நீதம் என்பது நியதி, நீதி, நெறி, சட்டம், தீர்வை என்ற அங்கங்கள் உடையதாகும். அகிலம் மூன்று நீதங்களைக் குறித்தும், அதற்கு அடிப்படையான தர்ம நீதம் குறித்தும் விவரிக்கிறது.
ஒரு உயிர் மாயா பிரபஞ்சத்தை அதன் தர்மங்கள் வழி பரிசித்தும், அப்பரிசத்தை நிறைவாக்கும் சுற்றில் ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தில் உள்ள தனது தானத்தை அடைந்து அதுவாக உறைவது தவம்.
பிரபஞ்ச விதித் திரிபுகளை உருவாக்கும் அலைமய சுழிகள் உருவாக்குபவை தாண்டவம் ஆகும்.
மங்களகரங்கள் அனைத்தும் சோபனம் ஆகின்றன. உலகியலின் மங்களகரங்கள் அனைத்தும் சொரூப சக்தி ஏற்றங்கள் வாயிலாகவே விளக்கமாகின்றன.