பதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 30.உத்தாரமும்துகிலும் உகந்து எனைநகைத்த சந்திராதியைக்குத்தி தர்மபதி அரசாள வெற்றிக்கொடியும் கட்டி வீரப்பதியிலேறி மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 31.நாட்டை நொடித்த கலினீசன் முடியை இறக்கி நாராயணர் பதியாழ்வார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 32.கல்லைப்பிளந்த கணபதி நாராயணம் செப்பைத்திறந்து திருமுடிசூடி வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 33.அக்கினியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா ஆபரணமாலை அணிவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா 34.ஆடிக்குள்ஆடி ஐமூன்று நாழிகைக்குள் அறிந்தவர் அறிந்திடுங்கோ அயல்ஓடிப்போகுமுன்னே தெரிந்தவர் தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா திரைகடல் ஓடுமுன்னே அய்யாசிவசிவ சிவசிவா அரகர அரகரா 35.பணிந்தவர் பணிந்திடுங்கோ பாலன் பதியேறுமுன்னே தூணை மலையென்று நம்பினபேர்க்கு தொட்டு நாமம்சாற்றி வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 36.தொழுத மதலையைக் கண்டு தொழுது பணிந்து நடந்தவர்க்கு நாடு நமக்கென்று யெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 37.கும்பிட்டு தவம் செய்வதற்குக் கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 38.அருள்கொண்டு முடிசூடியிருள் கொண்டு படையறுக்க வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 39.ஆயிரனாட்டுக் கொடுமுடியையும் உடைத்து துவரையம்பதி உதித்து அரசாள்வது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 40.வர்ணமணி மாலைசூடி மாயக்கலியறுக்க வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 41.நாட்டுமுடியிறக்கி நாராயணர் பதியாள வருகிறார் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 42.அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும் தெய்வாரிவடுவது முறையோம் முறையோம் முறையோம்
சாட்டு நீட்டோலை
சாட்டு நீட்டோலை தன்னை நாக்கு மூக்கொடியாமல் தாக்கி எழுதச்சொன்னேன் சிவனே அய்யா ஒதுமெழுத்துக்கும் முன்னூன்றுமெழுத் தாணிக்கும் ஊமைமவுனம் சொன்னேன் சிவனே அய்யா தெச்சனமெங்கும் போற்றநற் சடலங்கள் பார்த்து தேடித்திரிந்தேன் அய்யோ சிவனே அய்யா முப்பத்த முக்கோடி தேவரிஷியுடனே முனியும்வந் தொடுத்தாரே சிவனே அய்யா மாமுனிதாயுடனே வழியே நளடந்துவர மலர்மாரி பெய்ததுண்டோ சிவனே அய்யா திருச்சம்பதியில் புக்குத் தீர்த்தக்கரையில் செல்ல திரைவந்திழுத்துதையோ சிவனே அய்யா அலைவாய்க் கரையிருந்து தலைமேலே கையைவைத்து அம்மை அழுததை யென்னசொல்வேன் சிவனே அய்யா கடலிலே போனமகன் இன்னும் வரக்க ணோமென்று கதறியழதாள் அம்மை சிவனே அய்யா கடலும் முங்கிட துறவர் வணங்கியென்னைக் கூட்டியங்கே போனாரே சிவனே அய்யா பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம் பள்ளிகொள்ளுமிடம் சென்றேன் சிவனே அய்யா இருந்தேன் முனிதெச்சணம் பள்ளிக்கொள்ளத் தந்த வரிசையை யென்னசொல்வேன் சிவனே அய்யா இருகையும் ஏந்திட சிவலிங்கம் தந்தனுப்பி என்னையும் விடும்போது சிவனே அய்யா கடலுக்குள்ளே கண்ட அதிசயமும் தவமும் வெள்ளை காகமும்கண் டேனையோ சிவனே அய்யா கைலையங்கிரிவாசல் நிலையிங்கே என்று சொல்லிக் காட்டியும் தந்தாயே சிவனே அய்யா வைகுண்ட பதியிலே கைகண்ட வேதாவைப்போல் வாழ்வும் பாவித்தாயே சிவனே அய்யா நந்தியுடமந்திரத்தை நருட்கள் அறியும்படி ரகசியம்பற்றிவிட்டாய் சிவனே அய்யா மெய்யை நிலைநிறுத்திப் பொய்யை அடியழிக்க விடைதந்தனுப்பினாயே சிவனே அய்யா உகத்தை முடிப்பதற்கு அகத்திலும் செவியிலும் உபதேசம் வைத்தாயே சிவனே அய்யா எத்தனையோ முனிவன்பெற்ற வரமும்கொண்டு இங்கே நான்வரும்போது சிவனே அய்யா தாய்கிழவிக்குக் கொஞ்சம் அதிசயங்களைக் காட்டி சத்தியமும் கொண்டேனையோ சிவனே அய்யா உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்க கையை பொத்தி உடனமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்று சிலர் பிதற்றியும் வைக்கின்றாரே சிவனே அய்யா சிலமதலைகள் கூடியெனைவைத தெருவிலே சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா கல்கொண்டு எறிந்து வந்த மொட்டையர் தெருவிலே கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது அவன்சொன்ன தெனன்சொல்வேன் சிவனே அய்யா காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று காலைநான் கழுவினேன் சிவனே அய்யா தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தன் தோள்மேலே போடன்றானே சிவனே அய்யா இந்தப்படி யேவசை செவியிலும் நான்கேட்டு இங்கேநான் வரும்போது சிவனே அய்யா சொந்த பனைஏறி பனைஏறக்கண்டு பனைஏறி வயிறுபசிக் கென்றாரே சிவனே அய்யா பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி நான்செய்த கோலம் சொல்வேன் சிவனே அய்யா அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே அமர்ந்து யிருந்தேனய்யோ சிவனே அய்யா பொன்பழுப் பானதொரு தங்கத் திருமேனி புண்ணா உளையுதய்யோ சிவனே அய்யா மெல்லுட தாகியதோர் நல்லுடலில் அழுக்கு மெத்தவும் பற்றலாச்சே சிவனே அய்யா அடங்காத கலியைநான் அடக்க வந்ததினாலே அழுக்குமே பற்றலாச்சே சிவனே அய்யா வாடுதே யெந்தனுள்ளம் மயங்குதே திருமேனி வரவர வாடுதய்யோ சிவனே அய்யா குலைத்த தலையுடனே சலித்த முனிக்கு குறுக்கும் கடுக்குதய்யோ சிவனே அய்யா பொருதவில்லும் வைத்துநான் கூட்டுக்குள்ளிருந்து புளுங்குதே மேனியெல்லாம் சிவனே அய்யா அங்கமும் காந்துதே அனலாகி யெந்தன்மேனி அய்யய்யோ யென்னசொல்வேன் சிவனே அய்யா எங்கெங்கும் வசையாச்சே தவமுனி யான்யிருக்கும் கோலம் கண்டாயோ சிவனே அய்யா கொங்கையில் பால்கொண்டு காராவும் வந்துநின்று குடிக்கவும் சொல்லுதே சிவனே அய்யா மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே வயிறும் பசிக்குதையோ சிவனே அய்யா கப்பல் சிறிதெனவும் கடல்நான் பெரிதெனவும் கவிழந்து இருக்கலாச்சே சிவனே அய்யா பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ பாதமம் காந்துதையோ சிவனே அய்யா நீட்டி நொடிக்கு முன்னே கலியழித்து வாவென்று நீயும்விடை தந்தாயே சிவனே அய்யா சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால் சீமை அழிந்திடுமே சிவனே அய்யா ஊமைபோலிருபப்தை வாயைத் திறந்துவிட்டால் உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா எவரெவர்நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதாக இருந்து விளையாடினேனே சிவனே அய்யா மாபாவி யிறையறிந்து யாதோகா ரியமென்று பாலில்மோசம் செய்தானே சிவனே அய்யா நஞ்சிட்ட பாலைமக்கள் நற்பாலென்றெண்ணி யுண்ண நற்பாலாயிருந்ததையோ சிவனே அய்யா இப்படியிருக்கையில் சோதனைசெய்ய நீசன் எனைவாவென்றழைத்தானே சிவனே அய்யா; கட்டிலையும் கொண்டுவந்து தொட்டில் கட்டியென்னை கனமுடன் கூட்டிப்போனார் சிவனே அய்யா வழியும் விலகித்தந்து சிலதூரம் போகையில் கடல்வளைந்து கொண்டதையோ சிவனே அய்யா கரையில் திருநெல்வேலி அரகரா வென்றசத்தம் கல்லும் உருகிடும் சிவனே அய்யா அண்ணாவிதிருவம்பலம் அருள்கொண்டு கரைசேர்ந்தேன் அய்யய்யோ யென்னசெய்வேன் சிவனே அய்யா இலங்கைத் துவரயம் பதியில் திருவிளக்கு எரியவும் கண்டேனையோ சிவனே அய்யா முட்டப்பதியும் நாடும் கிட்டக்கிளம்பும் வகை முனியும்வந் தெடுத்தாரே சிவனே அய்யா ஏழைமா முனியொரு கூரை நிழலில்புக எல்லோரும் கைகொண்டாரே சிவனே அய்யா பொத்திய கைகளை சற்றே திறந்துவிட்டால் பூமி அழிந்திடுமே சிவனே அய்யா கொல்லவே என்றனையும் கூட்டியே கொண்டுபோனா கோலங்கள் பண்ணுதற்கோ சிவனே அய்யா அடித்த அடியையெல்லாம் ஆபரணமாலையென்று அகத்திலணிந்து கொண்டேன் சிவனே அய்யா கூட்டியே கையைச்சேர்த்து கட்டிய கயிற்றைநான் கொலுசென்று நினைத்தே னையோ சிவனே அய்யா பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச் சரப்பளியென்று எண்ணினேன் சிவனே அய்யா கந்தனென்றறியாமல் எந்தனைத் தொட்டடித்த கையும் தானோகலையோ சிவனே அய்யா வெள்ளித்தடியைக் கொண்டு கள்ளனைப்போலத் தள்ளி விட்டெனனை அடித்தானே சிவனே அய்யா எனைஅவன் வைத்தெல்லாம் வாக்குவாம் தானென்று நினைத்துக்கொண்டனையோ சிவனே அய்யா பாச்சைநாவியைப் போட்டு பாலென்றுகொண்டுதரப் பாலாயிருந்ததையோ சிவனே அய்யா கொடும்பாவி யென்னையும் புழுகணி அறையிலே கொண்டுபோய் அடைத்தானே சிவனே அய்யா அடைத்த அரங்கதனை அலங்காரத் தேர்ந்தட்டென்று அகத்தில் நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா இட்டமாய்ப் பொட்டகத்தில் ஒட்டகையை நிறுத்தி என்னையும் அடைத்தானே சிவனே அய்யா வதைசெய்ய விட்டபுலி அதிசயப்பட்டு என்னை வணங்கியும் நின்றதையோ சிவனே அய்யா நீற்றுக்கல் கொண்டுவந்து நீற்றிப்போட வேணுமென நீசனும் செய்தானே சிவனே அய்யா இந்த நினைப்புக்குப் பூச்சொரிகிறானென்று எண்ணி நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா நெய்யூற்றிக்கட்டையடுக்கித் தீயைவைத்து நீந்திக்கோ என்றானே சிவனே அய்யா குளியாத மேனியில் குளிக்கநாள் ஆச்சுதென்று குழிபோட்டுநின்றதையோ சிவனே அய்யா இத்தனைக்கும் சகித்த எனைமா முனியை இருத்தினான் சிலநாளாய் சிவனே அய்யா அரங்கதனில் அடைத்து வத்தல்போடத் தீவைத்து அசையாமல் இருந்தனையோ சிவனே அய்யா போதித்தேன் கூரையிலே, கேலிகள் பண்ணாதே போவென் றடித்தானே சிவனே அய்யா ஏழைமாமுனியும் யுகமாயிருந்து இருத்தினான் சிறையதிலே சிவனே அய்யா வெகுநாள் இங்கிருந்து சடையுதே திருமேனி விரித்தலையுடனே சிவனெ அய்யா கவிழந்தெந்த நேரமும் இருந்தந்த மாமுனிக்கு கழுத்தும் கடுக்குதையோ சிவனே அய்யா பிரமனைத்தேடியே முழுமனதோடிருந்து பிடரியும் நோகுதையோ சிவனே அய்யா தவமுனி பேயனைப்போல் சடையும் முனியுமாகி தலைவிரித்திருந்தேனையோ சிவனே அய்யா சன்னியாசி வேசம்போல பின்சடையோடிருந்து சடையுதே திருமேனி சிவனே அய்யா குடமுனி தானும் உடுக்கத்துணியில்லாமல் கூட்டி முடியலாச்சே சிவனே அய்யா வெள்ளபைபேன் களுக்கெல்லாம் முள்ளுமுளைத் தென் மீதில் கிடக்கலாச்சே சிவனே அய்யா தலையில் சிவமுறைந்து வடதிசை முகமாகத் தவத்தில் இருக்லாச்சே சிவனே அய்யா அம்புவியில் விளையும் பண்டம் பாராமலே அறைக்குள் விருக்கலானேன் சிவனே அய்யா வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா கிழ முனிதானுமிப்போ முடிப்புப் பகர்ந்துக் கிழித்து முடியலாச்சே சிவனே அய்யா மெத்தவும் நாளாச்சே பொத்தியே கையைச்சேர்த்து விரித்த சடையனானேன் சிவனே அய்யா ஆண்டாருடையபிள்ளை பசித்துமுகம் வாடுகின்ற அம்முகம் பார்த்திரங்காய் சிவனே அய்யா உற்றமொழி உரைக்க சக்தியுடனே நாடி ஊமைபோலிருந்தேன் சிவனே அய்யா திடமுடனே வெளியில் நடமாடும் காலதனைச் சமபளம் கூட்டினேன் சிவனெ அய்யா விரி த்த தலையுடனே பெரிநத்த கண்ணோடிருந்து வோதே மேனியெல்லாம் சிவனே அய்யா அரனும் விடைதந்தாயே கலியன் குறும்படக்க ஐயையோ யென்னசெய்வேன் சிவனே அய்யா தெற்கும் வடக்குமாகச் சந்திரனும் சூரியனும் திசைமாறி உதிக்கலாச்சே சிவனே அய்யா காரணத்தி லேதிருப்பார் கடலிலே சொன்னதொரு காரியமெங்கே விட்டாய் சிவனே அய்யா விதியிலும் பெரியசூரியன் கோட்டைக்குள் கண்ட வெள்ளைக் காகந்தா னெங்கே சிவனே அய்யா அரகரா வென்றசொல்லை கரையேறா பாவிநீசன் அறியவுமாட்டானைய்யோ சிவனே அய்யா சிவசிவா வென்றசொல் அவகட நீசருக்கு தெரியவுமாட்டாதையா சிவனே அய்யா சடைமுனி நானும் தவத்திலிருக்கிறதை சண்டாளர் அறிவாரோ சிவனே அய்யா உமையும் சிவனும் திருச்சடையுந் தரத்தில ஊமைபோல் இருப்பதேன் சிவனே அய்யா தாடியை நான்வளர்த்து கோடிப்பே னையும்வைத்துச் சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார் நான்கேட்ப தறிவாரோ சிவனே அய்யா எந்தெந்த நேரமும் இருந்திந்த மாமுனிக்கு இடுப்பும் கடுக்குதையோ சிவனே அய்யா அக்கினியில் நீயச்சொன்ன சக்கிலியன் தலையின்:னும் அற்றுவிழவில்லையே சிவனே அய்யா என்னைப்பழித்தவன் தன்னுடைய கூரையிலே இன்னும் இருப்பானோ சிவனே அய்யா கண்ணில் அடித்தானே அரனே குருவேயிந்த கலியிலிருப்பானோ சிவனே அய்யா கும்பிக்கிரைதேடிக் கொடுப்பார் முகம்பார்த்து கூடித்திரிந்ததுண்டோ சிவனே அய்யா பாலென்று குடித்ததில் நீரென்று சொல்லியதில் பாசானம் போடலாச்சே சிவனே அய்யா பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை போடாதே என்றடித்தானே சிவனே அய்யா என்மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம் ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா குலபாதகன் செய்த நியாயத்துக்கு கோபங்கள் செய்ததுண்டோ சிவனே அய்யா தேவர்கள் எல்லோரும் கயிலாசத்திலிருந்த தேர்கொண்டு அழைக்கிறாரே சிவனே அய்யா இதெல்லாம் வேண்டாமென்று எந்தன் மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே சிவனே அய்யா ஆனாலும் இன்னும் கொஞ்சம்சான்றோர்படும்துயரம் ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா நாட்டு முறையைப்போலே காசியும் காணிக்கையும் நான்வேண்டி தின்னதுண்டோ சிவனே அய்யா திருமேனி திருக்கண்ணை சற்றே திறந்துவிட்டால் சீமை அழிந்து போமே சிவனே அய்யா சூத்திரமாகவே மாலையில் நான் கண்ட சொற்பணம் ஏதோசொல்லையா சிவனே அய்யா ஆசுமதுரம் சித்திரம் விஸ்தாரமென்ற சொல்லை அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா கிறேதா திறேதா துவாரம்பகையை அழிக்க விடைதந்தாயே சிவனே அய்யா சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல் தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா மனம் சித்தம் புத்தி அகங்காரம் நாலும் அடக்கி மௌனத்திருந்திட்டேனே சிவனே அய்யா அப்புபிரிதிதேய்வு வாய்வு ஆகாயமென்ற அஞ்சுமஞ்சாச்சுதே சிவனே அய்யா நாலுமாறும் பதினெட்டும் நடசாலைக்கம் நற்காலம் போச்சுதையோ சிவனே அய்யா மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும் மோட்டி லேணியானேன்சிவனே அய்யா வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்கமொரு வாயமாயிருந்தானையோ சிவனே அய்யா அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர் சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட காரணம் சொல்லலுற்றேன் சிவனே அய்யா பெட்டகத்து விளக்கு தட்டுப்பட்டெண்ணெய்சிந்தி போகவும் கண்டேனையோ சிவனே அய்யா பாம்பைக் கடிக்க வந்த கீரியை சீறிமாறி பாம்பெட்டி கொத்தக்கண்டேன் சிவனே அய்யா பூனைபோய் யானையுடன் போர்பொருதி முன்காலால் பொத்தி யெடுக்கக்கண்டேன் சிவனே அய்யா பச்சைப்பாம்பை கண்ட வுடன் மயில்கள் எல்லாம் பதுங்கி கிடக்கக் கண்டேன் சிவனே அய்யா ஆலாகருடனையும் சிட்டிவேடிப் பறந்து அடித்து எடுக்கக்கண்டேன் சிவனே அய்யா மயில்கண்டாபோலே பச்சோந்திகளெல்லாம் மயங்கி கிடக்கக்கண்டேன் சிவனே அய்யா ஆடுபோய் மாடுடனே அலறவேமாக்கு போட்டு அது போர் செய்யக்கண்டேன் சிவனே அய்யா பச்சைப்பிள்ளையை வொக்கரையிலெடுக்க பாம்பா நெளியக்கண்டேன் சிவனே அய்யா கடலெல்லாம் குளமாக குளமெல்லாம் கடலாக கண்ணுக்குத் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா ஊசிமுனையதிலே கடலும் மலையுடனே ஊரும் பதியுங்கண்டேன் சிவனே அய்யா கோரைக்குருத்துக்கள்ளே தாரணிதன்னிலுள்ள குடிகளும் வாழக்கண்டேன் சிவனே அய்யா திரைக்கடலில் சிறுமீன் பெரியமீனைப் பிடித்துத்தின்னவும் கண்டேனையா சிவனே அய்யா ஈரத்தின்மேல் கிடந்த ஆடையை அட்டைகண்டு எடுத்து விழுங்கக்கண்டேன் சிவனே அய்யா போர்வெள்ளைக்கொக்கு புழுத்திங்க போனயிடத்தில் புழு வெட்டிக்கொத்தக் கண்டேன் சிவனே அய்யா பூமாலையாகக்கட்டி தோள்மாலையாக போட்ட பூவும்தான் வாடக்கண்டேன் சிவனே அய்யா முடுக்கன்மார் பெற்ற மக்கள் தூக்கம்வைத்த பாயதிலே மூச்சோடி போக்கண்டேன் சிவனே அய்யா புலியை எலிபிடித்து கலியில் பொசிப்பதற்கு போதமும் கண்டேனையோ சிவனே அய்யா முள்ளுமுனையதிலே குளம்வெட்டிவயலும் பாய்ச்சி முன்மடை பாயக்கண்டேன் சிவனே அய்யா உப்புவிளைந்து வரும் நஞ்சை நிலங்களெல்லாம் உபரு வழியக்கண்டேன் சிவனே அய்யா சட்டிகாய்க்கு கொம்புமுளைத்து கோழியுடன்போர் பொருதக்கண்டேனையோ சிவனே அய்யா நாடுதனில் திரிந்து வாயல் காக்கும் நாயைநரிவந்து கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா சாவல்கோழியல்லோ கூவுமென்றுசொல்வார்கள் பெட்டை தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா உண்டமயக்கத்தில் உறங்கப்போன உயிர்வோடிப் போகக்கண்டேன் சிவனே அய்யா மூட்டைக்கடித்தால் பாம்பு விசம்போல மோசம் போகக்கண்டேன் சிவனே அய்யா. பெற்றதாய் பிள்ளையை முன்வைத்துப்படுக்கையில் ஈனாபேச்சிவந்து தின்னக்கண்டேன் சிவனே அய்யா கருங்கும்பலா யிந்த பயிர்களைத்தான் பெரிய கடல் வந்தழிக்கக்கண்டேன் சிவனே அய்யா பாகல்போடவே சுரையாய் முளைத்துவர பாகமும் கண்டேன் சிவனே அய்யா பெருத்த ஊரில் உள்ள குருத்தைக்கடிப்பதற்கு பேய்வந்து சூழக்கண்டேன் சிவனே அய்யா முனிபெற்ற பிள்ளையைச் சுண்டெலி தானும்கண்டு முடுக்கிக் கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா கிளைசேர்ந்து ஆடியில் கூடிய யெலிகளெல்லாம் கிடைகலைந்து ஓடக்கண்டேன் சிவனே அய்யா மாபாவி போடுகின்ற திருமுத்திரி அவர்க்கு வாச்சியாய்த் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா கொடிமுடியிடிந்து விழும்போது கொம்மட்டிக்காய் குறுக்கவே தாங்கக்கண்டேன் சிவனே அய்யா கடுகைத்துளைத்து அந்ததுளைக்குள்ளே நின்றதண்ணி கடல்போல் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா கலியுகம் தன்னிலேதேடியே போட்டநகை கழந்தோடிப் போகக்கண்டேன் சிவனே அய்யா ஒருமாதத்துக்குள் பிள்ளைதரித்துப் பிறந்து உருமாலும் கட்டக்கண்டேன் சிவனே அய்யா இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா கோழிக்குஞ்சுகளெல்லாம் கூட்டை விட்டெழும்புமுன் கொம்பு முளைக்கக்கண்டேன் சிவனே அய்யா பசுவும் கன்றும்போக கடுவா யதைக்கண்டு பதுங்கிக்கிடக்க கண்டேன் சிவனே அய்யா சடைநாய் முழுத்தேங்காயை கவ்விக்கொண்டுபோய் தகர்த்துமே தின்னக்கண்டேன் சிவனே அய்யா நரியன்மார், கூடி யிரையெடுக்கப் போக நண்டு விரட்டக்கண்டேன் சிவனே அய்யா; வீட்டெலி கூடியே பூனைதனைப் பிடித்து விருந்து அருந்தக்கண்டேன் சிவனே அய்யா இப்படி நான்கண்ட சொர்ப்பண வித்தேசங்கள் இந்தக் கலியழிக்க சிவனே அய்யா ஆனாலும் இன்னுங் கொஞ்சம் சான்றோர்படும்துயரம் ஆறுமே தேறுமோ சிவனே அய்யா அம்மை பிறந்ததும் உண்மைதான் எல்லோர்க்கும் அனுகூலக்காலம் ஆச்சே சிவனே அய்யா வினையற்ற சண்டாளன் வகைகேடு செய்தாலே மெலெல்லாம் கூசுதையோ சிவனே அய்யா தோசியெந்தன் மைந்தர்களை யேசினபடியாலே தோலேழும் கூசுதையோ சிவனே அய்யா கலியுகத்தில் நானும் வலியவர்களைப்போலே காசுக்கும் அலைந்ததுண்டோ சிவனே அய்யா முக்காலும் காணிக்கைகள் வேண்டி மடப்பள்ளிகள் முடிக்கவும் சொன்னதுண்டோ சிவனே அய்யா உளள்வனுக்கென்றென்றும் இல்லாதவனுக் கென்றென்று ஓரங்கள் சொன்னதுண்டோ சிவனே அய்யா வானமும் தலையாச்சே பூமிதான் காலாச்சே வடிவம்தான் வெளியாச்சே சிவனே அய்யா சந்திரன் வலதுகண் சூரியன் இடதுகண் தானாகும் நாளாச்சே சிவனே அய்யா சூத்திரம் இடம்வலம் கற்றவாறோமென்று\ சொல்லுவதெப்படிகாண் சிவனே அய்யா எவரெவர் இருந்துமணியம் பண்ண வேணு மானாலும் எந்தன் முக்கால் அடிக்குள்தானே சிவனே அய்யா எப்போது கூவுமென்று இருக்குதே யெந்தன் நெஞ்சு இன்னும் விடியல்லையோ சிவனே அய்யா நொடிக்குள் முடிந்துவிடம் விஞ்சைகள் இங்கிருக்க நோகுதே திருமேனி சிவனே அய்யா வட்டக்கிலுகிலுப்பைத்தட்டி முடிந்துவிட்டால் வையகமழிந்திடுமே சிவனே அய்யா கைதட்டும் பொழுதோ கண்தட்ட நேரமோ கலியனிருப்பதெல்லாம் சிவனே அய்யா காடுநாடாகு மென்று நாரணன் சொன்னசொல் காலமும் சரியாச்சே சிவனே அய்யா நாராயணர் எங்கும் தாராளமானாரென்று நகரெங்கும் பேசலாச்சே சிவனே அய்யா கலியோ விளைந்துபோச்சு சக்கரா யுதத்துக் கிரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா மெத்தவும் யெந்தன் மக்கள் உற்றபித்தளைவிற்று வீட்டையும் விற்கலாச்சே சிவனே அய்யா மூணுநேரம் துவைத்து ஒருநேரம் அன்னமுண்ண முனிமார்கள் பெற்றமககள் சிவனே அய்யா கடப்பாக்கொடியைத் தின்று கடலிலே தண்ணீருண்ண காண்பாரோ நீசரெல்லாம் சிவனே அய்யா அண்ணர்க் களந்தபாலை இடித்தக்கரை காவல்காரன் அவிழ்த்துப் பார்க்கலாச்சே சிவனே அய்யா கனமுடன்முத்தமிடக் கொடுத்தகன்னத்தை நீசன் கவ்வியிழுத்தானையோ சிவனே அய்யா காராம்பசுவதனைக் கங்கைக்கரையில் கொல்லக் கண்ட கலியாச்சே சிவனே அய்யா துரியோதனனும் பஞ்சவரும் சேர்ந்து ஒருவயிற்றில் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா பதினெண்சாதியும் ஏழைச் சான்றோரை வசைப்பறைத்து போகலாச்சே சிவனே அய்யா சான்றோர் வயலிலிருக்க நீசன் வயலில் தண்ணீர் பாயக்கண்டேன் சிவனே அய்யா எதிர்வாய்க்கால் தண்ணீர் குறுக்கே விழுந்துபாய என்னத்தைக் கொண்டடைப்பேன் சிவனே அய்யா மக்களுக்காக இருந்தேன் சிறையதிலே வைகுண்டம் தேடுதே சிவனே அய்யா நாளும் குறுகலாச்சே நருளும் பெருகலாச்சே நாமும் சடையலாச்சே சிவனே அய்யா பத்திரமா காளியுடன் கன்னிமார் ஏழுபேரும் பரல்யேழும் கேட்கிறாரே சிவனே அய்யா கலியுகம் முடிந்துபோச்சு சக்ராயுதத்துக்கு இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா கூடும் சடமும் கூட்டோடே கொஞ்சம் கைலாசபுரமிருக்க சிவனே அய்யா வீடும் பதியும் விளையாடும் விண்ணோர் கண்டு மனம்மகிழ சிவனே அய்யா ஆளும்படிதான் அய்யா வங்கே ஆனநஞ்சிப் பொய்கையிடை சிவனே அய்யா சூதுபடியாய் விளையாடிச் சொல்லி முடித்தோம் துரோபதைக் குன்றிமக்கள் ஏழுபேர்க்கம் கொடியசாபம் நீங்கிவிடும் காசிக்கலயங்களும் கல்லறையும் பொன்பணமம் குத்துபிடித்தவனைக் குரங்காட்டம் பார்த்துவிடுவேன் ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன் மண்ணளந்த மாயனுட வலுவை அறியவே ஆனிமாதம் மூணுஏழு விபரம் நாடு அறியவும் பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில் மூணுநாளை ஆட்டுக்குள்ளே முன்னும்பின்னும் அடைக்குமே காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள் \ வீரவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம். சாட்டு நீட்டோலை முற்றிற்று.
சத்த கன்னிமார் பாடல்
விருத்தம் முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே மூவரிய தெய்வகன்னி யேழுபேரும் தன்னரிய நாரணரை தேடித்தேடி தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்த தென்னிலங்கை மணவைநகர் பதியிதான் சீமைபதி தெட்சணத்தில் சென்றுகண்டு மன்னவனும் தேவியுமாய் மகிழந்தஞாயம் வளமையுடன் கதையாக வகுக்கலுற்றார் வகுப்பதற்கு இன்னதென்றறியேன் நானும் வகைவிபரம் நீரருளி வரமேதந்து தொகுப்பதற்குச் சிலம்பிதுவே துணையாமென்று இடமதிற்கில் லாமலீடேறத் தீர்த்து எப்போதும் எனையாளும் எம்பிரானே யுகபதியில் மேவியுதித்தெழுந்த நாதா உன்உவமை சொல்லுதற்கு உதவிகாப்போம் நடை காப்போம் சிவபர ஆதிநாராயண கண்மணியானவரை கன்னிமார்பாடலுக்கு முன்னைவினைத்திடகல்விக்குதவுவாயே சேர்ப்பாயுந்தன் அருள்சிந்தையில்வைத்திருந்த தெய்வமடவார் திருக்கறைத்கூறச் செயல்குருநீயல்லாமல் சீமையிலாருளாரோ முக்திபெறும் தெய்வமாதர் ஏழுபேரும் முன்னாக்கு காலமெல்லாம் முண்டவனத்தில் கூண்டுதவம்செய்து முற்றும்நிறை வேற்றி பக்தியுடன் நற்சொல்ல வைத்துப்படிமுறை தப்பாமல் பாரானதெட்சணமீதானதில் வந்துபண்பாக கண்டுமையும் வாதாடியவர்பெற்ற மக்களைக்கேட்டுன்னைவருடியே நாள்தோறும் சீரானமக்களை யீந்துபின்னேழ்வரைச் சேர்த்துமணமருளி தேவியும்மக்களும் மன்னவராகி நீர்சீமைதனை ஆண்டுதவும் பண்பான இந்த கதைபடிப்பேனென்ற பாவவினை யானதெல்லாம் பறக்கும்கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்து போலோக்கும். குயில்நின்று கூவிட மந்திகுரங்குகள் கூப்பிட்டதொக்கும் மன்றோ கூறும் செந்தமிழ்ப்பாவணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா குற்றமதி லொன்றும்வராமல் காத்திடக்கர்த்தனருள்வேணும் கூடும்பரவெளி ஆனந்திமார்தேவி கூடியருள் புரிவாய் சித்தமிரங்கியே தேவிமனோன்மணி சிந்தையிலேருந்தும் சொல்லும் கதைகனக்கல்லல் வராமலே தோகையருள் புரிவாய் ஆண்டவளாம்அரி நாராயணருடன் உலகில்மிகவாழும் ஆதிபராசக்திதேவி ஏழுபேரும் அன்பாயிதற்குதவும் கூண்டபுகழ்பெற்ற சான்றோரையீன்றகோதை ஏழுபேரின் கோலத்திருகலியாணத்திருக்கதைகூற என்குரு நாதனிது காப்பதாமே விருத்தம் சீரணி மாயன்றானும் தெட்சணம் மீதில்வந்து காரணமான கன்னிமார்கள் ஏழுபேரை நாரணம் முகூர்த்தம் செய்ய நாடோருகுடைக்குள் ஆண்ட காரணம் தன்னைக் கூறகமலப் பூமகளேகாப்போம் நடை சீரானகன்னியர்கள் சிவலோகம் சிவனார்க்குபூசைசெய்து நேராய்மிகவிருக்க அந்தநேரிளைகன்னிமார் ஏழுபேர்களும் நாராயணர் தொடர்ந்து அந்தநல்லவனத்தில் சுனையருகில் ஆரார்மிகவறியார் அருவனம் பூஞ்சுனையானதிலே போகாவவ்விடம்தனிலே அந்தப் பெண்கள் குளிக்கும் சுனைப்புதுமை வாயால்தொகுத்து உரைக்கயிந்த வையகமதில் யாதுளதோ தேவர்மிகப்போகார் தெய்வேந்திரன் வானவர்போகவறிவார் மூவரும்போகறியாரி முனிசித்தாதிமார்களும் போகறியார் ஒருவர் கண்காணாத அந்த உற்றசுனைக்கரையானதிலே ஆலிலைமேல்துயிலும் நல்லவச்சுதன்பச்சைமாலங்கே சென்று ஏலமடவாரின் துகிலெல்லாம் எடுத்தொரு ஆலதின்மேல் ஒளித்தங்கே வைத்ததும் ஒண்ணுதலார் கன்னிஏழுபேரும் குளித்தோடி அக்கரையில்வந்து கோலங்களைப் பார்க்கும் வேளையிலே காணார்துகில்தனையும் கருமேகத்தை நோக்கிய ஆலமரத்தை அண்ணாந்தவர்பார்த்து ஆடையைபார்க்கவே நோக்குவேளை கண்டாரே ஆலமரத்தில் அவர்க்கானது கிலடையாளமென்று கொண்டாடி கன்னியர்கள் கோ! கோ! கோ! என்ன கொடுமையென்பர் எடுத்தாரைகண்டிலமே இதுஎன்மாயமோ பெண்ணரசே கடுத்தானகற்பினையோயிது கம்மாயோ பெண்கன்னியரே பூமிதனிலிருந்தும்நம்பொற்றுலகில் ஆலில்பறந்தென்ன சுவாமிசிவனர்க்கு பொல்லாத தோசத்தை செய்தோமோ கர்மவிதிப்பயனோ வேதன்கட்டளையிட்டபடிதானோ நம்துகில்பற்து நடு ஆலமரத்திலே போயிருக்க என்னவிதிப்பயனோ எடுத்தோரை கண்டிலோம் பெண்ணரசே உன்னியெடுப்பதற்கு ஒருஆளையிங்குகண்டிலோம் என்றேமிகப்புலம்பி கன்னியேழுபேரும் மிகத்திரண்டு ஈசன்யெலென்று மரத்திலந்ததேவிமார் ஏறவேணுமென்றே மிகத்துணிந்து நல்லஏழினுள்கன்னி இளையவளும் கூறிதுயிலெடுக்கும்வேளை கோலதிருமால்ஒருகோலம் கொண்டார் கொண்டதோர் கோலம்தன்னை அந்தகோதை ஏழுபேரும் கண்டிருந்து இன்றே கைவாச்சுதன்று யெரிக்கதுணிந்ததாரே நாரணரை தீப்போல்மிகமிகவாவி அந்த சொந்த சுனைக்கரையானதிலே வெயில்போல் கொழுந்துவிட்டுமுனி நல்லகனலாகிகிடந்தார் கண்டந்தகன்னியரும் கனலாய்எரிந்துவிடோமென்று சொல்லி கொண்டாடிக்கன்னியர்கள் பின்னும் குக்களித்துக் சுனையாடவென்று துகிலைக்கரையில் வைத்தஅந்த தோகைச்சுனையில் குளித்திடவே வெயிலான மாயவருமொரு உபாயம்நினைத்தார் உலகளந்தார் இனியிந்தகன்னிகட்குமெத்தவேவிறையலை தான்கொடுத்து தணியாத அக்கினியைவந்துதழுவிட கற்பையழிக்கவென்று நினைத்தே வருணனையும் நெடுவாயுவை அங்கேவரைவழைத்து நினைந்தே விறையல்கொண்டு நண்ணுதல்மாரேழுபேரையிப்போ மசக்கி கொடுவாவென்றொரு மாயமதுக்கு விடைகொடுத்தார் திசக்கியமாயமது அந்ததேவி ஏழுபேர்க்கும் சென்றதுவே அப்போதங்கே அருணன் ஆகாசமீதிலே நின்றுகொண்டு பொற்பொறி நரல்போல் வந்த பெண்களின்மேலே தூவினனே தப்பாமால்வாயுவும் வளர்சரீரம் விறைக்கவே வீசனனே மெய்யானகன்னியர்கன் மெத்தவிறையலாலுளும் நடுங்கி ஒடுங்கி மிகக்கொடுகி யந்தஉள்ளம் தடுமாறும் பெண்களெல்லாம் இந்த விறையலுக்கு நாம்ஏது செய்யப்போகிறோம் பெண்ணரசே சிந்தையகுதடி உடல்சிலிர்க்கு முகமெல்லாம் வாடுதடி ஆராருசெய்தததுவோ பெண்ணே ஆட்டம் பொறுக்கமுடியுதில்லை கூரல்மிகக்காய ஒருகொந்தணல் தன்னிலும் காணோமே காணாமே பெண்ணரசேநம் கர்மவிதியது தங்கையரே வாணாளயருதடி யென்று மாதுகன்னிமார் ஏழுபேரும் பார்க்கின்றவப்பொழுது அந்தபாரான ஆவிக்கரையருகில் தாக்கின்ற அக்கினியும்தணல்போலே குமறி யெரிந்திடவே கண்டு அகமகிழ்ந்து நல்லகாரிகை கன்னியர்ஏழுபேரும் பண்டுமறைந்தநிதி நல்லபண்பாகக் கண்டபாவினைபோல் வந்துகுளிர் காயந்தது நல்லமங்கைஎயெழுபேரும்போவோமென்று பந்துதனம் உடையாரந்த பாவையேழுபேரும் சம்மதித்து வந்துமிகக்கனலை வட்டமிட்டே வளைந்துகொண்டு சந்துஷ்டியாய் மகிழந்து தணலை ஆவிமிகத் தானிருக்க கொண்டாடி மாயவனார் ஒரு கோலமதால் கொள்ளைகொண்டு பண்டாரம் மகிழ்ந்திடவே அந்த பாவையேழுபேரும் கர்ப்பமுற்று அண்டாமல்தான்நீங்கி இவரோவெனவே எரிக்க உன்னினரே கொண்டாடித் தாக்கிடவே அந்த,கோதையின் கற்பிழந்து எரிக்கமதியழிந்து அந்த, ஏலங்குழலாரியல்மறந்து மதிக்கொத்தமாமயிலார் மாமுனியைக்கண்டு மதிஅசந்து அய்யோநம்பெண்ணரசே நம்மறிவுகுலைந்தோம் ஆயிழையே இத்தனைநாள்வரைக்கும் நாமிருந்த நெறியும்குலைந்தோமடி சத்திக்குமீசுரர்க்கும் நாம்சாற்றும்மொழியேது தங்கையரே வனத்திலேவந்தயிடத்திலிந்த மாயம் வருவதறிந்திலமே புனத்தில்கிளியன்னமும் நம்பேச்சும்கேட்காமல் போகுதடி என்னவிதிவசமோ நமக்கிட்ட விதிமுறையிப்படியோர் அன்னமடவாரேயிது யார்செய்த கைமசக்கானதுவோ என்றே மிகப்புலம்ப முனியேற்றின கர்ப்பமுருத்திரண்டு அன்றே ஒருமணிக்குகர்ப்பம் அவதரித்தங்கேதான்பிறந்து பிறந்தபொழுது பெருமூச்சுவிட்டார் ஆயிழைமாரெல்லாம் மறக்கமதிமயங்கியந்த மக்களைப்பாராமல்மாமடவார் நாணிமிகவயர்த்து காடு நாட்டுடேபோவென்று கோணிமடவார் கோகோகோவென வோடலுற்றார் ஓடினார்பெண்களெல்லாம் ஒருநொடியதில்நில்லாமல் தேடினார்வானத்தினூடே சிவசிவா சிவனேயென்று கோடியேமடவாரெல்லாம் கொண்டதோர் நாணத்தாலே வாடியேபுலம்பிமாதர்வனத்தை நோக்கிப் போகின்றாரே அய்யா வனத்தில் சுனையாட அங்கேயிருந்து வரும்போது மெய்யோவறீய வழியிலொரு விசனத்தீங்கு கண்டிலமே பையோடரவு மிகவணிந்தபரமன் கயிலைக்கேகவென்றால் ஓடுவர் கன்னியர்களெல்லாம் பதறிஓம்நகச்சிவாயவெனவே நாடுவார் நமக்கிவ்விதம் நன்னுதல்மார் ஏழுபேருமோடினார் விருத்தம் பொர்பவனத்தில் குளித்ததும்போச்சு பென்னார்கயிலை வாழ்ந்ததும் போச்சு கற்போகுலைந்துபல கோலங்களாச்சு காட்டில்பயந்திருக்கவே விதியாச்சு என்னயென்ன பாவத்தைச் செய்தோமோ கண்ணேயிவ்விதி வந்தறியோமோ வன்னசிவனார் நம்மைமறந்தார் மாதுமைத்தாயும் நமைமறந்தாரே என்றந்த கன்னி யேழுபேரும் யியல்பாய் வனவாசம் போனார் சென்றந்த வனவாசம் கண்டவர்மறைந்து சிவானர் அருள்பெறவே தவசிநன்றாரே நின்றதவத்தின் நிலைமை கூறிட நித்தமேயுன்சித்த மருள்செய்வாயே மக்களையீன்றுவந்த மாமுனியருகில்வைத்து வெட்கமும்மிகவேயாகி விழிநுதல்யேழுபேரும் சிக்கெனவானத்தில் சென்றவரேழுபேரும் அம்மையருள்பெறத் தவசி நின்றார் நின்றார் நெடுகான வனமானதிலே நித்தம் கற்றோனை சித்தம்வைத்தே வண்டாடும் பூஞ்சுனையில் மாதேழு பேருங்குழித்து நித்தம்வருகையிலே கோலம் வேறாகின தாலிவ்வனத்திலே சிவனேதஞ்சமென்று மெங்களை ஆளவருவாயே நடை வருவாய் வருவாய் நீ மகாபரயீ சுவரனே வந்தெங்கள் சங்கடம் தீர்த்தாட்கொள்வாயே செவ்வாய்க்கருமேனி சிறீபத்ம னாபதிலே சென்றேகடலில் துயன்ற பாரளந்த் சிறீபாதமே துணையாம் ஐயவர்க்குதவுவோனே ஆதிநாராயணனே இந்தவரத்தைதந்தருள் செய்யவேண்டும் பச்சைமாலே தென்கடலில்துயின்ற பாரளந்த சிறீபதமே துணையாம் ஆடரவில்துயிலும் சிவஐங்கரா சங்கரனே ஆலிலையில்துயிலும்நாதனே ஆபத்துக்காத்தருள்வாய் மனதிலறியாமல் நாங்கள் மாது ஏழுபேரும் வந்திடும்தீவினை அகற்றிடவே அருள்மாதுமைபாகனே இனிதுயர் தீர்த்தேழுபேர்களும் யீன்றவைத்த மதலையைத்தந்திந்த ராச்சியமும் ஆளவரம் தாருமய்யனே பண்டூசல்செய்த முனியவர்பாரியாய் எங்களையும் பண்பாகக்கலியாணயின்ப முடன்செய்து பாராளுதற்குவந்தருள் செய்யவேணும் சிவசிவமாது மணவைநகர்ப் பதியில் வாழ்பவரே மேட்டுலாடமதில் மெல்லியர் கண்ணாட்டி மேலுடலெல்லாம் பொருமித்துநயனத்துவில்விளைத்ததில் ஐந்துபூவைபக்கட்டி நாற்பத்தொன்றுபத்து ஆவிமடக்கி சயனமதில்மேவளர்த்ததபாக நாடித்தங்கள்தங்கள் வாக்கிலொரு சீர்நாட்டிதிலோர் விரலைநாட்டி மனம்நாட்டி நாக்குச்சுழிதாக்கி நுனிமூக்கில் விழிநோக்கி நல்லறிவைக்கொண்டு கல்லறிவைப் போக்கிவாக்கி சித்தியாயநோக்கி மடவார்வாசமெல்லாம் அடைத்தொரு வாசல்நோக்கிப் பஞ்சணையில் வஞ்சியைமிஞ்சவே இருத்திப்பார்க்கும் லாடமதில் நோக்கிநின்றார் ஏழுபேரும் இந்த நிட்டையாக பன்னிரண்டுவருடம் காலிழகாவண்ணம் தவசிநின்றார் நின்றுதவசில மண்டலரைக்கண்டு தேவரெல்லாம் நெட்டூரமித்தவன்தான் கட்டுட் டென்பார் மண்டலத்தில் யித்தவம்போல் கண்டறியோம் கேட்டறியோம் விண்டறியக்கூடாத வெற்றி! வெற்றி! மேலோர்மெச்சினார் அப்படியிருக்க ஆனகயிலைதன்னில் அம்மையுமையும் தானேறிந்து தானேது சொல்வாள் செப்பமுடி யாததவம் தேவியேழு பேரும் நற்புடைய யீசுரரைச் சென்று தொழுதேற்றி நல்லகன்னி மார்புதுமை நவிலலுற்றார் மாது கேட்டறிந்த யீசுரரும் கெட்டி கெட்டி யென்ன கேட்டாயோ வுனதண்ணர் நாட்ட மிதுவென்றார் வட்டமிலாப் பூஞ்சுனையில் வந்தவரைத் தொட்டு மாயஞ்செய்ய யேதுவினால் வந்தஞாயம் பெண்ணே நாட்டமுட னிந்தகதை பார்க்கப் போகவென்றால் நாரணர் வாராமல் நாம்போவ தேதோ கேட்டந்த யீசொரியும் கெட்டிகெட்டியென்று கெருடாழ்வா ரைநினைக்கக உடனே யவர்வந்தார் உற்றாயுங்கள் அண்ணருடைய ஊர்வளமை யெல்லாம் உரைத்துவிடு வென்றாரே உலகளந்த மாதை சித்திரம்போல் பஞ்சவர்க்குச் செய்த உபகாரம் சிலகாலம் அங்கிருந்து சென்றார் வனத்தூடே வீரமுள்ள தெய்வகன்னி மாரைவன மீதில் வித்தியாதர முனிபோலே வேசமொன் றெடுத்து கூதலையும் கொந்தலையும் கோதையர்க் கேவி கூத்தாடி மாயவனார் கொழுந்துதீப்போ லானார் அக்கினி வேசம் கொண்டு அவர்கிடக்கும் மாயம் ஆரமணி கன்னியர்கள் கூதல்பொறுக்காமல் முக்கியமாய் அக்கினியை மோந்துவளைந் தனரே முன்மோகம் மிகத்திரண்டு மூன்று நாலுப்பிள்ளை பெற்றுவிட்டுக் கன்னியர்கள் மூச்சுவிட்டு வோடி மீளும்சுனை தானிழந்து பெண்களேழு பேரும் அத்துவனக் கானகத்தில் அருந்தவசு நின்றார் அண்ணரொரு பிள்ளைதனை ஆவியுமே யெடுத்து நாணாமல் பிள்ளைக்கு நாமம் சாணானென்று நாடுபதி னாலறிய நாமமதுவிட்டு காணாத கற்பகப்பால் வையதிலே கொடுத்து காளியென்ற தேவியுடைய கையில்மிக வீந்து வளர்த்துத்தரு வாயெனவே வாக்குமிக வாங்கி மாமுனியும் ஓர்மலையில் மானாகச் சென்றார் இளைத்துத்தளர்ந்து கூட்டையதில் போடவென்று எண்ணிவிட யெம்பொருமாள் எய்துவிட்டான்வேடன் வேடனுக்குப் புத்திசொல்லி பஞ்சவரை வருத்தி வீரத்தனமெல்லாம் தண்டாலே யவர்வாங்கி சூரமுள்ள கூட்டையதில் தான்கிடத்திப் போட்டுச் சூத்திர மாயவரும் ஸ்ரீரங்கம் மேவிச்சென்றார் இப்படியே யுள்ளவரலாறான தெல்லாம் ஆதிகருட ஆழ்வாரும் அம்மையுடன்சொல்லி இப்போது கூட்டி வாறேனம்மா எனக்குவிடைதந்தால் என்றடி பணிந்துகருட ஆழ்வாரும்நிற்க நல்லதுதான் அண்ணருடைய அதிகத் திறங்கேட்டோம் நாலுமணி நேர மாதிநாராயணரைக் கூட்டிகொண்டு மாதுபார் வதிகயிலை வாழ்ந்திருந்தாளே கயிலையில் மாதுதானும் கட்டுடனிருக்கும்போது ஒயிலுடன் கருடனும் ஒருநொடி தன்னில்சென்று அகிலமும் அளந்தநாதன் அவரையும் கூட்டிவாறேன் கயிலையில் வந்துஞாயம் கட்டுடன் உரைக்கின்றாரே பரிதனக் குதவுமாயப் பாவைய ரேழுபேரும் திறமையாய் தவசிபார்க்க சீர்தனைச் செய்யுமென்றார் கறைநிலை உமையாள்கூடிப் பார்க்கவே தன்னைக்கண்டு தவம்தன்னையேற்றாம் வாருங்கோ வெளியிலென்றார் வெளியே வந்துமாது விளக்கமே தீர்த்தோமென்று தெளிவுடன் வெற்றியோங்கி வாழ்வைநீதருவாய்போற்றி விருத்தம் சீதமாங்குணச்செல்வனே போற்றி சிவசிவாசிவனே போற்றி நீதவாநனிநடப் பெய்துவாய் போற்றி நீ சிவசிவராகவா போற்றி மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரி செல்வனே போற்றி ஆதவா அரிநாராயணா போற்றி ஆதியே உந்தன் போற்றி போற்றியே மூவர்தேடியும் முற்றாதமுதலின் திருத்தாள் பதம்போற்றி தேவர்க்கரியதிரவியமே தெய்வமுதல் வேதச்சுடரே காவகரியவனமதிலே கற்பை அழித்துக் கைவிட்டகன்ற தாவாதுணையேயென்கணவா தயவேஉனதுபதம் போற்றி தீர்த்தோமெங்களைத்தானும் திரும்பக்கயிலைகழையாமலவர் சார்ந்தோரெமது கணவரையும் தந்தேதரணி அரசான தேர்ந்தேபயின்ற சிறுவர்களின் சிறப்புஏதும் குறையாமல் வாழ்ந்தேயிருக்க வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே மாட்டி லேறும் மகாபரனே மாது உமையார் பங்காளா காட்டிலடியா ரேழ்பேம் கற்றா விழந்த பசுவது போல் ஊட்டி உறக்க மில்லாமல் ஊமை கண்டக் கனாவது போல் வாட்ட மறிந்து மனமிரங்கி வந்தாய் கவலை தீர்ந்தோமே நடை நாரணரேநீரும் நல்லபெண்கள் யேழுபேர்க்கும் சீரான வரங்கள்செப்பி அனுப்புமென்றார் உடனே நாராயணரும் உள்ளம்மிகக்கழித்து மடமாதேபெண்ணே மக்களுடதன்வழியில் சான்றோரிடமேதான் பிறந்து கன்னியர்களாய் இருக்கும்சமயம் யான்வருவேன் தெச்சணத்தில் தெச்சணத்தில்வந்து சிறந்த தவம்புரிந்து தவத்தைநிறைவேற்றி தானிருக்கும் வேளையில் உங்களையும் வருத்தி உற்றமணம் புரிவேன் இருபேரும்மக்களை எடுத்துபுவி ஆண்டிடலாம் தந்தோம் வரங்கள்தான் பிறங்கோ பெண்ணோயென்றார் விருத்தம் தந்தார் வரத்தை வாங்கித் தார்குழலேழுபேரும் முந்திநாமீன்ற பிள்ளை மெய்க்குலம் தன்னில்தோன்ற மைக்கழல் மார்களெல்லாம் மானிடர்வழியே வந்தார் மேற்குலம் தன்னில் மாதர்விருப்பமாய் வாழ்ந்தாரன்றே
பத்திரம்
அய்யா சீசருக்குச் சொன்ன ஆகமம் தர்மசீசர் தன்கையிலேதான் கொடுத்து வாமகனே! நாம். காப்பிட்டகையைக் கடுகச்சொல்லும் பேர்களுக்கு நாம். கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன் மகனே! நாமாடி வந்த ஆட்டமெல்லாம் அறைக்குள் பூந் தொளித்துயினி ஆட்டமில்லாக்கூட்டம் இனக்கூட்டம் தேரோட்டம். அந்தந்த தலங்களிலே ஆடுமந்த பேர்களையும் ஆடாமலேயிருந்து அறிவுசொல்லி வாமகனே! இது, பரலோக வார்த்தையெல்லாம் பூலோக வார்த்தையில்லை. இதை, மெய்யென்று சொன்னவர்க்கு மேலோகம் தோணப்படும். அம்மையுமை பார்வதியும் அறிவுசொன்னாள் என்மகனே பள்ளியறை தனிலேவந்து பகர்த்தெழுதிதான்கொடுத்து இது உள்ளபடி யென்றுசொல்லி உகந்துவா என்மகனே நாம், கூப்பிட்டுக்கொண்டு சமுத்திரத்துக்குள்ளிருந்து நாம். கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன் மகனே! கடைசியில் ஒருபதிதான் கடலுக்குள்ளிருக்குதப்பா. அது துவர யம்பதிதான் துலங்கும்பதியதுதான். சட்டங்களும் கூட்டங்களும் 'தானமா னங்களும், அதை, பெற்றவருக்குக் கிட்டிக்கொள்ளும் பேதகமில்லை மகனே! பக்தியுள்ள மக்களுக்கும் புத்தியுள்ள மக்களுக்கும் பயங்கள் தெளித்துவைப்பேன் பதறாதே என்மகனே! முட்டப்பதி தீர்த்தம் முழுத்தீர்த்தம், ஆகவில்லை கிட்டவரும் நாளையிலே கிட்டும் அதிகபதி யென்மகனே! வட்டவட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க நாம்,இட்டபடி சட்டமெல்லாம் கூடிவரும் என்மகனே! நாம் எழுந்தருளும் வேளையிலே அங்கங்கே உள்ளசனம் எல்லோருந்தான்வருவார் என்மக்களே நீங்களுந்தான். அத்திபுரந்தனிலே ஐபேருந் தானிருந்தார். புத்தியுள்ள குருநாட்டில் பிறந்து வந்தேன் யென்மகனே! பட்சிமிருகங்களும் பலஜீவ சந்துக்களும், பாதத்தில் வந்துவிழுந்து பணிவிடை செய் யும்மகனே! தர்மம் பெரிதப்பா தான்சொன்னேன் என்மகனே! தண்ணீர் பந்தல்வைத்துத் தலங்கள்சுற்றி சேவித்துவந்த, மக்களுக்குப் பசியாற்றி விட்டுவிடு என்மகனே! உகந்தகுடியென்று உன்னிடத்தில் சொன்னேன்நான். பயந்துதர்ம மிட்டந்த பரம்பொருளை தேடிடுங்கோ ! கொடுத்தது கூடாது கூடும்படி நீகொடுத்து, அதிலிருந்து தசையாறி குளிர்ச்சியுள்ள ஓரிடந்தான். தழைப்பீர்கள் நீங்கமக்காள் தான்சொன்னேன் என்மகனே! முன்முகப்பில் நிற்பாயென்று நான்பார்த்தேன் என்மகனே! பின்முகப்பிலாகக்வி விட்டான் பிற்கிளையை நான்பார்ப்பேன். பக்திமறவாமல் பதறாமல் நீயிருந்தால், புத்தி சொல்ல நான் வருவேன் புலம்புவேன் என்மகனே! கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செஹென்ய்தால் புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே. சீசன்மார் கண்டு சிரித்து மகிழ்ந்திருந்து போதமில்லையென்று பேசிடுநீ என்மகனே! ஆடரவில்பள்ளிகொள்ளும் மாலவனும் தேவியுமாய், பேதகமில்லையென்று பொறுமை சொன்னா ரென்மகனே ! சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக்கூட்டத்திலே, என்பங்கைத்தாவென்று பகர்ந்துவா நீமகனே! பூலோகப்பங்கதுதான் பொருத்தமில்லை உங்களுக்கு, பூலோகப்பங்கதுதான் பகுதியுண்டு என்மகனே சாற்றரிய தன்விசயன் தவங்கிடைக்கு மென்றுசொல்லி பூத்துஅவர் சொரிந்து பூமியில்வந்தார் என்மகனே! வேர்த்து அவர்சடைத்துப் பாசுபதம் வாங்கிப் பகைத்தீர்ப்பேன் என்மகனே! பள்ளியறை தான்திறந்து பதியேறும் நாளையிலே உள்ளபடி சொல்லுதற்கு உகந்துவாறே னென்மகனே! கவிந்திருந்து மாமுனியும் இந்த அதிசயத்தைக்கண்டிருந்து நிமிர்ந்து அவர் காரணங்கள் செப்புவார் என்மகனே உள்ளபடி நாமிந்த உபதேசம் சொன்னாலும் நல்லதென்று சொல்லியவர் நன்மைகொள்ளாரென்மகனே! உன்னருள்தானென்றுசொல்லி உந்திடாதேமகனே! உனக்கேச்சும் பேச்சுமல்லாத யிணக்கமில்லை என்மகனே! மாய்ச்சல்வாரும் தானுனக்கு மகிழ்ந்திருப்பாய் நீமகனே ! காய்ச்சல்வந்தால் உன்னைக்காணாது கற்பித்தேன் நான்மகனே! பயந்திருந்துநீ பணிவிடைகள் செய்வாயானால், உயர்ந்த குடிவாய் உயிர்பிழைப்பாய் நீமகனே! இதைப் பகர்த்தெழுதிவந்து பள்ளிகூடங்கள் தோறுங் கொடுத்து அதில் குறைவுவந்தாலும் தெளிந்துவா என்மகனே. நாமெழுதச் சொன்ன கணக்கரோடேதும் பறையாதே தர்மம் பெருகுமடா தான்தளிர்ப்பாய் நீமகனே! இறை பகுதி தான் குறைத்து இருந்தாள்வோம் நாம்மகனே! துவரயம்பதியதுதான் துலங்கிவரும் நாளையிலே இலங்குமடா என்பதிதான் எழுதினேன் என்மகனே! நாதாக்கள்கூட்டம்நாட்டில் நடுநடுங்கும். போருக்கு வந்தவனை போகவிடேன் நான்மகனே! ஒழுங்காய் நடந்துவர உத்தரவு தந்தேனடா. பூமணப்பதிதனிலே, உங்களைப் புகழ்ந்தெடுத்தேன் என்மகனே! வானவெள்ளி உதிக்குமுன்னே வந்தேனடா மகனே! இனிபூமி வெடித்துப் புத்திசொல்ல நான்வருவேன். தேவதேவர் கூட்டத்தில் திருசங்கு தான்முழங்கும். பஞ்சாசாப பொருளைப் பகர்ந்தெழுத மாட்டால் இந்தவிதிப்படிநான் சொன்னேன் என்மகனே வேகம்வந்தால் தீராது சொன்னேன் நான்என்மகனே சடைவுவந்தால் உங்களுக்கு சங்கடங்கள் தீர்ப்பது யார்? ஆற்றங்கரைப் பள்ளியிலே அங்கிருந்தேன் மகனே ஊத்தங்கரைப் பள்ளியிலே ஒதுங்கியிருந்தேன்மகனே குதிரைபரியாகவேதான் குடிகெடுக்க நான்வருவேன் பதியெழும்பிக்கலியழிக்க மறைபொருளாய் நான்வருவேன் செடிக்குக் கொடுத்தவனை செவிதிருக்கி குற்றங்கேட்பேன் பக்தியில்லா தேவப்பிராமணரைப் பயம்காட்ட நாம்வருவோம் உள்ளபடி சொல்வதற்காய் உகந்துவந்தேன் என்மகனே நல்லபாம்பு விசம்போல நடத்துவேனடாமகனே அந்த வல்லரக்கன் கோட்டையிலே வடிகொடுத்தேன்மகனே என்சொல்கேட்காவிட்டால் சிரித்தறுப்பேன் மகனே ஆரார்க்கும் புத்திசொல்லி அழிக்கவந்தேன் கலியுகத்தை என்புத்திக் கேட்டாயானால் உனக்கிறைபகுதிதவிர்த்து வைப்பேன் ஆளும்கோட்டை வாசலிலே அதிசயம் உண்டாகும் மகனே திருச்சம்பதிக் கடலுக்குள்ளே திருமாலும் அங்கிருந்தேன் அந்தபதி உட்படவே ஆகபதி யிருவத்தினாலாம் ஆளும்பதி தென்கடலில் அதிகது வரயம்பதி என்மகனே தென்கடலில் வழிகாட்டித் திரும்பிமுகம் பார்க்கையிலே சந்திரனும் சூரியனும் சண்டைபோட்டே மறைவார் தெற்குவடக்குமாகத் திருப்பதியும் தோன்றுமடாமகனே அந்தபதி அல்லாதே அதிபதி யங்கேஉண்டு என்மகனே நாமெல்லாபதிகளுக்கும் இருந்துவிளையாடும் சுவாமி என்பேரைச்சொன்னால் எல்லாரும் அறிந்திடுவார்மகனே நான், உள்ளபடி சொன்னதுண்டால் உலகம்கைக் கொள்ளாது நான். சொன்னதைச் சொல்லாமலவன் சுயமதியாய்ச் சொன்னான் அவனைச் செவிட்டிலே தான்போட்டுக்கொடுத்த கணக்கைப்பறிப்பேன்மகனே கள்ளக்கணக்கர்தான்பெருத்துக் கனமோசமாகிப் போச்சே நாம்உள்ளபடிகேட்கையிலே அவனுத்தாரம்சொல்வேனோ பல்லக்கு நான்தருவேன் பதறாதே நீமகனே இப்படிநான் சொல்லச்சொன்னக்கணக்கருக்கொரு நகவண்டி போடாயே நீபோடாவிட்டால்நான்போடுவேனடா மகனே கைலாசவாசல் திறக்கையிலே காட்டித்தாறேனிந்த அதிசயத்தை இதைப் பொய்யென்று சொன்னவரோடே போருக்கு நான் வருவேன் பல்லாக்குந் தண்டிகையும் பரிமணமும் சந்தனமும் உள்ளபடி உள்ளதெல்லாம் உங்களுக்கு நான்தருவேன் வெள்ளானைக் கடலுக்குள்ளே விளையாடக் கண்டேனடா தென்கடலும் வடகடலும் ஒருவழியாத்தோன்றுமடா பாரளந்த மாயவர்க்கு பலவிதமும் உபாயமுண்டு ஓரடியா நாமளந்து ஓடிவந்தேன் மகனே மாவலியைச் சிறையில் வைத்த மாயனல்லோமகனே இடையன்சாமி யென்றாலும் உங்களுக்குச் சட்டமுண்டு முன்னோலை யெழுதுமட்டும் முழித்திருப்பேன் மகனே ஏட்டுக்கடங்காது எழுத்தாணிக்குஞ் சேராது இதைமெய்யென்று சொன்னவரை முத்தியணைபேன்மகனே உதித்தநாள் கொடியேற்றி இருத்தினநாள் இறக்கிவிடு இது, கலியுகத்து ஆசாபாசம் கண்டேனடா மகனே என்னுடைய ஊழியக்காரர்களே ஒழுங்காய் நடந்திடுங்கோ கள்ளக்கணக்கெழுதும் பேர்களைத்தான் முள்ளளியில் போட்டிடுவேன் முதுகிலடித்திடுவேன் முனிபரனும் சொன்னேன்நான் நான்சொன்னபடி கேட்காவிட்டால் விடுவேனோ நான்சுவாமி ஒரு அன்னவூஞ்சல் போட்டிருக்கு அந்தபயல்களுக்கு கழுகடையம் காட்டுக்குள்ளே காட்டித்தாரேன்சுவாமி அவன் இட்டதெல்லாம் சட்டமென்று இருக்கிறான்மகனே அவன், பெட்டகமும் பொன்பணமும் பறிப்பேனடா நான்சுவாமி பொல்லாப்பு இல்லையடா புலம்புகிறேன்நான்சுவாமி வாழையிரண்டு குலையீன்றதுபோல் வாறேனடா வையகத்தில் என்மகனே இனிபள்ளிக்கூடம் சோதிக்கபையனையும் கொண்டுவாறேன் அடே, நாமெழுதும் கணக்குகளை நடுத்தீர்த்துநாமெழுதி ஆண்டிமகன் ஆண்டியடா ஆருக்கும் அஞ்சுவனோ பாண்டிமகன் பாண்டியடா பண்டாரக் கிழவனல்லோ இனி, கொடுத்தவரம் பறிப்பேனடா குடல்தோண்டி நான்சுவாமி உம்பளமம் சம்பளமும் ஒருகாசும் நமக்குவேண்டாம் உத்தரவுபெற்றபடி யுள்ளதெல்லாம் போதுமடா கைலாச வரம்பெறவே காத்திருக்கிறேன் சுவாமி பூலோக ஆசாபாசப் பங்குவேண்டாம்மகனே அண்டரண்டம் படைத்தசுவாமி அரிவிரி படிக்கிறாரே ஒன்றிரண்டும் தெரியாது நீ சொல்லித்தர மாட்டாயோ? அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதே என்னுடைய பத்திரங்கள் என்னுடைய பள்ளியெல்லாம் கொடுத்துவரச்சொன்னார் குருபரமாமுனியும் என் கணக்கன் பேரறிவான் ஊரறிவான் தலமறிவான் பரமண்டலம் பூமண்டலம் பகுத்தெழுதிவாமகனே சீதனமாய் உங்களுக்குநான் தந்தேனடாமகனே சித்திரை மாதத்திலே செழித்தமழை பெய்யுமடா பத்திரமாயிருந்து பணிவிடைகள் செய்திடுங்கோ புத்திரன் நானொருவன் புத்திசொல்ல வந்தேனடா வற்றாத பொய்கையிலே வாழுமந்தகுரு நாட்டில் புத்திசொல்ல வந்திருந்து புலம்புகிறேன் நான்சுவாமி கண்டகுறி சொல்லுதற்காய் கண்ணுறக்கம் நானுமில்லை இந்தவிதிப்படியே வந்தேனடா நான்மகனே எல்லோர்க்குங்கிட்டாது சொன்னேன் என்மகனே பேய்செடிக்கு கொடுத்தவனை பிரம்பெடுத்துநானடிப்பேன் ஆயிரத்தெட்டாம் மாசியில் வந்தங்கேபுத்தி சொன்னேன் இதுவரைக்கும் புத்திசொல்லி என்வாயும் சடைந்துபோச்சு இனி சட்டங்களும் கூட்டங்களும் சமயங்களும்வருகுதடா பெட்டகத்துத் திரவியமும் போய்விடுமோ என்மகனே கட்டில்களும் நாருகளும் சட்டங்களும் போகுமடா ஏரும்சீரும் ஆடுமாடும் போகுமடா என்மகனே தெச்சணாப்பதியில் நான் தேரேற வந்தேனடா காரணத்தைக்கேட்டமட்டும் கண்ணுறக்கம் தானுமில்லை பூரணக்கேற்றபடி பூமிசெழிக்குமடா என்மகனே வாதாடிவந்தவர்க்கு வழக்கறுத்து வைப்பேன் சுவாமி நீராடிப்போகவேண்டாம் நெடுமால் திருக்கடலில் ஓரடியாயளந்தமாயன் உலகமாள நாம்வருவோம் பாதியடிகேட்டதற்குப் பங்கில்லையென்று சொன்னான் சீறியவனைப்பார்த்துச் சினந்துவிட்டேன் மாவலியை மாலயன் இடத்தில்வந்து மயங்குகிறான் மாமுனியும் ஓரோலையெழுதுமட்டும் ஒளித்திருந்தேன் மாமுனியும் கந்தல்துணி கழுத்திலிட்டும் காத்திருந்தேன் மாமுனியும் சொந்தகிளை நானுனக்குச் சோறுதரவந்தேனடா அட்டமந்திரமும் சாத்திரமும்மறைந்துபோகும் என்மகனே இந்தவிதியுனக்கு இருத்திவைத்தேன் கலியுகத்தில் ஆண்மூட்பும் பெண்மூப்பும் அதிகப்பட்டு போச்சுதடா இனி, என்மூப்புதானுமுண்டு எவர்மூப்பும் செல்லாதே பார்வதியும் அவறொருத்திப் பங்குண்டு என்று சொன்னாள் அதுசீதனம் கொடுத்துப்போச்சு சிரிக்க வேண்டாம் என்மகனே பள்ளியிலே தானிருக்கும் பள்ளியறைக் காவல்கார என்மகனே உள்ளபடி நானுமிப்போ உபதேசம் சொல்கின்றேன் பள்ளியிலே யிருந்பலபேர்க்கும் புத்திசொல்ல நாம்வருவோம் பள்ளிக்கூடம் சோதிக்க உத்தரவு நாம்கொடுத்தோம்மகனே தர்மசீ சரை முன்னேவிட்டு சுவாமியும் நாம்வருவோம் என்னுத்தர வோடேயுன் உத்தரவும் சொல்மகனே நீயும்தான் திருப்பிரம் பைக்கொடுத்து நீயனுப்பு என்மகனே நீயனுப்பாவிட்டால் நான் கூட்டிக்கொண்டு போய்விடுவேன் மகனே என்னை, குற்றமென்றும் சொல்லாதே என்மகனே இப்படி,கணக்கினைக் கற்பித்தகணக்கென்று சொல்லிவா என்மகனே ஆணும்பெண்ணுங்கூடி ஆசாரம் செய்தடுங்கோ தானதர்மம் செய்துகொண்டு தழைப்பீர்கள் நீங்கமக்காள். மகனே, வட்டவட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க பட்டங்கள் தந்தேனடா பதறாதே என்மகனே உன், உச்சிக்கிரகமடா ஒருவருக்கும் தெரியாது.உன், பச்சமுண்டால் போதுமடா பகையெனக்கு இல்லையடா. யாருக்கும் பதறாதே அச்சமில்லை என்மகனே ஏடுதந்தேன், உன்கையிலே எழுத்தானியும்கூட தந்தேன். மகனே, பட்டயமும் தந்தேன் பகைதீர்த்தேன் பதறாதே இனி, நமக்கொடு ஒழுங்குவேணும்நாம்சொன்னோம் மாமுனியும், என், பள்ளியிலே வைத்திருந்தேன் பாதையில் போகவிட்டேன். கொடியேறும் நாள்தொடங்கி ஏழுநாள் பிச்சை வாங்குங்கோ மகனே ! சுரையோடு கையிலெடுத்து எல்லோரும் கூடிச்சேர்ந்து போய்விடுங்கோ. சராசரத்தைப்போற்றித் தானதர்மம் செய்திடுங்கோ. நல்லவர் இட்டதர்மம்நாள்தோறும் பொங்குமடா. தர்மம், தந்தவனும் நல்லவன்தான். தராதவனும் நல்லவன்தான். நல்லவனும் பொல்லா தவனும், யெல்லாரும் நல்லவனென்று சொல்லிவிடு. எட்டாம்நாள் வேட்டையாடி வருவேனடா நான்சுவாமி, அகப்பட்டதைக் காப்பிட்ட மகன்கைக் கொடுத்து உனக்கெனக்கும் பகையில்லையடா யுகபழிந்துபோனாலும். உன்னைப்போல் சுந்தரன் ஊரிலும்நான் காணேன். வட்டவட்ட சாலையிலே வாறவழிப் போக்கினிலே, நீயுமுன்கூடச் சேர்ந்த ஜனங்களும் இட்டதர்மம் பெருகுமடா. நாட்டைத்தான் ஒடுக்குதற்குக் கொடுத்தவரம் பறிக்கவாறேன் நான்மகனே! மந்திரவாள் தான்வாங்கி இந்திரனும் பதியேறி, சந்திரனும் சூரியனும் சண்டைப்போட்டுத் தேசம்வாறார். இந்திரனார் சுந்தரர்க்குத் தாம்கொடுத்தோம் மாமுனியும் இந்த,புதுச்சட்டம்வந்திருப்பதினால் நல்ல புத்தியாருந்து விடுங்கோ நல்லபுத்தியிருக்காவிட்டால் பிழைகள்வரும் உங்களுக்கு பற்பல ஊர்களிலேயிருக்கும் நிழல்தாங்கல்களில் என்மகனே பள்ளியிலே தானும் வைத்துபணிவிடைகள் செய்திடுங்கோ. சீசன்மார் கைக்கொடுத்து தெளிந்துபார் என்மகனே! பள்ளிக்கூடங்கள்தோறும் பதிவாக நீங்கள்போய் இதை சொல்லுங்கடா என்மகனே மாமுனியும் சொன்னேன் நான். பத்திரத்தைப் பள்ளியில்வைத்துப்பகர்ந்துகொடு நீமகனே, இப்படி, உத்தரவுதந்தேன் உகந்து வா மகனே! சத்தியமாயிருக்கவேணும் சண்டைபோடாதே மகனே! பத்திரத்தைப் பிரிவெழுதி வாங்குங்கடா மகனே! அவரவர் கூடுதமட்டும் உள்ள தர்மம் தந்ததை வாங்குங்கடா மகனே! இந்தப் பத்திரத்தைப் பள்ளியிலே தானும்வைத்துப் பணிவிடைகள் செய்திடுங்கோ! புத்திர பலன்களுண்டாம் பூமிவிளைந்துவரும். சத்தியமாயிருக்கவேணும் தர்மபதிகிடைக்கும் என்மகனே தர்மசங்கத்தார் தர்மம் வளரும். தர்மராசர் தர்மபுவி ஆளுவார். அம்மைமார் பத்திரம் பையன்மார் பத்திரம் திருநெல்வேலிமார் பத்திரம் பால்விறகுப் பத்திரம் அய்யாபதி உட்படப் பத்திரம் முட்டப்பதிப் பத்திரம் பள்ளத்துப்பதிப் பத்திரம் தாமரைக்குளம்பதிப் பத்திரம் பூப்பதிப் பத்திரம் செட்டிக்குடியிருப்புப் பத்திரம் அகத்தீசுவரம் பத்திரம் பாலவூர் பத்திரம் சுண்டவிளைப் பத்திரம் வடலிவிளைப் பத்திரம் கடம்பன்குளம் பத்திரம் உன்பரக்கொடிப் பத்திரம் பற்பலஊர் ஜனங்களுக்கும் கூடியபத்திரம் பத்திரம் முற்றிற்று
சிவகாண்ட அதிகாரப் பத்திரம்
அய்யா சீசருக்குச் சொன்ன ஆகமம் அய்யா பதியில் வடக்கே முகமாயிருக்க சீசர்தெற்கே முகமாநிற்க அரிகோபாலனும் கைகட்டி மனப்பயங்கரமாய் நிற்க அரிகோபாலனை அய்யா காதை முறுக்கி உனக்கு இட்டகணக்கைத் தந்தேன்; தந்த கணக்கை எல்லோருக்கும் தெரியச் சொன்னாயா? தெரியச் சொன்னதைத் சொல் என்று கேட்க அரிகோபாலன் சொல்லத் தெரியாமல் நின்று தியங்கக்கண்டு மகிழ்ந்த மயிலாடி சீசர் கிடுகிடடென்று மனப்பயங்கரமாய் நிற்க நீசொல்சீ சனஞ எழுத்தெந்து அய்யா சொல்ல அரிகோபாலன் சொல்லத்தெரியாமலும் சீசர்சொல்லத் தெரியாமலும் இருந்ததினாலே அய்யா திருவாய் மலர்ந்து அருளினது என்னவென்றால் கன்னிமார் ஏழுபேர்உண்டுமே ஏழுபேர்க்கம் ஏழுமதலைகள் உண்டுமே ஏழுபேரில் வைகையில் இரண்டுபேர் இறந்துபோனதுண்டுமே அதிலே ஐந்துபேர்க்கு ஐந்துதேவிமார் உண்டுமே ஐந்துபேர் ஆண்பிள்ளையாளால் அவரவர் தேவிமார்க்கு அம்மையிடத்தில் உத்தரவு தோணிற்று பெண்பிள்ளை ஐந்துபேரானாலும் தர்மக்கிணற்றில் தானம் பண்ணித் தர்மக்கிணற்றை ஐந்துதரம் சுற்றிச்சேவித்து நம்முடைய திருப்பதியை ஐந்துதரம் சுற்றிச் சேவித்து கொடிமரத்தை ஐந்துதரம் சுற்றி சேவித்து நான் அம்பலத்தில் சுவாமி அரசடிமூட்டில் வந்திருந்து சத்தியம் கொண்டோம் அன்றுமுதலாய் அந்த ஒழுங்கின்படி நடந்து வருகின்றார்களா? அவரவர் தேவிமார் முகம்பார்த்து பேசினதே அல்லாது வேறேதேவிமார் முகம்பார்த்து பேசினதேயில்லை என்றும் ஆண்பிள்ளைகள் நீங்கள் ஐந்துபேரானாலும் உங்கள் தேவிமார் ஐந்துபேரானாலும் அவரவர் ஆம்படையானைத் தள்ளியின்னொரு முகம்பார்த்து பேசவில்லை என்றும் கொடிமரத்தில் ஐந்துநேரம் சத்தியம் செய்து நாமம்கொண்டு இடச்சொல்ல ஆமென்று ஏற்கமாட்டாமல் இருந்ததினாலே எறும்புமுதல் எண்ணாயிரப்பட்ட மிருகப்பிறவி செய்திருக்கிறதிலே வாய்பேசாத மிருகத்தைத்தள்ளி எந்நெந்தச் சாதிவாய்ப்பேசுமோ அதிலேஐந்து ஆணானாலும் ஐந்து பெண்ணானாலும் இந்தப்படி தானம்பண்ணிச் சத்தியம்செய்து நாமம் கொண்ட நொம்பலம் இதமாகப்போக சீசர்லோகம் தகர்லோகம் இந்த ஒழுங்கைத் தெரியச்சொல்லவும் இன்னும் கணக்கு நிரம்பியிருக்கு அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா இரண்டாவது சட்டம் என்பள்ளி பள்ளிகள்தோறும். இருக்கிறபள்ளி கணக்கருக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம் மூன்றாவது சட்டம் என்பள்ளியிலே வந்துஇருக்கிற பலவூர் ஜனங்களுக்கு அருளிச்செய்த விபரப்பத்திரம் இந்த சிவகாண்டத்தின் பிரகாரம் அறிவாகவாசித்து எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க இன்பமாக கேட்டுக்கொள்ளுங்கள் நான், தீர்ப்புக்கேட்கும் வேளையிலே உத்தரம் சொல்லத் திறமையாயிருங்கள் நாலாம்தீர்ப்புச் சொல்லிவருகிறார் நம்மளையா, ஆகையால் தருமத்தைச் செய்து தவத்தைப் பெருக்கி உங்கள் சாராசரத்தைத் தேடுங்கள் என்மக்களே, இந்த சிவகாண்டப்பத்திரப் பிரகாரம் எல்லோரும் போற்றுங்கள் இதைக் கேட்கறிபோது வாயில் வெற்றிலை இல்லாமல் நல்லசிந்தையோடு கேட்கவேண்டியது இது, சத்தியமென்று எண்ணிநடக்கிற பேர்களுக்கு ஈசன்மலர்பாதம் கிட்டிக்கொள்ளும் மேலும் ஆயிரத்தெட்டாமாண்டு மாசியில் ஆண்டிதெட்சணம் பள்ளிகொள்ள வந்திருந்து பற்பலகாரணம் நடத்திச் சொல்லிவந்தும் உலகம் அறியாமல் மயங்கிப்போச்சு மேல்மாசி ஆறுஏழு அஞ்சில் மாசியென்ற மாதத்தில் பதினைந்துக்குள்ளிருந்து தர்மயுகம் உதிக்கும் அதற்குமுன்னுள்ள காரணம் -அழிவுகள் விபரம் : பெருங்காற்றினால் அழிவு வெள்ளத்தால் அழிவு பேய்மாறாட்டத்தால் அழிவு பெருஞ்சுரத்தால் அழிவு சம்மாரியால் அழிவு காளிவெள்ளத்தால் அழிவு நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு பெண்ணாலே ஆணழிவு ஆணாலே பெண்அழிவு பூமிஅதிரும் ஓசையினால் ஒருபெருமூச்சு உண்டாகும் இப்படி பற்பல தீர்ப்புக்கேட்க நாராயணம் நாவில் வகுத்துச் சொன்னோம் அருளாக ஏகம் அண்ட பரிபூரணமாய் வரையாகி திரையாகி வான்புவி லோகமுமாய் ஒளியாகி விழியாகி உயிருக்கிணையாகி திருவுயிராய் ஒருவுயிராய் தேசத்தில்பல வேசமுமாய் ஒன்றாகி இரண்டாகி உலகமெங்கும் நானாகி ஒன்றுமிரண்டும் மூன்றாகி யிந்தயுகமெங்கும் நானாகி கருவுருவாய் ஒருவுருவாய் கருணாக் கடலானேன் ஒன்றுமிரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய் உனைவகுத்தேன் அஞ்சி அடங்கி ஆதிபரன் பங்காளன் அஞ்சிரெண்டு மூன்றானே னிந்த ஆதிபரன் சித்து வித்தை மண்ணால் உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன் உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன் உண்டாக்கிவைப்பதும்நான் உலகில் அழிப்பதும் நான்மகனே ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை ஆளுகிறார் கண்ணுமக்காள் என் சூத்திரத்தைக் கண்டறிந்து பாருங்கப்பா பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம் இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன் வேலை முடியாதப்பா இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன் இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன் இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திடுங்கோகண்ணுமக்காள் குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர் இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன் இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில் நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும் அதற்குதண்ணீ ரதுதான்கொடுப்பா ரில்லையா அண்டத்திலோரறம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது அண்டபகிரண்டம் செல்லவொரு ஆயுதம் வந்திருக்குதப்பா இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள் திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன் எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ ஊமையானேன் செவிடானேன் பித்தனானேன் பேயனானேன் மண்டலத்துப்பெண்மாய்கையாக மாலயனும் நானானேன் கள்ளனானேன் வெள்ளனானேன் என்காரணத்தை அறிவாரில்லை ஆலிலை மேல்பள்ளிகொண்ட அருமைசற்றே சொல்வாரில்லை வாரிதனை யடைந்த அருமை சற்றுமில்லை யென்மகனே அண்டமெலாம் பிண்டமதாய் ஐந்தறைக்குள் அடக்கிவிட்டேன் கடலை அடைத்ததினால் உங்கள் கண்மயங்கலாச்சுதப்பா நான்எந்நாளும் பள்ளிகொண்டு இருப்பதை நீயறியவில்லை அமிர்தமது தான்கடைந்த அதிசயத்தைச் சொல்மகனே ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில் ஒருபதினெண்ணாயிரத்து ஏற்றபெண்கள் தங்கள்முன்னே எண்ணடங்காபெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிள்ளையாய் ஐந்துதலை நாகத்தின்மேல் ஐயாபள்ளி கொள்வதறியல்லையா பத்தவதாரம் பிறந்த பாதைகளைச் சொல்மகனே என்னையறியாமல் ஏதும்வகை உலகிலில்லை தன்னையறிந்துண்டால் தலைவனைநீ யறிவாய்மகனே கண்ணால்மனக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான் என்னை யறிந்தவர்க்கு ஈசன்வழி சொல்லுகிறேன் உங்களுக்குமண்ணில் மூவாசையைதுமாற்றானாய் இருக்குதடா என்னைக் கண்ணாலே கண்டதுண்டால் கலிதீரும்என்மகனே வட்டக்கோட்டைக் காட்டுக்குள்ளே நட்டுவனார்கொட்டுகிறார் சொன்னேனென்று எண்ணாதே என்சொரூபமறிவாயோ சூத்திரக்கணக்கொன்று சொல்லுகிறேன் கேள்மகனே பஞ்சவர்ணக் கிளியொன்றிருந்தது பறந்துபோகக் கண்டேனடா ஏழுபெண்கள்கதையை எடுத்துச்சொல்ல நாளாச்சே பப்புச்செடிக்குள்ளிருந்து பாம்பு படம்விரித்து ஆடுதடா ஈரேழுஉலகமுண்டு இதையெடுத்துச்சொர்வார் யார்மகனே சாதியான கொடியபாம்பு சதிசெய்யும் பாம்பதுதான் முப்பூவை தானெடுத்து அதைமுத்திசெய்தால் சக்தியுண்டு குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான் சொல்வேன் கேள்மகனே அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுஙகோ கண்ணுமக்காள் மூன்றுநாமம் ஒன்றுபாம்பு அதுமூன்றும் ஆடுதப்பா கொத்தினால் திரும்பாதப்பா அதுகுடிகெடுத்துப் பாம்புவிசம் தலைமன்னர் மீதிருந்து பலசரஸ்திரங்கள் சொல்லுதப்பா சங்குங்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில் கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா விள்ளுர் தனிலிருந்து விரைந்துவந்தேன் வையகத்தில் ஏகன்போ னப்பாநான் இருப்பதை அறிவாரில்லை கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன். பாலன் சிறுகுழந்தை வந்த பாதையறிவீர்மக்காள். உங்களுக்கு வேலைசெய்ய நான் உலகில்வந்தேன் கண்ணுமக்காள். இருமனதா லெண்ணாதே பின் எனக்குஉத்தரம் சொல்வாயே. மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும் நான் நாடெல்லாம் பாடியாச்சே நானென்ன செய்வேனப்பா வேலை செய்தால் வினையில்லையே; அந்த விசமதுதான் அணுகாதப்பா. மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ. எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய் நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன் முச்சந்திக்குள்ளிருந்து பாம்பு உச்சம்பெற்று வருகுதப்பா. ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும் கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு. ஆணும்பெண்ணும் கூட்டியாட்டி ஆக்கிவைக்க நான்வருவேன். நாலுவகைக் கணக்கிலும் நான்தீர்ப்புச் செய்ததுண்டு செம்பவளத்தேரேறி நான்தேசமெல்லாம் பார்க்கவாறேன் வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார். ஆங்காரம் அடிபிடிகள் அதிகமப்பாதேசமெங்கும். கொலைகளவு அதிகமப்பா குடிகேடு ஆச்சுதப்பா பெண்ணாலேஆண் அழிவு பெருகுமடாபூமியெங்கும் ஆணும்பெண்ணும் அழிவாகும் அம்பலத்தரசர் முடிவாகுதடா பொய்புரட்டு அதிகமப்பா பொருத்தல்லை கலிநமக்கு தானமானமில்லையப்பா சாதிவரம் பழியுதடா சங்கக்கூட்டம் இல்லையடா சரசக்கூட்டம் இக்கலியில் கொம்பன்புழு வென்றறியாமல் குதிபோடுகிறார்கலியில் மக்களுக்கு உத்தரவு மால்செல்ல நீதிஉண்டே அறிவு சொல்லி தெளிவுதர நான் அம்பலத்தில் கணக்கர் வைத்தேன் நான்வைத்த கணக்கரெல்லாம் நன்றுநடுக்கேட்கவில்லை ஆடிநன்றாய் பாடிநன்றாய் கொடுக்கவில்லை என்மகனே ஆதிபரன் சோதிநான் அதிகாரம் செய்யவாறேன் புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதி தேடுங்கப்பா அதிகாரச்சட்டமது அவனியெங்கும் ஆகுதப்பா பத்திரத்தைப்பாடி வந்தாலும் பாதையிலே போகவிடான் கொடியென்ற நாகமது கொத்தும்வேளை அறிவீர்களோ எண்ணடங்கா பாம்பதற்கு இருக்கிறார் இரையாக இருபத்தைந்து பாம்பாக உங்களிடம் பார்க்கவருகிறாரே சான்றோரிடமிருந்து பலசாத்திரங்கள் சொல்லித்தாறேன் என்னாலே ஆகுமட்டு மிதுவரைக்கும் புத்திசொன்னேன் நானான்டி ஆண்டி நடுக்காட்டு குருவாண்டி கேளாண்டி குலத்தாண்டி இந்தகுவலயத்தை அளந்தாண்டி சித்தாண்டி சிவனாண்டி இந்த தேசமெங்கும் நானாண்டி மாலாண்டி மாறாண்டி நான்மாலும்சிறு ஆண்டியடா கந்தைத்துணி தோளிலிட்டு கந்தப்பனும் நான்வருவேன் இன்னும் சிலகாண்டம் எடுத்தெழுதி சொல்கிறேன் ஆயிரத்தெட்டா மாசியிலே கலியுகத்தில் வந்தேனடா சாதியான லிங்கமொன்று சமுத்திரத்துள்ளிருக்குதடா ஆதியான லிங்கமதை நீங்கள்தினம் போற்றிடுங்கோ அதில், முத்தியுண்டு சக்தியுண்டு முனிபரனும்பாடுகிறேன் கோலநெடுமாலயனும் கோலம்கட்டி ஆடுகிறேன் நித்தம்செத்த பாவியப்பா நாதனெடுத்து தாறேனப்பா செத்துச் செத்துப் பிறப்பே னடா என் சித்து வித்தை அறிய மாட்டான் அல்லும்பகலும் குறிகள்சொல்லி அவதிமெத்த ஆச்சுதடா ஆடுதடா ஒரு பம்பரம்தான் அதையமர்த்த வல்லாருண்டோ காணுங்குறி சொல்லுதற்கு கழுகுமலையாண்டி வந்தேனடா இனிதேனிமலர் மீதிருந்து பலசிறப்புச் செய்யவாறேனடா உங்கள் குலதெய்வமென்று என்னை உபசரிப்பா ரில்லையடா காரண தெய்வமென்று எனக்குக் கடன்செலுத்தயாருமில்லை ஏவல்செய்யும் பிசாசாலே என்மக்காள் ஈடழிழ்ந்துபோனீர்களே மகாலிங்கம் சொக்கலிங் மாயமுத்து சோதிலிங்கம் ஒரு முத்துலோகமுத்து இந்தஉலகமெங்கும் பெருத்தமுத்து ஏகமுத்து நாகமுத்து எங்கும் முழு முத்தானேன் வையகமெல்லாம் முத்தாச்சு அதைவகையறிவா ரில்லையப்பா காடெங்கும் கனத்தமுத்து அதைகண்டெடுப்பார் யாருமில்லை சத்துள்ள முத்தப்பா அதுவுங்கள் சகலவினைதீர்க்கும்முத்து பக்தியுள்ள முத்தப்பா அதுவுங்கள் பதியேறும் அந்தமுத்து கண்டவர் எடுத்திடுங்கோ உங்கள் காரணத்தெய்வமப்பா ஆணாகி பெண்ணாகி உங்கள் அம்பலக்கூத்தாண்டியப்பா கூத்தாடிச் சித்தனும்நான் கூன்கிழவன் பண்டாரம் பண்டாரக் கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன் இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம் மேலுங் கீழுந்தெரியாது நான்மெய்யன்மகன் பொய்யனப்பா கட்டுப்பாடு மொட்டாதநான் உன்குருவும் சொல்லுகிறேன் கங்கையிலே தீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ காயக்காரன் மாயசித்தம் நானுங்கள் கண்காணப் பெருவழியேன் அவரவர்கள் செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்ததவம் செய்திடுங்கோ உங்கள் கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன் மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை நளாலுதிசைக்கள்ளாக நடுவேயென்று இருக்கதப்பா அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திஞடுங்கோ தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடி தவஞ்செய்து இரவுபகல் எப்போதும் அவர்க்குயிரை போட்டாற்றுவதில்லை நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறேனடா வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ வையகத்தில் யாபேர்க்கு மொருவலுச் சக்கரம் வருகுதப்பா கந்தன்திருவேலனே என்னை ஆண்டியென்றறியமாட்டான் கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன் காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா கங்கைபால் வற்றுமப்பாகிழவன் பண்டாரம்சொல்லுகின்றேன் வெட்ட வெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா ஊரோட்டம்தே ரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன் கூத்தாடி க்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப்போவேனடா கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன் கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன். துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான் பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன் நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான் அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன் நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான் உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான் தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன் கைலாசம் தனிலிருந்து பல காரணங்கள் முடிக்கவந்தேன் ஆணாணேன் பெண்ணானேன் அடங்காத சொரூபமானேன் அஞ்சாடு மேய்ந்திருந்த உங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன் கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை ஒடுங்குவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும் கண்டதில்லை இனிசுடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன் கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது போவேன் கைலாசம் பின்ஆடி மாதத்திலே முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன் கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன் பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா முன்னோலைவாசகத்தை முழித்திருந்து கேட்டிடுங்கோ பின்னாலே கண்டததூன் போகுதடா என்மகனே சத்தியமாநடந்திடுங்கோ நான்சடையாண்டி சொல்கின்றேன் மாசியென்ற மாத்திலே உங்கள்மாமனுக்க போதாது நாட்டில் குறிகள்சொல்லி நான்பிழைக்கவந்த இடந்தனிலே வந்தஇடந்தனிலே ஒருவலுக்கடுவாய் வருகுதப்பா கடுவாய்கண்டால்விடாது நான்காணாமல்மறையபோறேன் ஏகமெங்கும் வெளியாச்சே நளானெங்கே ஒளித்திடுவேன் கடலதிலேபோகுமுன்னே எனைகடுவாய்ப்பிடித்துகொள்ளும் தேவமுத்துஞானமுத்து உங்களுக்கு வேண்டும் வேலைசெய்யுமுத்து சப்பாணிக்கிழவனுக்கு தங்கயிடமல்லையப்பா பார்தனிலே அடங்கிமக்கள்மனதிலேயிருந்துவிட்டேன் பண்டாரக் கிழவனுக்கு பயந்தெளிப்பார்யாருமில்லை எங்கெங்கே போனாலும்மெனக்கிரவுபகல் ஆகுதப்பா என்மக்காள்சீசர்களே நானிதுவரை புத்திசொல்லிவந்தும் அறிந்தோர் அறிந்திடுங்கோ அறிவுள்ளோர்கேட்டிடுங்கோ தெரிந்தோர் தெரிந்திடுங்கோ உங்கள்சித்தம்பலதாண்டவரை தெளியார்க்குபதேசம் நீ செப்பியிரு என்மகனே இரப்போர்க்கு அன்னமது ஈந்திடுங்கோ கண்ணுமக்காள் ஆடைகொடுத்திடுங்கோ அம்பலாசாரஞ் செய்திடுங்கோ கொடுத்தால் அன்னம்குறையாமல் கொடுத்திடுங்கோ கொடுத்தால் பதவியுண்டு குறைவில்லை உங்களுக்கு படித்தோர்கேட்டிடுங்கோ பலபாசைக்காரர்கள் அடிப்பார் அடிக்கவந்தால் அடியைச்சகித்திடுஙகோ அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திலிருந்து என்பேரைச்சொல்லி எவரெவர்வந்தாலும் அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு என்னஎன்ன அபாயம் இடுக்குமது வந்தாலும் அன்னேரம்நாராயணன் ஆயனங்கேநான்வருவேன் அதிகாரப்பத்திரத்தில் அவரவர்க்கு தீர்ப்புண்டு சத்தியத்தீர்ப்புகேட்க சுவாமியிங்கேயிருக்கிறேன் சத்தியத்தை தான்மறந்து மத்திபத்தைச் செய்யாதே மத்திபத்தைச் செய்தாயானால் மனநாகந்தீண்டிவிடும் தீர்ப்புக்கேட்கநாளாச்சு தெரிந்தோர் தெரிந்திடுங்கோ தம்பிகணக்கனையும் தான் கூட்டி வாறேனப்பா நெடுநாமம் அழியுதடா நேர்வழி தோணுதடா தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா சிவகாண்டதீர்பெழுதி தெரிவித்தேன் என் மகனே வீட்டுக்கொரு கணக்கன் யிருக்கிறான் வையகத்தில் உன்நாவில் நானிருந்து நடுதீர்ப்பு செய்யுகிறேன் பலசொருபம் பாடிவைத்த பத்திரத்தை பார்த்திடுங்கோ கண்ணுமக்கா யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி பாடுகிறேன். அயோத்தியா பட்டணந்தான் அழியுதப்பா என்மகனே அச்சுத்தேர் ஒடியுமுன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ பஞ்சவர்கள் அஞ்சுபேர்தான் பதியதுதான் அழியுதப்பா குருநாடு அழியுதப்பா கோபாலகுருசாமி சொல்லுகிறேன் மந்திரமும் நானானேன் மருந்துமூலி நானானேன் சந்திரனும் நானானேன் சூரியனும் நானானேன் எண்ணடங்கா சோதிபரன் மண்டங்கியிருக்கின்றேன் வேதாந்தம் சித்தாந்தம் விளம்பிவைத்தேன் வையத்தில் கொத்தை குறையாதே குறைமரக்கால் வையாதே துலங்குதப்பா மேல்பதிதான் துணையாகும் உங்களுக்கு உபதேசம் சொல்லும் கூலிஉடன் கையில்கொடுத்திடுங்கோ பத்திரத்துக்கெழுத்து கூலி பலயிடம் வாங்கி கொடுத்திடுங்கோ பள்ளி கணக்கரெல்லாம் பதிவு குறையாமல் கொடுத்திடுங்கோ கற்ப மூலி உங்களுக்கு கர்மவினை தீற்குமூலி காணுதப்பா அப்பதிக்குள் ஒரு கனத்தமுத்துயிருக்குதடா யின்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன் பாவனாசம் மானதிலே பள்ளிகொண்டார் தர்மலிங்கம் பார்த்து உங்கள் சாஸ்திரத்தை படித்து அங்குயிருக்கிறார் கடலதிலே தீர்த்தம் செய்து உங்கள் கர்மவினை தீர்த்திடுங்கோ வையகத்தில் வைகை வாசல் காவலாளி ஒன்பதுபேர் ஒன்பதுபேர் அங்கிருந்து பல உபகாரஞ் செய்யுகிறார் கயிலைமலை தன்னை கண்டு கனத்ததவஞ் செய்தமக்கள் கயிலைமலையானதிலே ஒரு தவசியிருந்து வாடுகிறார் அந்த தவத்தினுட அதிசயத்தை உங்களப்பன் சொல்லுகிறேன் ஓடி ஓடி பார்த்தாலும் ஒருவருக்கு தெரியாது காயாம்பு மேனியனார் கண்ணில் அதுகாணும் தூங்காமல் தூங்குகிறார் அதின்சூத்திரத்தை அறிவாரில்லை அடங்காத தவசுதான் அதின் நஞ்சயறிவீர்களா வயிற்றுக்கிரைதேடி வாறார்காண் அக்குருவும் எண்ணடங்கா சொருபத்திலே அதில் என்சொருபம் அங்கு உண்டு எங்கே எங்கே என்றுசொல்லி எட்டுதிலை பார்க்குதடா பிழைப்பதற்கு வழிபார்த்து பிலத்ததவஞ் செய்திடுங்கோ நான்மறைக்கக்கூடாது ஞானமுத்துசொல்லுகிறேன் எங்கே எங்கே ஒளித்தாலும் யிரவுபகல் ஒன்றாக்கும் அன்பர்களே என்மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கோ நஞ்சு எச்சி தின்றவர்கள் ஞானக்காளிக்கரையாவார் மேலும் எய்யாத சமயமதுள் இருக்குதடா ஆளிப்புழு வையத்தில் பொய்களவு வாதுசூது பிறர்மோகம் செய்யாத தீ வினைகள் செய்தோர் உண்டுமானால் அகிலகிடங்கில்வாழும் ஆழிப்புழுக் கிரையாவீர் முன் கணக்கும் பின் கணக்கும் முதற்கணக்கும் நான் கொடுத்து கணக்கை யெறிந்துவிட்டேன் கனகயிடம் தூத்திவிட்டேன் வாழும் பள்ளிமேலவாசல் ஒன்றை அடைத்துவிட்டான் பட்டந்தனைபறித்து அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன் ஆடுகிடாய் கோழி பன்றி ஆயனுக்கு வேண்டாம் காண் மேளதாளம் குரவை தொனி வேண்டாம்காண் யீசனுகு ஒரு அன்புமலரெடுத்து அனுதினமும் பூசைசெவ்வாய் நடுதீர்ப்பு நான்கேள்க்க நாளதுக்கு வருகுதப்பா பள்ளிக்கணக்கனிடம் பாடக் கேள்க்க வாறேனடா பள்ளிகணக்கரெல்லாம் பாடஞ்சொல்ல வேணுமடா நாட்டு கணக்கெடுத்து நாம் தீர்ப்பு நடத்தயிலே என்மக்கா சீசர்களே எடுத்தெழுதி சொல்வீர்களோ அம்பலத்து கணக்கர்களே நீங்கள் அறியவில்லை என்பீர்களே காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசு எண்ணுகிறான் பட்டம் பறிபோகுதடா அவர்களை பாரச்சிறை வைத்திடுவேன் ஆயிரத்தெட்டாம் மாசியிலே ஆண்டிபுத்திசொல்லி வந்தேன் வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் கேள்மகனே ஆண்டிக்கு கோபமானால் அழிந்துவிடும் முப்புரம்போல் அடங்காதகோபமாச்சே ஆண்டியென்னசெய்வேனடா மக்களுக்கு சேலைசெய்ய மனமில்லை எந்தனுக்கு இன்னும் ஒருகாரணம் எடுத்தெழுதி சொல்லுகிறேன் அவரவர்க்கத்தனித்தனியே ஆண்டி புத்திசெல்லிவந்தேன் நந்திசொன்னஉபதேசம்மக்கள் நாள்தோறும் கேட்டிருந்தம் நீலனுக்குமூக்கனுக்கு சொன்ன நெட்டூரம் போலாச்சே முன்னும்பின்னும் சொல்லியிருந்தும் முழுமோசம் ஆகிப்போச்சு புத்திகெட்ட பிள்ளைகளே நீங்கள் சக்திகெட்டு போனீர்களே ஒருகாதில்தான் கேட்டு ஒருகாதில் விட்டீர்களே இனிநம்மா லேயாகாது நமக்குஇவ்விடஞ்செல்லாது வல்லாண்மை செல்லாது வலுவழக்கு ஆகுதிங்கே பொல்லாப்புகட்டவேண்டாம் போறன்கைலாசம் நாதனுமே கேட்டதற்கு நன்மையொருவரில்லை கண்டகோவில் தெய்வமென்று கையெடுத்தால் பலமுண்டோ கடுவாய்பிடித்ததுண்டால் காணாமல்மறைந்திடுவேன் பாம்பு கடித்ததுண்டால் பதைத்துநீங்கள் பட்டிடுவீர் இனவாதை பிடித்ததுண்டால் இருப்பீர்களோ இவ்வுலகில் ஞானக்கழுகுபிடித்ததுண்டால் இந்தநாட்டில்இருப்பீரோ துண்டுதுண்டாய்போய்விடுவீர் துணையுண்டோஉங்களுக்கு கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்கதடா வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுகாய் ஆசையது உங்களுக்கு என்மக்கா தோசமாயிருக்கதடா எல்லோர்க்குங்கோபமாச்சு இடையிலோட்டம் ஆச்சுதடா பிரமன்பகைத்ததுண்டால் நீங்கள் பேசாமல் போய்விடுவீர் விஷ்ணுபகைத்துண்டால் வெறியாட்டம்கொண்டிடுவீர் உத்திரம் பகைத்துண்டால் உயிர்பிழக்கமாட்டீரப்பா காலனும் வந்துவிட்டால் உங்களைக் கைபிடியாய் கொண்டுபோவான் இத்தனைபேர் சேர்ந்திருக்க ஈசனென்ன செய்வேனப்பா அவரவர்க்கு இட்டகுறை ஆதிமுனி என்னசெய்வேன் நடுத்தீர்ப்புக் கேட்குதற்கு நாளடுத்து வருகுதப்பா நடுத்தீர்ப்புக்கேட்டவுடன் நாடாள நான்வருவேன் சீசன்மார்தன்னிடத்தில் மக்கள்தெளிவாக கேட்டிடுங்கோ சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாயிருந்திடுங்கோ உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயிருப்பேனப்பா ஊட்டுகிறேன் ஓட்டுகிறேன் நான்உயிர்க்குயிராயிருக்கிறேன் வம்புவசைபேசாதே என்வாளுக்கிரையாகாதே ஏசாதே பேசாதே யென்கணக்கர்சீசர்களே சிரிப்பாரோடேயிருப்பேன் நகைப்பேன் நாக்கறுப்பேன் முன்னாலே ஓடுக்க வந்த ஒருவரையும் விட்டதில்லை எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங்கேட்கலையோ கள்ளனிடம்நானிருப்பேன் பின்காட்டிக்கொடுத்திடுவேன் பிடித்தவனோடேயிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன் குடியிருந்துகொலைகள் செய்வேன்பின் கொலைக்கழுவில் போட்டிடுவேன் கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம்புரண்டு போச்சே பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்குவந்தேன் பரிசத்துராஜன் கண்டதுண்டு பயந்திங்கே ஒடிவந்தேன் மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கேவந்ததுண்டு வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு ஈசனுடனே வார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் வீழாதே ஆண்டிபேர் சொன்னதுண்டால் அசாரஞ் செய்திடுங்கோ கொட்டி முழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும் பேய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்ப் போகுதடா கொம்புசத்தம் கேட்குதப்பா வம்புகலி யழியுதடா இன்னும்செப்படி வித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே வையத்தில் ஒருசரீரம் வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும் 'நம்முடைய சித்துவித்தை காணக்காண மூன்றானேன் மாயவன் பொல்லாதவன் குடிகொண்டால் உள்ளறிவான் மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன் ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மை பகையானால் விள்ளூரென்றும் ஒருவனுண்டு பல வேடிக்கைக்காறனடா நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார் நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா. சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று.
திங்கள் பதம்
அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கை காலுமாகப் பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே செப்பரிய தோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க எப்ப நான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே செப்பறியதிருமாலும் அங்கிருக்க தென்பெரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம் ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம் பத்தன்மாரேவெகுநாளாய் வேலைய்செயும்பிள்ளைகளே முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன் என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில் வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க என்மகனே திருநெல்வேலி எல்லோரும் ஒருமுகமாய் சொல்லரியபுத்திதனைத் தெரியும்படி சொல்லிவிடு வெகுநான் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள் அம்மையவள் மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி பஞ்சவரே உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும் பொக்கணமும் புலித்தோலும் பூமாலை கேட்கவில்லை \ மற்புடைய தேங்காய்பழம் வாழைக்காய் கேட்கவில்லை கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன் சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள் பெற்றபிள்ளை கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும் அமைத்து வந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக் கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன் என்னாலேஒரு ஞாயம் எண்ணாமல் செய்யவில்லை எண்ணாமல்மாப்பு செய்து இரணியயைச் சங்கரித்தேன் பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில் இருக்கமாட்டார் அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே சொல்லரிய வெய்யதிலே சுடுமணலில் தானிருத்தி சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில் தள்ளிவைத்தான் இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும் பெற்று பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே அன்று சிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன் நட்சத்திரமுதிரும் நல்லவான மிடிந்துவிழும் என்னையறியாதபேர்கள் எரிந்துகரிந்து போவார் பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன் கந்தனை அடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன் ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா தீமெழுகநாளாச்சு சொல்லித்தாரேன் தெரியம்படி ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும் பற்றிவயிறு தானெரிந்து பன்னிநெய்யாய்ப் போகுதடா சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும் நீபெரிது நான்பெரிது வடிவெடுப்பேன் பழிக்குலத்தில் பலவேசம் போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான் எடுத்தேன் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம் முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன் அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான் இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே பலவிதமாய்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிட வந்தேனடா சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளர்த்த பிள்ளை இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா உங்கள் வருத்தம்கண்டு ஒருமருந்து கொண்டுவந்தேன் தெய்வீரே உங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன் அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார் ஏடுயெறிந்துவிட்டேன் யெழுந்திருந்து போவேன் கல்மடமும்திருப்பதியும்கடலதிலே அங்கிருக்க எப்படியும் நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே ஒருசாம நேரத்திலே ஊழியென்றகாற்றுவரும் மற்புடைய பிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான் எப்படியும் கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன் கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும் புத்திசொன்னேன் கேளாதபேர்களுக்கு நானென்செய்வேனப்பா மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன் அப்படியே குடித்தவருக்க ஆண்டிவந்துகுடியிருப்பேன் தெத்தெடுத்த பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெடுத்தேன் விருதுகொடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான் என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய் அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை உருகச்சுட்ட பணியாரம் அவலுருண்டை கேட்கவில்லை கருகச்சுட்டமுறுக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ என்னையொன்று சொல்லாதே இறையவனும் அறியலையோ வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்திசொன்னேன்நான் ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான் பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க பஞ்சவரே நீங்களொரு பலங்கள் செய்யாதிருங்கோ வந்திருந்து வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன் குட்டம்குறைநோவுகொடியதீனம் தீர்த்துவிட்டேன் கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன் தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில் வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன் எத்தனையோ வெகுநாளாயிருந்துபுத்திசொன்னேன் அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான் செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா தெப்பக்குள மிங்குமுண்டு திருமால் கற்பிச்சியிருக்க பிராமண வேசம்போட பத்தன்மாரே நீங்களுண்டு பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும் கடுக்கண்திருக் காணியில்லை கலியுகத்தில் வேலையில்லை பொன்னரும்பு வேலைசெய்யப் பூமியில்தட் டானுமில்லை பொன்னரிய கன்னிபெற்ற பிள்ளைகள் வந்ததுண்டால் குறுணிப்பொன்னிடுவதற்கு கொடுத்வைத்திருக்குதப்பா தூங்குமஞ்ச மேடையுண்டு சுகங்கொடுக்க நானிருக்கிறேன் பட்டமரசாளக் கோடிமக்களுண்டு பாவனையாய் நான் கொடுப்பேன் எல்லார்க்கு மொருப்போல ஈசன்நான் யிருக்கிறேன் சொற்பெரிய ராச்சியத்தில் சீமைகட்டி ஆளலாமே குதிரைகட்ட லாயமுண்டு கோடிச்சீமைகட்டலாமே அதிகமுள்ள ராச்சியத்தில் அமுதேற்றுக்கொள்ளலாமே கண்ணாடி பார்த்தப்பட்டு கடிய துகியில் ஆடையுண்டு குளிர்கால ஓட்டமுண்டு கொடிவிருதுக் கட்டுமுண்டு தாசியாட்டமுண்டு சான்றோர்பார்க்கத் தம்பிரான்கற்பித்தேன் ஆனைமேல் ஏறிநீங்கள் அற்றகுற்றம் பார்ப்பதுண்டு சீதனம் விட்டுத்தாறேன் தெய்வேந்திரன் அங்குண்டு கலியுகத்தில் வேலையில்லை கண்மணியே உங்களுக்கு ஆலங்காய்நெல்விளையும் அரிசிசிறு தானியமுண்டு அமுதேற்றங்கொள்ளாலேமே ஆசாரம் அங்கேயுண்டு கோவங்காய் பாகற்காய் கொழுந்துவரை அங்கேயுண்டு சத்தியவாக்காய்ச்சொல்லுகிறேன் தம்பிரான்கற்பனையாய் தலைவாசலானதிலே தலைதூக்கி மயிர்பிடித்து கற்புடையராசன்வந்து கண்ணாடிவைத்துப் பார்த்தான் என்பேரில்குற்றமில்லை இழுத்துப்புதைக்க பிள்ளையில்லை அப்படியேபிள்ளைகளே அணைத்தார் மால்கோட்டையிலே இரண்டாம்முடிதரிக்க நீராவிக்கரைகளுண்டு சங்குசக்கரமுண்டு தம்பிமாரே உங்களுக்குக் கன்னிலேவந்திருந்து மேல்நோக்க நாமந்தருவேன் சித்திரத்தாலதிகமுள்ள தோழருமங்கேவுண்டு பஞ்சவரேஉங்களுக்கு வஞ்சகமாய் சொல்லவில்லை மாயவலைக்குள்ளிருந்து நடுஞாயம் தீர்த்துவாறேன் திட்டித்தநாள்முதலாய்ச் சிலகாலம் தவசிபண்ணி பால்காவடி வேண்டாமென்று பண்டார மிங்குவந்தேன் ஒன்றுநான்கேட்கவில்லை உனக்குத்தெரியும்தாயே சின்னம்சிறு மதலையாகத் தோப்பதிலே தவசிருந்தேன் பிச்சிப்பூ அச்சுமாலை பொரியவல் கேட்கவில்லை நல்லெண்ணைக்கு பிண்ணாக்கு ராசாவும் கேட்கவில்லை தெய்வகன்னி பெற்றபிள்ளை செடிதோறும் அலைகிறாரே பேய்எச்சி தின்றுஅவர் பேய்போல் அலைகிறாரே நானானேன் தானானேன்தந்தேநன்னம் தந்தேநன்னம் நாகம்போலே உள்ளபேயை நல்லதீயாலெரித்தேன் மந்திரத்தை மாற்றிவைத்தேன் மாறானதைச் சாபமிட்டேன் கருத்துள்ள ஈசுவரியேக் கண்டுகொண்டு பார்க்கவேணும் கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கலையோ கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள் பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களோ குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளைகட்கு பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்ற மக்கள் வற்றிய குளத்துக்குள்ளே முத்துக் கெண்டை பிடிக்க பிள்ளையில்லை அம்மா அம்மா தாய்க்கிழவி அதிகமுள்ள பிள்ளையுண்டு நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன் காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான் நட்டமா நான்இட்டவேலிநாள்தோறும் வாழ்ந்திருக்கும் பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான் நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே வாசமுடைய பெருங்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன் ஊற்றால்தான்போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன் பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே செடிகலைத்து வேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன் அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன் இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தன்மாரே கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்கதப்பா ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு நான்பெற்ற பிள்ளைதான் ஆலிலைபோல் வாடுதப்பா பொல்லாதபாவிகள்தான் துயரப்படுகிறார் கண்மணியே ராசாவே கலியழிக்க வாருமப்பா வலிமையில்லை பெலனுமில்லை வரிசையுள்ள பிள்ளைகட்கு அய்யோ தாயாரே ஒளவயாரே கிழவியம்மா கஞ்சனை அறுப்பதற்கு கனவரிசை கொண்டுவந்தேன் முத்தலத்தோர்கூடியிருந்து தெப்பகுளம்காட்டுவேன்நான் பொன்மலைஆளலாமே முத்துப்பதித்த வைகுண்டம் அங்கேயுண்டு ஊசிகள்தான் போட்டப்பவளக் கோட்டை அங்கேயுண்டு எப்படியும்கற்பனையால் இங்கேவந் தெடுக்கலாம் உருள்வண்டி போட்டதேரும் வெண்சாமரை வீசலாமே முத்துப்பதித்தத்தேரும் பவளத்தால்சாவடியும் மண்டபமும் கல்பதித்தவிளக்குகளும் கண்ணடங்கா செல்வமுண்டு நடனமாடுமுசாலையெலாம் நல்லதெய்வார் கூட்டமப்பா தங்கக்குதிரையுண்டுதர்மராசர் அரசாட்சிக்கொடிகள்கட்டி பால்கொடுத்து தாராட்டி பஞ்சணைமேல் கிடத்திடுவான் பஞ்சணை மெத்தையில் படுத்துறங்கும் நாளாச்சு காலுக்கு வீரகண்டை கைரண்டுக்கும் தங்கமுண்டு குகையாள பிறந்தவளே யென்குழந்தாய் எழுந்திருடா அதிகமுள்ள நீசனும்தான் மற்பிடித்து அடிக்கிறானே படைபெடுக்க வாமகனே மானமறுக்கம் பொறுக்கலையோ மண்டைமயிர் பறியசுமந்து ஒருகாசு கொண்டுவந்தான் வாடாப்பயலேயென்று ஒருகாசும் பறித்துக்கொண்டான் இந்தராசன் சீமையாள வந்துபிறந்தீர்களோ வைகுண்டப்பதியான மக்கள் பிறந்தீர்களோ கூட்டோடேதாயெழுப்பி கோகுலமே தாயாரே வேலாயுதம் எடுத்து வேடமகன் அளுகிறான் கலியுகத்தை முடிப்பதற்குக் காரணமாய்தவசியிருந்தேன் கண்ணிரண்டும் இரத்தமாகக் காச்சல்வந்து பிடிக்குதப்பா கட்டுவேன்நான்சுருட்டி காட்டித்தாறேன் கண்மணியே தாலாட்டி பால்கொடுக்கத் தாயாரும்வாறேன்நான் பாலருகில் திருச்சம்பதி பண்டாரம் அங்கிருந்து சோதிடங்கள் சொல்வதற்கு தொடர்ந்துவந்தேன் கண்மணியே ஊமைபோல் தானிருந்து உருண்டோடிப் போறானே வெகுநாளாய்ப் பார்த்திருந்து மேற்பருவம் இங்குவந்தேன் அய்யய்யோ பஞ்சவர்தான் ஆவலாதி வைக்கிறாரே கயிலைக்கு வடபுறத்தில் கனத்ததிட்டுப் பாறையிலே ஓமக்குழி வளருதப்பா உங்களுக்காய்த் தவசிருந்தேன். தீயராகப் போகவேண்டாம் தீயதிலே யிறங்கவேண்டாம் கூட்டோடே கைலாசம் உங்களுக்கு காத்துவைத்தேன் நின்றால் குடித்தால் தூக்கம்வைக்க நீதியில்லை தென்னமரம்புன்னைநிழல் தெளிந்திருக்க நீதியில்லை கண்மணிராசாவே காருமிந்த பிள்ளைகளை அதிகமுள்ள தெய்வகன்னிமக்களை ஆராய்ந்தெடுநீ தென்னம்காவுள் சிலஓலை அறியச்சொன்னாள் தும்பெடுத்து ஆயாமல்சுமந்து கொண்டுபோகச்சொன்னாள் அத்தனைக்கும் போட்டவனை அடித்தானே ஆனைகாலோடே ஐவராசன் சீமைதன்னை தாருமென்று அவன் கேட்டான் கொஞ்சநாள்கூலிக்காக காருமென்று நான்கொடுத்தேன் நான்கொடுத்து நாட்டையவன்நாள்தோறும் அண்டிருந்தான் கருக்கிளனீர் வெட்டச்கொன்னான்கண்மணியேசுமக்கச்சொன்னான் கொண்டங்கே போட்டாலும் கூடதிலே அடைக்கச்சொன்னான் அழுதுமுறையிட்டேன் ஆனாலும் கேட்கவில்லை பாக்குவெற்றிலை கொண்டுவா பயலே உன்னைவிடுவேன் தம்பிபடும் பாட்டைத் தாயாரே பார்க்கலையோ கம்புகொண்டுதானளந்து கண்மணியே வெட்டச்சொன்னான் பறிக்கநான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள் உடலழிந்து விழுகுதடா ஊட்டோடே வேகுதடா கூட்டோடே வேகுதடா குருநீதி ஆற்றலாலே பொறுதியென்ற தீயாலே பூலோகம் அழிக்கிறேனடா பதினெட்டு துர்க்கையாலே பாரழுகு லோகமெல்லாம் வடகடலும் அழிக்கிறதே வானம் இடியுதடா பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா சுழல்காற்று வருகுதப்பா தேசம்விட்டு ஜனம் ஓடுதடா மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன் அப்புவியை அரசாளவரும்போது சம்பூர்ணத் தேவரைத்தானெழுப்ப அய்யாவும் உம்பர்த்னைவைத்த வையகத்தில் வரும்போது அன்பான மக்கள்தனை அருள்புரிந்து அய்யாவும் மாரிபொழியவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும் தரணியில்வந்து தய்வுசெய்து என்ன சொல்வார் வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும் கோட்டாறுஅங்கே கொள்ளையினாலழீப்போம் சுசீந்திரம் அறுபடைத்து சுத்தகதி ஆகுதங்கே ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குவர தாமரைகுளம்பதியும்தண்ணீராய் போகுமங்கே கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து கன்னிபெற்ற பிள்ளையேழும் கருத்தாகவேகூடி அய்யா குரபரநா றாயணமுனியும் தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார் ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும் வடக்குவாசல் துலங்குகாண் அம்பலமும் அம்பலத்தில் நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா
நடுத்தீர்வை உலா
பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை கேட்கிறநாள் நேசமுடன் சீசரக்குச் சொன்னகுறி நேமமுடன் புத்தியுள்ளமானிடர்கள் பொங்கமுதுடன்கேட்க பந்தமுள்ள எம்பிரான் பாதமதுகாப்போம் ஆதியிலேயீசுரர்தான் அம்புவியெல்லாமெரிக்க நீதியுடன்நேராகச்செத்தசனத்தையெல்லாம் சீக்கிரத்திலேயெழுப்பிநற் சொல்வாய் ஞாயவழி காட்டி குற்றமுள்ளபாவிகட்குக் கூர்நாகங்கொடுத்து மெத்தமிகச்சபித்து பேயாலேதான் வதைத்து தள்ளிவிட்டு நல்லோருக்கமோட்சம் கொடுக்கவள்ளலுடன் நாரணர்தான் வந்தவகை விள்ளுகிறேன்கேள் பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து மூன்று நாளாயிருந்த தெழும்பிப்பூவுலகில் வந்தவுடன் நாற்பதுநாளிருந்து ஞாயவழிகாட்டி அற்புதமாய்ச்சீசருக்கு சொன்னகுறி பொன்னுலகில் நாம்போறோம் பூவுலகோரே கேளும் மண்ணில் நடுத்தீர்க்க வாருமென்று சொன்னவுடன் சீசர், எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின் அதற்கே அரனுரைக்கும் வகையானதுநித்தம் நடக்கும் குறிகள் தன்னைநான் சொல்லுகிறேன் என்றும் அடக்கமறச் சொல்லுகிறேன் அதுகேளும் பஞ்சம்வரும்செழிக்கும் பாவத்தால்பகையாம் வஞ்சப்பெருங்காற்றால் வையகத்தில் சஞ்சலநோய் தீநரகக்காந்தல் செகத்தோர்க்குத் தான்வயிற்றில் மாநெருப்பாய்த்தங்கி வயிறுகழிந்து தீனமுடன் மாள்வார்சிலபேர்கள் மாறாமலேசிலநாள் தாழ்வாருயர்வார் தான்கெடுவார் கோள்சண்டையாலே சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே... இரத்தமிகவோடவே மண்டலத்தில்... நாடுபிழையாது நற்காலம்போயொழிக்கும் கேடுதொடுத்துலகம் கெட்டுவரும் நாடுதனில் மழைதழைத்துப்பெய்யாமல் வானம்சுருங்கிவரும் களைகள் பயிரில் கலக்கமேவிளையாது வெள்ளத்தால் பஞ்சம்வரும் வெண்சாவியாகி விடும் பள்ளத்தாலும்நெற்பயிர் நடுங்கும் சனங்களுற்ற பட்டணங்கள்தோறும் பசிநோய் அதிகமதாய் வட்டிஅநியாயம் வாங்கிடுவார்தட்டழிந்து பிள்ளையுடன் கொண்டபெண்ணைப் பேறாகவிற்றிடுவார் தெள்ளிமையாய் கள்ளச்சிறைகள் வைப்பார் வள்ளவிலாச் சூதுவிளையும் கடுஞ்சொல்களவும் பொய்பெருத்து மாதருள்மேல் மோகமுற்று வாடுவார் நீதமுள்ள ஞானங்கள்தப்பிவரும் நாய்போல்சினந்திடுவார் ஊனக்கொலைபுரிவார் ஓயாமல்தீனதிய திருட்டுப்பெருத்துவரும் சீமையெல்லாம் புரட்டுமுரட்டாகப் பேசிடுவார் மருட்டியேஎன்தன் பணத்தை யிப்போது தாவென்றுசொல்லி சிந்தை கலங்கிடவேசெப்பிடுவார் நந்தலுறம் பொய்யாணைவிட்டிடு வார் பொய்ச் சத்தியமே பெருகும் மெய்யோனைத்தேடாமல் விட்டிடுவார் வையகத்தில் ராஜனவன்கைக்கூலி நடத்தியே வாங்கிடுவான் பேசிடுவான் ஞாயப் பிழையாக ஆசையுள்ள அண்ணனுக்கு தம்பிபகை அன்யைர்க்குப் பிள்ளைபகை கன்னி பெண்களும்பகையாம் பண்ணிரியாமி மருமகளுக்கு மாற்றானாய் மாறாமல்பூமிதனில் மாமிதன்மேல் போர்ப்பகையாம் கூராண்மை அறிவு மயக்கமாய் அண்ணனுடன் தங்கமுறைமை தம்பிச்செல்லுவார் முழுதுமேதரைதனிலே தாயுமகனும் சரசமிகப்பெருகி ஞாயவழிப்பாராமல் நத்தியேநேசமுடன் சிற்றின்பம் செய்திடுவார் சீமையெல்லாம் மயங்கி அத்தனையும் தேடார்கள் அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள் மோகம் பெருகிக்கண்ட கணவன்மேல் மோகக்கலவி செய்வார் திண்டுமுண்டாய் பாவமெனத்தோன்றாமல் பாருலகமெல்லாம் அதிகக்கோபமுடன் பொய்யாற்கொலைகள் செய்வார் பாவமதாய் முன்னாலே பெண்ரூபம் முக்கோணமாய்ப் பிறக்கும் பின்னாலே ஆண்போல பிறந்துவிடும் முன்னாலே ஆண்பிள்ளைபெண்பிள்ளைகள்போல அரையின்கீழ் பிறக்கும் ஆண்பிள்ளைமீசை பெண்ணுக்கு ஆகிவிடும் மட்டிகளாய் நாணுவார் நஞ்சுதின்பார் நாக்கைப்பிடுங்கிடவார் சீனமுடன்சா கிணற்றிலே நாணமுடன் ஆற்றிலேமடிவாரும் அக்கினியில் மாள்வாரும் தாழ்மையாய் குத்திமிகச் சாவாரும் தேற்றமாய் வெட்டிக்கொண்டோ சாவாரும் முகடராய் நாட்டமுடன் பூலோகமெல்லாம் பிழையான துன்பத்தால் மாலோகச் சக்கரத்தால்மடிவார்கள் பூலோகம்விசிறும் பனியாலும் வீசக்காற்றாலும் வெயிலினாலும் சீறுமிருகமதால் செத்திடுவாய் வீறுகெட்டு நாளுக்குநாளாய் நடக்கவழிகுறுகும், சேவிக்குமே வானம்திசைமாறும் கூலிக்கும்பார்க்கும் பாழ்நரகில் ஏறுஅக்கினியால் நாள்தோறும் பூமிநடுக்கமுண்டாம் வாழ்வோருக்கும் மேல்புறத்து நஞ்சைவிளையும் அதற்குக் கீழ்புறத்து நஞ்சைவிளையாது மேல்மழைகள் தான்கூடி மரத்துக்கொப்பு நனைத்துவிடும் நாடி ஒருகொப்பு னையாது மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிண்டு மூன்றுவரும் கோஎன்று பெட்டைக்கூவிவிடும் நீசரால் வெள்ளத்தினால் சிலவூர்வேகுமே பள்ளமதாய் தாழுமேசிலவூர் சமுத்திரம்வந்தே பெருகும்மாளும் சிலவூர்மகிழ்ச்சியுடன் ஆளறிய அக்கினியாலே அழியும் சிலவூர்கள் இக்குடனேமண்மாரி பெய்துவிடும் நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும் வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல் பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில் மண்ணாலும் நித்தம்மடிவார் முன்னோர்கள் உண்டுபண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல் கண்டதெல்லாம் தெய்வமெனக்கை யெடுப்பார் சண்டாளர் குட்டியழித்திடுவார் கொல்லுவார் கொண்டவனை மட்டியவர் தாயைமகன் கொல்லுவான் கெட்டுவிழ நெஞ்சுடனே பேயால் நாடும் மருந்தாலே துஞ்சிவிடும்மாற பில்லிசூனியத்தால் அஞ்சாமல் கொன்றிடுவார் பாவமதாய் கூர்மையுடன் ராமல் பன்னி உருக்காட்டி பலியாகும் நன்றிகெட்டு தீவைப்பார் பகையால் தீங்கான நோய்பெருகும் பான்மை வையகம்பாழாகும் ஏவல்செய்ய சின்னபிள்ளைகள் சிற்றின்பம் செய்திடுமே மண்ணில் சடைவாக வார்த்தை சொல்லும் பின்னும் மந்தப்பாவம் பிணிகருத்தாய் பாலருகில் மானிடர்க்கு காவலுருப் புண்ணியங் கசப்பாகும் மேவரிய ஒருத்தனுடன் ஒப்பத்தெட்டு பேர்கள் திருத்தமறவே திரிவார் தேசமதில் வருத்தமாய் தேடிநித்தம் குருதாய் தகப்பன் கூறுமொழிகேளார் திருத்தமுடனே சிவத்தைத் தேடார்கள் கருத்துடனே பிச்சையது போடாமல் பேய்க்குக் கொடுத்திடுவார் அச்சமுடன் தெண்டமதற்கிடுவார் வஞ்சமறநாடு வுயர்ந்துவரும் நாள்தோறும் பூமியெல்லாம் காடுந்தணிந்துவரும் கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம் வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றிவரும் மேல்மேலும் வெள்ளமது பெருகும் மேகத்திலே இருந்து மீனும்விழும் மழையிலே மேகமதாய் வில்லும் வெவ்வேறாகிவிடும் ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி குன்றிவிடும் தாக்குப் பொறுக்காது ஜனங்களுக்கு ஆயுள்தான்குறையும் காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசாயிருக்கிறான் மாமன்நானிருக்க மனம்போல் நடத்துகிறான் அவன்பட்டம் பறித்திடுவேன் கொட்டிக் கலைத்திடுவேன் நாரணனும் முற்றிற்று
பஞ்சதேவர் உற்பத்தி
காப்பு விருத்தம் சீரணிகொன்றை சூடும் சிவனுடைய பாதம்போற்றி நாரணர் மனுப்போலிந்த நகர்க்கலியுகத்தில் வந்து போரணிமனுக்கள் யாவும் பேணியோர் தலத்துள்ளாகி காரணமகிமை காட்டிக் கருத்துள்ளம் தற்காத்தாரன்றே பொறுதியாய்த் தர்மநீதி புலனுள்ள மனுக்கள்யாவும் நன்மையாய்காத்தென்னாளும் நமதுசொற்படி போல்வாழ தின்மைகள் பலதும்செய்யும் திருடரைக் கருவாய் செய்ய செ ம்மையாய் நமக்குள்ளைந்து சீவாயி வேண்டுமென்றார் என்றவர்நினைத்தபோது ஈஸ்வரனார் மகிழ்ந்துமுன்னாள் தண்டமிழ்ப் பதத்தாலிந்த தாட்டிக வீரரான மன்றமிழ் சுடலைநாதன் மாநிலம் காத்தவீரன் என்றிவர்முதலாய் ஐந்துவீரர்கள்இசைவால்வந்தார் வந்திடும் பேரைக்கண்டு மாயவர் மனதுள்மெச்சி புந்தியில் மகிழ்ச்சி கூர்ந்து புதுவரம் அவர்க்க ஈந்து மந்திரித்தலைவா யெந்தன் மக்களே பரிசையேந்தும் தந்திரத் தோழன்மாரே சாற்றுவழி கேளென்றார் மொழியிது வென்று நாமம்உலகினில் மறவார்நம்மை தெளிவுடன்பார்த்தேன் நாளும்திறமாய்க் காக்கவேணும் பழிகொலை களவுபேயாட்டம் பழநீசக்குலங்கள் தன்னை குளிர்சுளிர் நோயைத்தாக்கி கொன்றிடு உலகில்தானே வேறு சிவனே சிவஞானத் தேசிகனே தேவர் தேவர்க்கும் தாயகமே தவமே தவஞான தவக்கொழுந்தே சர்வதயாபர சங்கரனே சங்கம் நிறைந்தருள்தற்பரனே தமியேன் உனதுட வருளாலிந்த மங்கைபதிநாட்டில் தாமரையூர் வளரும் தவம்செய்யும் மாயன் கைக்குள் ஏவல் சீவாயிமாரெனவும் ஏகனருள் கொண்ட ஒழுங்குடனே காவல்காரராய் வரங்கள் வேண்டிக் கருடரெனப்போர் தழைக்தோங்க மூவுலோகம் தளைத்தோங்க முதலோன் மகவெனகீர்த்திபெற்ற காவபுகழ்கொண்ட கருடராசன் கதைப்பாடத் திருமால் காப்பாம் அண்ணன் தம்பியோடைந்து பேரும் அருளால் சிவவேடமுந்தரித்து ஒண்ணு போலொரு சொல்லதுவாய் உடைய அன்பவரைத் திறமாய்க்காக்க வண்டத்தனம் பேசும்வன்பர்களே வாணன் வதைத்திந்த கலியுகத்தில் கொண்டே யிருட்கலி தனையறுத்து கூண்டபதிக்கோட்டைக் கொத்தளமும் துலங்கா பதிகளும் துலங்கவைத்துத் தோணும் சிவாலயம் காத்தாண்டு பெருமைமிகு ஆடை பால்பழமும் பெரிய மணிமேடை அம்பலமும் நன்மை பலதான வரிசையுடன் நாரணர் சட்டம் மீறாமலே ஒழுங்காய் உலகினில் ஒருசொல்லாக உண்மை பலசெய்தாரதை முழுதும் காவியமாய் படிப்வர்க்கு முதலோன் அருள்தந்து முன்நிற்கவே கருடரெனும் வீரர் கருடராசன் கடியகமண்டல சிமளராசன் துட்டரெனும்வீரர் தேர்த்தகனும் குட்டிவீரனும் தேர்க்குடையோன் அன்பர்க்கனுகூல மாவீரன் அஞ்சுபேர்க்கதை அன்பாய்கூற வாராபிழையொன்றும் வாராமலே வாயில்வந்திங்கே வகுத்துரைப்பார் சீராய்ச் சரவணம் மேல்துயிலும் செந்தில் வேற்குரு கந்தப்பரே கந்தக்கருங்குால் தெய்வமாது கன்னி யீஸ்வரி சரசுவதியே சிந்தை மகிழ்ந்திருந்த செந்தமிழுக்கு தெய்வமடவாரும் காப்பாமே விருத்தம் ஆதியாம் கடவுளான அச்சுதன்பச்சைமாலும் சாதிகள் தமக்குவேண்டிச் சந்தனச் செந்தூர்தன்னில் வாரிமயில்மனுவாய்த்தோன்றி வளர்கன்னி நகரில்மாயன் நீதியைமனதிலெண்ணி நெடியவன் வருகவென்றே வருகிறபோதே மாயன்மனமது மகிழ்ந்துகொண்டு கருதியேயீசர் தம்மைக்கட்டுடன் வணங்கிச்செல்வார் சுருதியாய் நமதுகைக்குள் சீவாயியேவலாக பருதிபோல் ஐந்துவீரர்படைத்துநீர் அனுப்புமென்றார் அனுப்புமென்றிந்த மாலுரைகேட்க ஐயன் மெத்த மனம்மகிழ்ந்து என்னமாய்ச் செய்து அனுப்பமாலோனே நீகேட்ட சட்டமாயிக வீரர்கள் யாரென்ன சன்னபின்னம் போலுள்ள வீரர்கள் தர்மபுரி நன்மைக்குமாதே என்னமாயிது நான்செய்வதெப்படி என்றுயென்மனம் யெண்ணுதே மாலோனே ஆடுகோழி யிலைப்பட்டை தீபங்கள் ஆகாதென்றல்லோ ஆகமம் பூரித்தீர் நாடுமட்டும் அடக்கி உண்டிடும் நல்லவீரர்கள் சம்மதிப்பார்களோ கடியசேவகன் கயிலையில் பையனும் அக்கினியேறி மாயப்பலவேசம் அத்திவாக்கனும் காத்தவராயனும் அந்துபேருமே தீர்க்கமுள்ளவர் தீர்க்கமுள்ளவர்கள் ஐந்துபேர்கள்தான் தேசத்திலும்பல வேசங்கள்கொண்டவர் கோலமாம்பல தூலங்கள் கற்றவர் சொல்லும்மாயங்கள் யிங்கவர் கண்டிடும் மார்க்கமாகவே நாலுவேதத்திலும் மாறாட்டியே வெகுபூசையுண்டவர் பன்றிகோழி பலிபல தானதும் பார்த்துச்செய்வோரை காத்துக்கொள்ளுவார் அன்றிநித்தம் அவரை தொழாது அதட்டுவோரை உருட்டியே கொல்லுவார் மூடும்கண்கள் விழிப்பதற்குள்ளாக உலகம்ஈரேழும் உலாவித்திரிபவர் வாசமான வடவா முகத்திலே வன்னிசெந்தழல் ஆவிகுளிப்பவர் தேசமெங்கு மவரல்லால் வேறில்லை கொல்லும் வரிசைக்க வாள்வல்லவர் வேசமானால் பலது கொண்டாடுவார் வெற்றிவீரர் வெகுபுத்திக் காரராம் ஆனதாலவர் அருகில்வந்தாக்கால் அட்டதுட்டிக்கு இடமல்லோ ஆக்குவார் ஈனம்சற்றும் இரக்கம் கிடையாது ஏற்றமாலோனே யோதுதான்சொல்கிறீர் ஆகுமோ அந்த பேர்களமக்கென்றார் ஐந்துபேரையுமிங்கே அழைக்கிறேன் பாகுசெநரிந்தஈசர்உரைத்திட பண்டுமாலும் பகுத்துரை செய்வார் நல்லமாமறை மைத்துணரானவர் நாட்டிலிப்படி கோட்டிகளாக்கிடில் செல்வமாகிய தெச்சணம் மீதினில் சென்றுநான்தவன் செய்துநிறைவேற்றி அன்பரானமனுக்கள் தெரிந்துநான் அரசேயாள வரம்பெற்றதெப்படி இந்தமாஞாலா பேர்களிருந்தக்கால் எந்தஞாயமாய் நான்தவம் செய்குவேன் சீமையெங்கும் அநியாயம் கண்டதால் சொல்லுமுபாயம் இறைகூடி கண்டமும் வன்மையாக நிறுத்தியே தர்மமாய் மக்கள்தன்னையும் வைத்தாள வென்றுதான் பேய்கள் செய்யும் கொடுமை அகற்றியே பலிகள் தீபெஒலிகளடக்கியே ஞாயமாக நான் சீமையாளவும் நாரணர்சுவாமி வைகுண்டமாகவும் தேசமாகிய தெச்சணமீதினில் செல்வச் சான்றோரிடமே பிறந்துநான் வாசமானபுமை நடத்தவே மாயனேமிதம் கொண்டிருக்கவே திட்டமாயிந்ததுட்டவீரரின் செய்திகேட்ட சிணப்பொழுதன் வட்டமாகிய நெஞ்சம் குளிருதுமனம் வாழ்கயிலைக் கதியதியாக சூழஇந்தத் துடிவீரர் தங்களை சூச்சமாகச் சுருக்காய் அழைத்துநீர் முன்னிருந்த வரத்தின் முறைமையை உபாயமாக அடக்கி மறுவரம் பின்னும் தங்கப் பிறவியாக்கிப் பேரும்மாற்றி புதுவர மீந்துநீர் எந்தனோடு இதமா அனுப்பினால் ஏற்றகாரியம் பார்த்து முடிப்பேன்நான் சிந்தையது செய்யாதே பானாக்கால் தெச்சனாபுரி சென்றேறப் போகாது என்று மாயோனிதுவுரை கூறிட இருந்தபேர்களும் உள்ளதென் றார்களே விருத்தம் ஆயணர் உரைத்தபோது அரனுமே மனதுமெச்சி உபாயமாய் வீரர்தம்மை வரவழைத் திங்கேகொண்டு ஞாயமாய்ப் பிறவிசெய்து நாரணர் கைக்குள்ளாகக் நோயமாய் மனதிலலெண்ணி நினைத்தனர் ஈசர்தானும் நடை அட்டதிசையெங்கும் கீர்த்திபெற்ற அஞ்சுபேரையும் இங்கழைக்க அருமையாக இங்கழைத்து உரிமையாக இப்போது மெட்டித்தனமாக முன்னீந்த வரம் வேண்டி மேலுந் தர்மாரிக்கு ஏற்றவிடை ஈயவென்று மாலுரைத்தமொழி தவறாவண்ணம் செய்யவென்று மனமகிழ்ந்து தானும்வெகு உபாயம் எடுத்தார். மேலும், கந்தசாமி யவர்க்கு மாசியெட்டாந்திருநாள் மேனமைதனைப் பார்ப்பதற்கு நாமும் போவென்றே போகவேணுமென்றுசொல்லி பொக்கணங்களிட்டு பெரியபுலித் தோலுடனே வரிவேலை யுமெடுத்தார் கையில் மழுசூலம் கப்பறைகளேந்தி கண்டந்தனில் பண்டமாலை கொண்டுபூண்டு சென்றார் மெய்யில் வெண்ணீறணித்து உத்தராட்சம்பூண்டு மேன்மைபொற்கரத்தில் செம்புமுந்திரிதூக்கி தாவடமும்மேவிடத்தில் தாவண்ட சங்காரன் சண்முகம் திருநாள்வேளைதன்னில் போவென்றே கோவிடத்தில் வாழுகின்ற குருவசிட்டரானார் கூண்டபல தேவர்களும் கொடியாகச்சூழ பூவுலகில் உள்ளதேவர் போதவந்துசூழ் பேய்பிடாரி பூதகணம் புட்டாரக்காளி நாவுலகில் உள்ளதே நான்முகனும்சூழ நாட்டில்வரம்பெற்ற வெகுதாட்டிமையோர் ஏவல்பெரியோர் களெல்லாம் யீசுரரைப்போற்ற ரிடபவாகனமேறி யீசர்சென்றாரங்கே செல்லும்வேளை கந்தனுக்கு தீபரணைகாட்டி தேருவடந்தனைப்பிடித்துத் தெருவீதிவந்தார் வந்ததேர் உச்சிதனில் மாயனிருந்தாண்டார் மகாமேரு போறைந்து வாசமாக்கொண்டார் எந்தபேரும் வந்திழுத்து சந்துபொந்துபோக எட்டுதிசைதோறும் கிடாய்வெட்டிப் பலியிட்டார் இட்டகிடா ரெத்தமெல்லாம் துட்டவீரருண்டு இனும்போதாதென்றுபலி பின்னுங்கொள்ளைகொண்டார் மட்டடங்கா கயிலைபையன் மாயன்மகாலிங்கம் வாழும் பலவேசக் கயிலாசவீரனோடு சட்டமாக இட்டபலி உண்டுத்தேரைத்தொட்டு தங்களாலே ஆகாதென்று சங்கடங்கள் கொண்டார் வட்டமிட்டவீரருட பொட்டுமிகப்போச்சு வாரமுள்ளவீரமெல்லாம் சொரம்போச்சுதங்கே என்னகேடு ஆச்சுதென்று யேங்கி அஞ்சுபேரும் ஏழையான பத்திரமாகாளியிடம் சொல்வோம் பொன்னழகி எங்களையும் பெற்றவளேயம்மா புட்டாரநாயகியே கட்டழியம்மா இத்தனைநாள் யெங்களாலே யோலாதொன்றுமில்லை ஏழுகடல்தாண்டி யுலகாண்டிருந்தோம் அம்மா முத்திபெறும் அக்கினித்தூண்முழுவதும் கையிலெடுத்தோம் மூன்றுலோகம் சுற்றிபின்னும் மீண்டுகொண்டு வந்தோம் வெள்ளிக்கயிலாசம் சுற்றிவீதியிட்டுவந்தோம் மேலுங்கீழும் நாங்கள் சென்று விளையாடித்திரிவோம் வெள்ளிமலை மீதிலுறை அரசனுடையமகளே அஞ்சிரண்டு மாசத்திலே பிஞ்சியீரல் உண்டோம் மாடனருள் அண்ணாவி மாமலையில்சென்று மாய்மாலமாய்மாய மந்திரத்தைப் பொய்த்தோம் சுட்டுசுருக்கான பலதுட்டமா கணத்தை கண்ணில்காணாமலரைக் காற்றாய் பறக்க வைத்தோம் பூமிகயிலாசம்வரை எங்கள் பேரல்லால் பின்னுமொரு துட்டவீரர் கண்ணில்காணோமம்மா மாயனுக்கும் ஆயனுக்கும் மாமறைக்கும் தாங்கள் மற்றும்பல தேவதைக்கும் யேற்றுக்கொண்டோம் அம்மா பேய்கள்பல பேர்களுக்கும் பெருமாளாக வாழ்ந்தோம் பேருலகில் சொல்லாமல் பேர்மாறி நிற்போம் அம்மாவுந்தனக்கு நாங்கள் அடிமையானதல்லால் ஆருமெங்கள் தனைவெல்லும் பேர்களில்லை அம்மா இப்படியே பெருவரங்கள் ஈசரன்று தந்தார் என்னமாயமோ வறியோம் இப்போவந்த கூத்து தப்பாமல் வந்தெமக்குத் தற்காக்கவேணும் சந்தனந்தான் தேர்நின்று தெந்தனங்களோடும் தெருவோட்டி வைப்பதற்குச் சீர்செய்யவேணும் தேன்மொழியே பத்திரமா காளியெனத்தொழுதார் விருத்தம் கொழுததோர் வீரர்தம்மைத் தோகை மாகாளிபார்த்து பாழாகும் இந்தசீமைப் பாதகக் கொடுமையாலே அழியவும்நாள்வந்தாச்சு அண்ணரும் பிறந்துமாச்சு வழியதேய்தற்கு யானும்வகுத்துரை செய்யவேனென்றாள் காலமும்கடைநாள் ஆச்சுக்கலியுகம் அழியப்போகு ஏலவேகொடுத்ததெல்லா மித்துடன் பிறக்கலாச்சு மாலவன் தவசதாக மாசிறை யிருக்கலாச்சு ஞாலமேயிதற்கு வேறுநானென்ன செய்வேனென்றாள் நடை கட்டுடனே உங்களுக்குக் காரணங்களின்னதென்று காரியமாய் சொல்லுகின்றேன் கேளீர் மட்டடங்கா கலிவந்து பிறந்ததன்றுமுதல் மான வரம்பில்லை யப்பாகண்டீர் ஈனமுள்ளதேவருக்கும் ஈசர்பிறமாதனக்கும் ஏற்கநடப்பொன்றில்லை கண்டீர் மானமுறை நீதியில்லை வழக்குசாயலுடனே வம்புசெய்யும் பேர்கள் தினம் கூட்டம் ஐயமிறைக்கூலி தெண்டம் அட்டிஅநியாயம் மெத்த ஆண்டிகளைத் தீண்டி வேலைகொள்வார் மானமாகவாழும் எளியோர்கள் சொத்தையெல்லாம் வாரிவம்பர் சேரக்கைக் கொள்ளை கொள்வார் ஏழைமதியாகப் பேசும் இல்லாதெளியோரை எங்கேயென்று தேடி அடிப்பாரே இப்படி கலியிருக்கு தானதால் யென்னால் என்ன ஆகுங்கண்டீர் வைகுண்டரிடம் போங்கோ வலதுபக்கம் வாழ்வீர்கள் விருத்தம் எட்டெட்டு அறுபத்தி னாலுவைகுண்டமாச்சு பட்டுபட்டுழன்று கலிதன்னால்சாகும் மட்டுப்படமூன்று பத்திரண்டு அதுவும் திராசியாச்சே கட்டடங்காப் பதினாறும் அவர்க்குள்ளே ஆச்சு